காதல் மழை

நான் சோகத்தில் இருக்கையில்…..
தினமும் என் உளறல்களை தூக்கிலிட்டு
கொன்று விடுகிறேன்,
அது உன் நிம்மதி தீண்டாமளிருக்க.சொல்லவந்த என் சோகங்கள் மரணிக்கும்
மூடப்பட்ட என் உதடுகளுக்கு முன்.உன்னில் உன்னை இன்பச்சிறையில்
வைக்க மட்டுமே படைக்கப் பட்டவன் நான்.

சிகரங்கள் தொடும் துன்பங்கள்,
துருவங்கள் தாண்டிய இன்பங்கள் கலந்த
இந்த திசையறியா வாழ்க்கைப் பயணத்தில்
கண்கள் இருந்தாலும் கைபிடித்து
நடக்கும் ஒரே ஜீவன் நீயே.

kaathal mazhai

கை பிடித்து நடை பழக்கிவிட்ட
தந்தைக்கு இணையாக மனதில்
எனக்கு இடம் தந்தவளே.!

உன் சோக மேகங்களை உன் வானில்
தக்க வைத்துக் கொள்ளாதே !
வானில் ஓர் பூகம்பம் வந்தால்
இந்த பூமி தாங்காது தங்கமே.

 

 – நீரோடை மகேஷ்

You may also like...