கவிதை தொகுப்பு 68

இந்த கவிதை தொகுப்பின் வாயிலாக கவிஞர் சேலம் தாரா அவர்களின் கவிதைகளை அறிமுகம் செய்கிறோம் – kavithai thoguppu 68

வாழ்க்கை

வாழ்க்கையின் அர்த்தம் தெரியவில்லை
வாசல் தேடி வசந்தம் வருவது இல்லை
பூக்களின் வாசம் மாறுவது இல்லை
புன்னகையின் நேசம் புரிய வில்லை
உண்மையான அன்பு தெரியவில்லை

கடவுளின் விளையாட்டு
கரை சேர நீயே வழிகாட்டு
இடைவிடாமல் போராட முடியாது
இன்னும் எத்தனை நாள் தான் இந்த
தெருக்கூத்து

வேலை இல்லாமல் வாழ காரணம்
தெரியாது
வெளிவேஷம் போட முடியாது
பின்னால் பேசும் வார்த்தை
குறையாது
சொல்பவர் யாரும் உத்தமர்
கிடையாது

படும் அவஸ்தை என்னை தவிர
யாருக்கும் தெரியாதே
என் கேள்விக்கு பதில்
கிடைக்காமல் போகாதே
சரித்திரத்தில் இடம் கிடைக்காமல்
சகா முடியாது

நட்பு

அறியாத வயதில் அறிமுகம் ஆனா
உறவு
அன்பின் விழுது பழகும் பொழுது
நட்பு எனும் விதையை விதைத்து
மெதுவாக அவை முளைத்து
பாதுகாப்பாக அவை வளர்த்து
பல நாள் அதை நினைத்து
நட்பின் ஆழம் அறிந்து
வாழ்வில் பல தூரம் இணைந்து
கவலையை மறந்து பறக்கும் மனது
இளமை இனிது என்றுமே புதிது

காதல்

ஏய் நான் உன்னை காதலிக்க
காரணம் தெரியவில்லை
என் இதயம் என்னிடம் அனுமதி
கேட்க வில்லை
உன் கொலுசின் ஓசை மறக்க
வில்லை
உன்னை தவிர வேறு யாரையும்
என் மனம் நினைக்க வில்லை
காதலை வர்ணிக்க நான் கவிஞன்
இல்லை
கவிதை எழுதுவேன் என நினைக்க
வில்லை
நாம் அன்புக்கு எல்லை இல்லை
கனவுகளுக்கு பஞ்சம் இல்லை
நீ இல்லமால் நான் இல்லை
காதல் இல்லாமல் யாரும் இல்லை

இயற்கை

இயற்கை வளம் பெறுகிறது
நாம் வாழ்க்கை சிறக்கிறது
உன் அழகை மனம் ரசிக்கிறது
காற்று நாம்மை வாழ வைக்கிறாது
பூக்கள் பூத்து சிரிக்கிறது
மண்ணின் வளம் தெரிகிறது
அதன் மகத்துவம் நெல்மணி
பிறக்கிறது
இயற்கை அன்னையின் அன்பு
புரிகிறது
மழையாய் வந்து பொழிகிறது
பல உயிர்கள் வாழ்கிறது
எல்லை இல்ல வளம் இருக்கிறது
இயற்கையின் அற்புதம் புரிகிறது

குடும்பம்

ஆலமரம் போல் உறவு
தாத்தா பாட்டியின் அன்பு
பலகிளைகளாய் வாழும் பொழு
அதன் அன்பில் வளரும் விழுது
அம்மா அப்பா அத்தை மாமா சித்தி
சித்தப்பா என இணைந்து
இசை பாடும் மனது
கூடிவாழ்ந்த உறவு
பழைய நினைவுகளை வருடும்
மனது
தாத்தா பாட்டி அன்பில் வளர்ந்து
பல தலைமுறைகளை கடந்து
அவர்களை கண்டு வியக்கும்
மனது
எல்லை இல்ல அன்பு
ஆசை கொண்ட உறவு – kavithai thoguppu 68

– சேலம் எஸ்.தாரா

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *