தமிழ் வருடங்கள் 60

தமிழ் வருடங்கள் tamil varudangal 60 (முதல் முப்பது வருட விளக்கம்)

தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது. பிரபவ என்பதற்கு நற்றோன்றல் என்றும், விபவ என்பதற்கு உயர்தோன்றல் என்றும், கடைசீ வருடமாக அட்சய வருடத்திற்கு வளங்கலன் என்றும் பொருள் உண்டு. தமிழ் ஆண்டுகள் பிரபவ என்ற ஆண்டில் தொடங்கி அட்சய என்ற ஆண்டில் முடியும், ஒவ்வொரு அறுவது ஆண்டு சுழற்சி அதாவது வட்டம் முடிந்தவுடன் மீண்டும் பிரபவ ஆண்டில் தொடரும்.

tamil varudangal 60
1.பிரபவ (1987-88)
2.விபவ (1988-89)
3.சுக்கில (1989-90)
4.பிரம்மோதுத (1990-91)
5.பிரஜோற்பத்தி (1991-92)
6.ஆங்கீரஸ (1992-93)
7.ஸ்ரீமுக (1993-94)
8.பவ (1994-95)
9.யுவ (1995-96)
10.தாது (1996-97)
11.ஈஸ்வர (1997-98)
12.வெகுதான்ய (1998-99)
13.பிரமாதி (1999-2000)
14.விக்கிரம (2000-2001)
15.விஷீ (2001-02)
16சித்திரபானு (2002-03)
17.சுபானு (2003-04)
18.தாரண (2004-05)
19.பார்த்திப (2005-06)
20.விய (2006-07)
21.சர்வஜித்து (2007-08)
22.சர்வதாரி (2008-09)
23.விரோதி (2009-10)
24.விக்ருதி (2010-11)
25.கர (2011-12)
26.நந்தன (2012-13)
27.விஜய (2013-14)
28.ஜய (2014-15)
29.மன்மத (2015-16)
30.துர்முகி (2016-17)
31.ஹேவிளம்பி (2017-18)
32.விளம்பி (2018-19)
33.விகாரி (2019-20)
34.சார்வரி (2020-21)
35.பிலவ (2021-22)
36.சுபகிருது (2022-23)
37.சோபகிருது (2023-24)
38.குரோதி (2024-25)
39.விசுவாச (2025-26)
40.பராபவ (2026-27)
41.பிலவங்க (2027-28)
42.கீலக (2028-29)
43.செளமிய (2029-30)
44.சாதாரண (2030-31)
45.விரோதிகிருது (2031-32)
46.பரிதாபி (2032-33)
47.பிரமாதீச (2033-34)
48.ஆனந்த(2034-35)
49.ராட்சச(2035-36)
50.நள(2036-37)
51.பிளங்க(2037-38)
52.காளயுத்தி(2038-39)
53.சித்தார்த்தி(2039-40)
54.ரெளத்திரி(2040-41)
55.துன்மதி(2041-42)
56.துந்துபி(2042-43)
57.ருத்ரோத்காரி(2043-44)
58.ரக்தாக்ஷி(2044-45)
59.குரோதன(2045-46)
60.அக்ஷய(2046-47)

வருடங்களின் விளக்கங்கள்

1. பிரபவ வருடங்கள்

ஆதி பிரபவத்தி லம்புவியில் மாதுடர்க்குச்
சோதனையாய்ச் சாவு னின் பந்தோன்றுமே – தீதில்
தருப்போலியும் மஃக மிகுந்தான் மாரியோங்கும்
பருத்தியுப்பு மாமணக்கும் பாழ்

பிரபவ வருடத்தில் உலக மக்களுக்கு சோதனைகளும் இறப்புகளும் துன்பங்களும் ஏற்படும் மழை அதிகம் பெய்து விளைபொருள் நன்கு விளைந்து விவசாயம் செழிக்கும். பருத்தி உப்பு – ஆமணக்கு பாழாகும் என்பது பிரபவ வருட பலனாகும். வருட அதிபதி பிரும்மாவாகும்.

2. விபவ வருடப் பலன்

செய்ய விபவ வருடஞ் செய் புவனந் தான் விளையும்
பெய்யு மழை எங்கும் பெருகுமே – ஐயமின்றி
மிக்க சுகம் எங்கும் மேதினியோர் வேந்தர்க்கு
தக்க அபிமானம் உண்டு தான்

மழை அதிகம் பெய்து விவசாயம் செழிக்கும். உலக மக்கள் மிகுந்த சுகம் பெறுவார்கள். அராசாட்சி செய்வோர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அபிமானமும் கிடைக்கும். வருட அதிபதி மகா விஷ்ணு.

3. சுக்கில வருடம்

நன்மைபெறுஞ் சுக்கிலத்தினாடெங்கும் செழிக்கும்
புன்மைவினைநீங்கிப் பொருள் சேரும் – நன்மை
இருக்கும் பசுக் கற்க்கும் எங்கும் மழையோங்கும்
பருத்தியுப்புந் தான் குறையும் பார்.

நன்மை அளிக்கும் சுக்கில வருடத்தில் நாடெல்லம் செழிக்கும் துன்பங்கள் நீங்கும் செல்வம் பெருகி பொருள் சேரும். பசுக்கள் நன்கு பால் கறக்கும்.மழை அதிகம் பெய்யும் பருத்தி – உப்பு குறையும். வருட அதிபதி சிவன்.

4. பிரமோதூத வருடம்

வரும்பிரமோதூத வருட மழை கொஞ்சம்
கரும்பு மிகப் பலிக்குங்கண்டாய் – நிரம்ப
பயமுண்டு பூமி பலியாது வேந்தர்
நயமுண்ட தாயிருப்பார் நன்கு.

மழை குறைவாகப் பெய்யும். கருப்பு விளைச்சல் அதிகம். மக்களுக்கு பயம் அதிகமாகும். பூமியில் விளைச்சல் அதிகமில்லை. ஆட்சியாளர்கள் தயவுடன் இருப்பார்கள். வருட அதிபதி சூரியன்.

5. பிரசோர்பத்தி வருட பலன்

துய்ய பிரசொர்பத்தியிற் றோன்றுமே நற்காலம்
பெய்யு மழையதிகம் பேருழவாம் – வையகத்தில்
உள்ள வகைசாதி உயிர் தழைத்து வாழ்ந்திருப்பர்
கள்ளமில்லை யெனறே நீ காண்.

மழை அதிகம் பெய்து விவசாயம் செழிக்கும். மக்கள் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள் கள்ளமிருக்காது. நல்ல காலமே எனலாம்.வருட அதிபதி சந்திரன்.

6. ஆங்கீரஸ வருட பலன்

ஆங்கீரஸ வருடமான மழைமிகுந்து
நீங்காமல் நீரோடி நீள் புவனம் – பாங்காய்
விளைவின்றிப் பஞ்சமிகுமே உயிர்கட்கு
அவின்றி செல்வம் அறுமே.

மழை அதிகம் பெய்து நீர் நிலைகள் நிரம்பி வழிந்தோடும் பெரு வெள்ளத்தால் பயிர்கள் அழிந்து பஞ்சம் ஏற்படும். செல்வம் அழியும். வருட அதிபதி செவ்வாய்

7. ஸ்ரீமுக வருடப் பலன்

தேடுநற் சீமுகத்திற் றேசந் தழை த் தோங்கும்
நாடியே முன் மழையோ நல்காது – நீடிய
பின்னால் மழையுண்டு நவ தானியம் பெருகும்.
தானோவு யீண்டென்றே சாற்று.

தேசம் தழைக்கும் முன் மழை இல்லை. பின்னால் மழை ஏற்பட்டு நவதானியம் விளையும். நோய் அதிகமாகும். வருட அதிபதி புதனாகும்.

8. பவ வருடங்கள்

பவ வருடந் தோன்றிப் பரிவார மோங்கும்
தவமிகுதியாகும் தலத்தில் – நவமதிகம்
பெய்யும் மழை தானிதிகம் பிள்ளை பெறு மாதர்தாம்
ஐய மடி வரறி.

பரிவரங்கள் நலம் பெற்றோங்கும். பக்தி – தவம் மிகுதியாகும். நவதானியங்கள் அதிகம் விளையும். நலல மழை பெய்யும். கர்ப்பமுற்ற பெண்கள் அதிகம் மரணமடைவார்கள். வருட அதிபதி குருபகவானாவார்.

9. யுவ வருடப்பலன்

யுவ வருடம் பூவுலகிலுள்ளோர்கள் நோயாற்
வருந்துவார் பசு மா தாங்கும் – நலமாக வாழும்
பரிவார மாரியுண்டு நெல்விளையும்
தாழ்வான தொன்று மில்லை தான்.

மக்கள் நோய்களால் துன்பப்படுவார்கள். கால் நடைகள் வளர்ச்சி நன்றாக இருக்கும். மழை நன்கு பெய்து நெல் நன்றாக விளையும். தாழ்வு இல்லை. வருட அதிபதியானவர் சுக்கிரன் ஆவார்.

10. தாது வருட பலன்

தாது வருடந்தராத லத்தோத் வாழ்ந்திருப்பார்
வேதனையுமில்லை விளைவுண்டு – சீத மழை
பெய்யும் பரிவாரம் பேருடனே யெந்நாளும்
உய்யும் படி யுலகிலுண்டு.

உலக மக்கள் நல்ல படஇயாக வாழ்வார்கள். வேதனை இல்லை. நல்ல விளைச்சல் உண்டு. நல்ல மழை பெய்யும். பரிவாரங்கள்யாவும் பேரும் புகழுடன் நல்ல படி வாழும். வருட அதிபதி சனிபகவானாவார்

11. ஈஸ்வர வருட பலன்

தக்கனெனு மீச்சுர வருட நாமமதில்
மிக்க பதினெட்டு வகை வெள்ளாமை தக்க
விளைவுண்டு மாரியுண்டு மேதினியின் மக்கள்
தளர்வின்றி வாழ்வார் தழைத்து.

பதினெட்டு வகை பயிர் நன்கு செழித்து வளரும். நல்ல மழை பெய்யும். மக்கள் செழிப்புடன் குறைவில்லாமல் வாழ்வார்கள்.வருட அதிபதி ராகு.

12. வெகுதானிய வருடப்பலன்

வெகுதானிய வருட மேதினி யிலெல்லாந்
தகுமாரி பின் பெய்யுந்தான் முன் – முகில் சோர்ந்து
கொஞ்ச மழை பெய்யுங்குலவு களை தழைக்கும்
பஞ்சம் பருத்தியுப் பாழ்.

வருடத்தில் பின் பகுதியில் கொஞ்சம் மழை பெய்யும். களைகள் அதிகமாகி விளைச்சல் குறைந்து பஞ்ச மேற்படும். பருத்தி உப்பு பாழாகும். வருட அதிபதி பிரும்மாவாகும்.

13.பிரமாதி வருடப் பலன்

வய்ய பிரமாதியில் வேந்தர் கொடுமையுறும்
ஐயகேள் பஞ்சமெடுக்கமே – செய்ய
பசுக்கள் மெலியும் பாரிற் குடிகள்
சிசுக்களுடனலைவார் தேர்.

ஆட்சியாளர்கள் கொடுமை செய்வார்கள். பஞ்சம் அதிகமாகும். பசுக்கள் மெலிந்து அழியும். மக்கள் குழந்தை குட்டிகளுடன் அலைவார்கள். வருட அதிபதி விஷ்ணு.

14.விக்கிரம வருடப்பலன்

விக்கிரம வாண்டதனில் மேவிய நன்மாரி கொஞ்சம்
அக்கணுயிர்கள் அழியுமே – தொக்க
பயிர் தீதாம் நோயும் பழியுமாம் பின்பு
செயிர் தீர்த்த வோர் மழையாம் செப்பு

மழை சிறப்பில்லை. உயிர்கள் அழியும். பயிர்பச்சை அழியும்.நோயும் பழியும் ஏற்படும். பிற்பாதியில் கொஞ்ச மழையுண்டு பயன் இல்லை. வருட அதிபதி சிவனாகும்.

