மூலிகை “வயாக்ரா” அஸ்வகந்தா (எ) அமுக்கிரா

அஸ்வகந்தா (எ) அமுக்கிரா viagra natural alternatives ashwagandha

அஸ்வகந்தா என்றாலே பலருக்கும் தெரியக்கூடியது இதன் கிழங்கு மருந்துவப் பயனுடையது. கோவை மற்றும்  சில தென் மாவட்டங்களில்  தானே வளர கூடியது.ஏற்றுமதிப் பொருளாகப் பயிர் செய்யபடுகிறதது.உலர்ந்த கிழங்குகள் எல்லா  நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும். இந்த  கிழங்கு ஆயுர்வேதத்தில் அஸ்வகந்தி என்று அழைக்கப்படும். அஸ்வகந்தி லேகியம், அஸ்வகந்தித்தைலம் ஆகியவை பெரும்பாலானோர்க்கு தெரிந்ததே. ஆண்குறியின்  இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலுறவின் போது அதீத உத்வேகத்தைத் தரும். இது சீமை அமுக்கிரா, நாட்டு அமுக்கிரா என இரண்டு  வகைப்படும்.இதில் சீமை அமுக்கிரா கிழங்கு ஆண்கள் உடலுறவு கொள்ளும் போது அதிக நேரம் தாக்குப்பிடிக்க இது உதவுகிறது. இதை ஒரு மூலிகை  “வயாக்ரா” என்று  சொன்னால் அது மிகையாகாது.

viagra natural alternatives ashwagandha

அமுக்கரா மருத்துவ குறிப்புகள்:

*அமுக்கிரா கிழங்கை பொடி செய்து நெய்யுடன் சேர்த்து பயன்படுத்தினால் உடல் உறுதி, அழகு, நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

* அமுக்கிரா கிழங்கை பச்சையாக எடுத்து, பசுவின் பால்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, இடுப்பு வலி, கண்டமாலை வீக்கம் போன்றவற்றிற்கு பற்றிடலாம்.

*அமுக்கிரா கிழங்கை சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கு போட வீக்கம் குறையும்.

*கிழங்கை பாலில் வேக வைத்து அலம்பி உலர்த்தி பின் பொடி செய்து, ஒரு வேளைக்கு 2-4 கிராம் வரை தேனில் கொடுக்க உடல் பருமன், வீக்கம், பசியின்மை நீங்கும்; நெய்யில் கொடுக்க உடலிற்கு வலிமை  தரும்.

*அமுக்கிரா கிழங்கு பொடி – 1 பங்கு, கற்கண்டு – 3 பங்கு என சேர்த்து, காலையும் மாலையும் என இரு வேலையும் பசுவின்பாலுடன் (½ – 1 ஆழாக்கு) 4கிராம் சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் வன்மை பெறும்.

இயற்கையை பேணுவோம் : இவ்உலகத்தை காப்போம்

viagra natural alternatives ashwagandha

You may also like...