“துர்(ன்) முகி” தமிழ் புத்தாண்டு

“துர்(ன்) முகி” தமிழ் புத்தாண்டு  tamil new year 2016 thunmugi

“துர்முகி ”  என்ற பெயர் தாங்கி வருகிறதே , அது எப்படியிருக்குமோ என்று கலங்க வேண்டியதில்லை . “துர்முகி ” என்று இருக்கிறதே, என்ற அச்சம் பலருக்கு இருக்கும். ஒவ்வொரு தமிழ் புத்தாண்டின் பெயரிலும் ஒவ்வொரு சூட்சமம் அடங்கியுள்ளது . “துர்முகி” புத்தாண்டின் பெயரில்தான் அப்படி என்ன சூட்சமம் உள்ளது என்பதை பார்போம் .

“துர்முக ” என்றால் குதிரை என்று அர்த்தம் . துர்முகி தமிழ்புத்தாண்டு முழுவதும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளது. சுக்கிரனுக்கு அடுத்ததாக ஆதிக்கமும் அதிகாரமும் பெறுபவர் , கல்விக்கு அதிபதியான புதன் பகவான் . புதனின் அதிதேவதை ஸ்ரீஹயக்ரீவர்.

ஞானம் , கல்வி, அறிவாற்றல், நினைவாற்றல் ,ஒழுக்கம் ,மற்றும் நேர்மை ஆகியவற்றை கொடுப்பவர் இவர்தான்.

tamil new year 2016 thunmugi

இந்த  துர்முகி ஆண்டு முழுவதும் ஸ்ரீஹயக்ரீவரின் சக்தியே மக்களுக்கு துணையாய் இருந்து வழிகாட்ட இருப்பதால் ,ஸ்ரீஹயக்ரீவர் பகவானின் பெண்ணாகிய இப்புத்தாண்டிற்கு “துர்முகி ” என்ற பெயர் உருவானது .

அதாவது பரி (குதிரை) முகத்தை கொண்டுள்ள  ஸ்ரீஹயக்ரீவரின் அருளையும்,அனுகிரகத்தையும் அள்ளிகொடுக்கும் ஆண்டாக இந்த ஆண்டு திகழப் போவதையே துர்முகி என்ற பெயர்காரணம் சூட்சமமாக உணர்த்துகிறது.

tamil new year 2016 thunmugi

You may also like...