15.விஷீ வருடம் பலன்

பாரில் விஷீ வருடம் பலன் பாலர்க்கு பீடையுண்டாம்
கார் பொழிவதில்லை முற்காலத்தில் ஏரி
பெருகாது பஇற்காலம் பெய்யுமே மாரி
இரு காலமுஞ்சம னென் றென்.

குழந்தைகளுக்கு பினி பீடையுண்டு முன் மழையில்லை. நீர் நிலைகள் நிரம்பாது. பின் மழை பெய்தாலும் பயன் இல்லை. சமமாகத்தான் இருக்கும். வருட அதிபதி சூரியன் ஆவார்.

16. சித்திர பானு வருடப்பலன்கள்

சித்திர பானிற் சிறக்க மழை மிகுத்து
வித்துள்ள வெல்லம் விளையுமே எத்திசையும்
பார்ப்பனருக்காகாது பார்வேந்தர்க்கே நலமாம்
தீர்ப்பாக பூமி பயம் செப்பு.

மழை அதிகம் பெய்து விதைக்கப்பட்டதெல்லம் விளையும் பிராமணர்களுக்காகாது. ஆட்சி செய்பவர்களுக்கு நன்மை. பூமி பயம் உண்டு. வருட அதிபதி சந்திரன்.

17. சுபானு வருடப்பலன்

சொன்னென் சுபானு தனிற்றோன்று மழை கொஞ்சமாம்
பின்னே விளைவு பெருகாது – மன்னேமுன்
மத்திமகோளுண்டா மடியுநாற் சீவன்
சற்றும் சுகமில்லைத் தான்.

மழை மிகவும் கொஞ்சமாகவே பெய்யும் என்பதால் விளைச்சல் பெருகாது. கால் நடைகள் மடியும் சுகம் குறையும். வருட அதிபதி செவ்வாய்

18. தாரண வருடப்பலன்

தாரணத்தில் மாரியறுந் தரணியி கேடுமுண்டா
ஓராய் நீ சீவன்களுய்யாது – பார் பிணியால்
ஐயமடியுமே யஃகங்குறைவாமே
வெய்யர் பயமே மிகும்.

மழை குறைந்து உலகில் கேடு ஏற்படும். கால் நடைகள் நோயால் மடியும். செழிப்பு குறைவாலும் நோய்களாலும் மக்கள் துன்பப்படுவார்கள்.வருட அதிபதி புதன் – tamil varudangal 60.

19. பார்த்திப வருடப்பலன்

தேசமிசை பார்த்திப வருடஞ் சிங்களத்தார்
தேசங் கெடுமனந்த தேசத்து – ராஜர்
அநியாயஞ் செய்வா ரதமேறுமாரி
இனிதாம் விளைவு யீளைவாம்.

சிங்கள நாடு துன்பமடையும். அரசாட்சி செய்பவர்கள் அநியாயம் செய்வார்கள். பின் பகுதியில் நல்ல மழை பெய்து விளைச்சல் அதிகமாகும்.வருட அதிபதி குருவாகும்.

20. விய வருடப்பலன்

விய வருட மாரி விளைவுண்டாஞ் சீனம்
சுய வாழ்வுடனே சுகமாம் உயர்வாம்
பதினெட்டு வித்தும் பதிவாய் பலிக்கும்
சதர் பெறு நல்லஃக மிகுந்தான்.

மழை அதிகம் பெய்து விளைச்சல் அதிகமாகி 18 வகை வித்துக்களும் நன்கு விளையும். சீன தெசமும் நல்ல சுகம் பெறும். நல்ல படி பலன் கிடைக்கும். வருட அதிபதி சுக்கிரனாவார்.

