சோகம் நீக்கும் அசோகம்

“அசோகம்’ என்பதற்கு சோகத்தை நீக்குவது என அர்த்தமாகும். இதிகாசமான இராமாயணத்தில் அசோக மரங்கள் நிறைந்த வனத்தில்தான் சீதாதேவி சிறை வைக்கப்பட்டிருந்தார். சீதைக்கு ஏற்பட்ட சோகத்தை அகற்ற உதவிய மரம் என்பதால்தான் ‘அ’சோக மரம் என்ற பெயரே வந்தது என்று ஒரு கதை உண்டு. அதனாலோ என்னவோ, அசோக மரத்தின் பூ, பட்டை என அத்தனைப் பகுதிகளும் பெண்களைப் பாதிக்கும் பல நோய்களைப் போக்கக்கூடிய, பெண்களுக்கான உகந்த சிறப்பான மருத்துவ மூலிகையாக விளங்குகிறது.சீதையின் துயர் துடைத்த மரம், புத்தர் அவதரித்த மரம் என்று பல சிறப்புகள் பெற்றது “அசோக மரம்”.

மருத்துவத்தில் அசோகம்:

*அசோக மரத்தின் பூவை இடித்துப் பசையாக்கி நீரில் சேர்த்துக் கலக்கிக் குடிப்பதால் ரத்தக்கசிவு, ரத்த சீதபேதி, ரத்த மூலம், வலியுடன் கூடிய சிறுநீர் வெளியேறுவது ஆகிய நோய்கள் சரியாகும்.

*பட்டையை இடித்துச் சாறு பிழிந்து காலை மாலை என இருவேளையும் 10 மி.லி. அளவு உள்ளுக்குக் கொடுத்து வருவதால் பெரும்பாடு என்னும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.

*அசோக மரத்தின் இலையை இடித்துச் சாறு எடுத்து அதனோடு சிறிது சீரகத்தைப் பொடித்துச் சேர்த்து உள்ளுக்கு சாப்பிடுவதால் வயிற்றை இழுத்துப் பிடித்தாற்போல் வலிக்கும் வலி, வயிற்று உப்புசம், வயிற்று எரிச்சல், வயிற்றுப்புண் ஆகியன சரியாகும்.

*பூக்கள், விதைகள், பட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தீநீராக்கிக் குடிப்பதால் கருப்பைக்கு பலம் தருவதாகவும் பல்வேறு கருப்பைக் நோய்களைப் போக்குவதாகவும் செயல்படும்.

*அசோக மரத்துப் பூக்களை இடித்துத் தீநீராக்கி தினம் காலை மாலை எனச் சில நாட்கள் தொடர்ந்து குடித்து வருவதால் கருப்பையின் வாய்ப்புற அழற்சி, பித்த மேலீடு, பால்வினையால் வந்த கொருக்குப் புண்கள், அதிகமான நாவறட்சி, ரத்தம் அதிகமாகக் கலந்து வெளியேறும் ரத்த சீதபேதி, ரத்தக் கசிவு, படை என்னும் தோல் நோய் ஆகியன குணம் பெறும் .

asogam marathin palangal

*அசோகப்பட்டை 100 கிராம் அளவு எடுத்து நன்றாக சிதைத்து 200 மி.லி. பாலும் 800 மி.லி. நீரும் சேர்த்துக் கலந்து அடுப்பிலேற்றி சிறு தீயில் நன்றாகக் கொதிக்க விட்டு ஐந்தில் ஓர் பங்காகச் சுண்டச் செய்து தினம் காலை மாலை உள்ளுக்குக் கொடுத்து வருவதால் ரத்தப்போக்கு நின்று போகும். கருப்பையைச் சார்ந்த அத்தனைக் குற்றங்களும் கரைந்து போகும். வீட்டுவிலக்கு ஆகி மூன்றாம் நாளுக்கு மேலும் ெதாடர்கின்ற ரத்தப்போக்கும் நிற்கும்.

*அசோக மரத்துப் பூக்களை சேகரித்து நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிப்பதால் அடிபட்ட காயம், அதனால் மனநிலையில் ஏற்பட்ட பாதிப்பு ஆகியன சரியாகும்.

*அசோக மரத்துப் பூவின் தீநீர் ஆழ்மனத்தில் கவலை, பதட்டமான உணர்வு ஆகியவற்றையும் குணப்படுத்தக்கூடியது.

*அசோக மரப் பூக்களையோ, பட்டையையோ குடிநீராக்கிக் குடிப்பதால் வயதானவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல் நோய்களும் மன நோய்களும் குணமாகிறது.

*பெண் மலடு, குழந்தைப்பேறு ஏற்படுவதில் தாமதம் என்கிற நிலையில் 20 முதல் 30 கிராம் அளவு அசோக மரப்பட்டையை எடுத்து நீரிலிட்டுக் காய்ச்சி இனிப்பு சேர்த்து அன்றாடம் குடித்து வருவதால் விரைவில் கருப்பைக் கோளாறுகள் நீங்கி கருத்தரிக்க உதவும்.

‘சோகம்’ நீக்கும் “அசோகம்”

You may also like...