அன்பை மறந்த அபாக்கியவதி

உன்னால் என்னில் சேர்த்து வைத்த
கட்டுபாடுகளை இழந்தேன். anbai marantha abakyavathi kavithai

உன்னால் காதலில் விழுந்து வாழ்வின்
கோட்பாடுகளை மறந்தேன்.

உன்னால் என்னை, என் வைராகியங்களை
இழந்தேன்.

உன்னால் இப்பிறவி பயனை மறந்து
இத்துனை இழந்து நீ வேண்டும்
என்ற பிடிவாதங்கள் ,மனதை நிரப்பியதால்

இறுதியில் உன்
காதலையும் என்னில் விட்டுவிட்டு
சென்றாய் , என்னை நேசிக்க எனக்குள்ளே,
ஒரு கதாபாத்திரம் உருவாகியது.

anbai marantha abakyavathi kavithai

தனி ஒருவனாய் என்னில் என்னை தோற்றாலும்
வாழ்வில் வெல்ல உன் பிரிவு வலிகளும்
வைராகியங்களும் படிகளாய்
அன்பை மறந்த அபாக்கியவதிக்கு நன்றிகள் மட்டும் சொல்வேன்.

– நீரோடைமகேஷ்

anbai marantha abakyavathi kavithai

You may also like...

1 Response

  1. Ragavendran says:

    Attagaasam idhai pondra oru kavidhayai kelvipattadhae illai