கவிதை தொகுப்பு – 36 (குடைக்குள் மழை சலீம்)

மரபுக்கவிதை வித்தகர் குடைக்குள் மழை சலீம் அவர்களின் இரண்டு கவிதைகள் “காலத்தை புதுப்பிக்க” மற்றும் “இறுதி யாத்திரையில்” – marabu kavithai thoguppu

thangame kavithai

காலத்தை புதுப்பிக்க

பாதங்களை
புதுபிக்க
போகிறேன்..

பாதை
எதுவானாலும்
கடக்க..!!

நிழலை சபித்து
நேரத்தை
வீணாக்குவதை விட..

காலத்தை
புதுப்பித்து
கடந்துவிட ஆசை…!!

தோல்விகளை
பரிசளித்த
காலக்கணக்கை..
வெற்றியால்
நிரப்பும் வரை…

கனவுகளை
தள்ளிவைத்து
கட்டமைக்க போகிறேன்..!!

எனக்கான உலகம்
எளிதில் வசப்படும்
வரை…!!

~~~~~~~~~~~~

இறுதி யாத்திரையில்

நீ…
பரிசளித்த
பூக்களையெல்லாம்
சேகரித்து
வைக்கிறேன்…

என்றாவது
ஒருநாள்-என்
இறந்த உடலை
அலங்கரிக்கட்டும்…!

நீ
புரிந்து கொண்ட
நாட்களையெல்லாம்
எழுதிவைக்கிறேன்….

என்றாவது
ஒருநாள்
இறப்பின்
வாக்குமூலமாகட்டும்…!

நீ
பிரிந்து சென்ற
நாட்களையும்
எழுதிவைக்கிறேன்…

என்றாவது ஒருநாள்
காதலின்
சவப்பெட்டிக்குள்
கண்ணீராகட்டும்…!

என்றாவது
ஒருநாள்
எதிர்படத்தான்
போகிறாய்… – marabu kavithai thoguppu

அதுவரை
இறுதிஊர்வலம்
உன்னை…
கடந்து விடாமல்
இருக்கட்டும்….!!

– குடைக்குள் மழை சலீம்

You may also like...

3 Responses

  1. Priyaprabhu says:

    கவிதைகள் நன்று..

  2. சைல்ஸ் அகமது says:

    அருமை மனதை தொட்டது குடைக்குள் மழை .

  3. சைல்ஸ் அகமது says:

    அருமை மனதை தொட்டது குடைக்குள் மழை .