போராடு – வெற்றி அருவி உன் காலடியில்

தன்னை மறந்து  ( தோல்வி பயத்தில் )
தனிமையில் நின்று
உன் வாழ்க்கையைப் பற்றியே யோசித்து
சிலையாய்ப் போன நாட்களில்
நானிருப்பேன் என்று
உன்னிடம் ஊமையாய் இருக்கும்
நம்பிக்கை என்ற வார்த்தையின்
புலம்பல்களை கைவிடாதே !
poraadu vetri aruvi un kaaladiyil

உன்னிடம் தடைகள் இல்லாப் போராட்டத்தில்
இலக்கு மட்டுமே கேள்வியாய் !

பாதை எதுவானாலும் எடுக்கும் முடிவு
உன் கையில்.
பாதையின் தொடக்கம் உன் காலடியில்.

என் கவிதைக்கு தோள் கொடுக்கும் தோழரினமே
உங்கள் கண்களில் இரயில் பெட்டிக் கோர்வையாய்
ஓடும் என் கவி வரிகள் அர்த்தப்படுவது
உங்கள் பார்வைகளில் மட்டுமே.

உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் பாதையோர
தார் சாலையில் அமைந்த ஒரு சிறு
விளக்காகவாவது இருக்க ஆசை கொண்டு
சில சிந்தனைகளை எழுதுகிறேன்.

போராடு தோழனே….
வெற்றி அருவி திசை அமைத்து
உன் காலடியில் விழும்.

poraadu vetri aruvi un kaaladiyil thanambikai varigal

 – நீரோடை மகேஷ்

You may also like...

3 Responses

  1. தன்னம்பிக்கை வரிகள் ….

  2. Vபாதை எதுவானாலும் எடுக்கும் முடிவு
    உன் கையில்.
    பாதையின் தொடக்கம் உன் காலடியில்.

    முத்தான வரிகள் நம்பிக் கை கொடுக் கும் வரிகள்! அருமை! புலவர் சா இராமாநுசம்

  3. அருமை ! வாழ்த்துக்கள் !