21. சர்வஜித்து வருடங்கள்

சருவசித்து தன்னிற் றவத்தில் பலவும்
ஒரு பதினெட்டு வித்துமோங்கும் – பெருமையுடன்
மிக்க விளைவுண்டா மென் மேலும் மாரி யுண்டாம்
தக்க சுகம் பெருகுந்தான்.

பதினெட்டு வகை பொருளும் அதிகமாகி விளையும். மேலும் மேலும் மழை பெய்து நல்ல சுகம் அளிக்கும். வருட அதிபதி சனி.

22. சர்வதாரி வருடப்பலன்

நற் சருவதாரின் நல்ல மழையுண்டாம்
அற்பவித்தான தெல்லாமாகாது – சொற்பெரிய
ஐந்து வகை விளைவு மாகுஞ் சுகமுடனே
மைந்தரெல்லாம் வாழ்ந்திருப்பர் மற்று.

நல்ல மழை பெய்யும் அற்பமான விபத்துக்கள் விளையாது. பெரிய தான ஐந்து வகை மட்டும் நன்கு விளைந்து மக்கள் சுகமாக வாழ்வார்கள். வருட அதிபதி சிவன்.

23. விரோதி வருடப்பலன்

நீடு விரோதி நிலத்தின் மழை மிகுதி
மேடு காடெல்லாம் விளைவுண்டாம் – நீடும்
அரசர் பேராலே யழிவு முலகம்
திரமிகு நோய் சேருமெனச் செப்பு.

மழை அதிகம் பெய்து காடு மேடெல்லாம் விளையும். ஆட்சியாளர்களின் சண்டையினால் அழிவு ஏற்படும். நோய்கள் ஏற்படும். வருட அதிபதி பிரும்மா ஆவார்.

24. விக்ருதி வருடப்பலன்

வையந்தனில் விக்ருதி மாரி விளைவதிகம்
செய்ய வளங்கள் சிறக்கும் ஐய்யே
மாடு கழுதை வயப்பரி நோய் மிக்குச்
சாட மேலியுமெயுமேதான்

நல்ல மழை பெய்து விளைச்சல் அதிகமாகி வளம் சிறக்கும். மாடு, கழுதை ஆகியவைகள் நோயால் துன்பப்ட்டு மெலியும். வருட அதிபதி மகா விஷ்ணு.

25. கர வருட பலன்

கர வருட மாரிப் பெய்யுங் காசினி யுமுய்யும்
உரமிகுந்த வெள்ள மெங்குமோடும் – நிரைமிகுந்து
நாலு காற் சீவனழியும் நோயால் மடியும்
பாலு நெய்யுமே சுருங்கும் பார்

மழை அதிகம் பெய்து எங்கும் வெள்ளம் ஏற்படும். கால் நடைகள் நோயால் மரணமடையும். பாலும் நெய்யும் குறையும் வருட அதிபதி சிவனாவார்.

26. நந்தன வருடப்பலன்கள்

நந்தனத்தின் மார் யறு நாடெங்கும் பஞ்சமிகும்.
நந்துமுயிர் நோயால் நலியுமே – அந்தரத்தின்
மீனு திருந்தூம மெழு மிக்க கெடுதியுண்டாம்
கோன் மடிவ னென்றே நீ கூறு.

மழை பெய்யாமல் பஞ்சம் ஏற்படும். உயிரினங்கள் நோயால் துன்பமடையும் நட்சத்திரங்கள் நிலை மாறுவதால் கெடுதல்கள் ஏற்படும். அரசர் மடிவார். வருட அதிபதி சூரியனாவார்.

27. விஜய வருடப்பலன்

மண்ணில் விசய வருடம் மழை மிகுதி
எண்ணு சிறுதானியங்களெங்கும் நண்ணும்
பயம் பெருகி நொந்து பரிவாரமெல்லாம்
நயங்களின்றி வாடுமென நாட்டு.

மழை மிகுதியாகப் பெய்து சிறு தானியங்களும் நன்கு விளையும். பயம் அதிகமாகி மக்கள் துன்பமும் துயரமும் அடைவார்கள். வருட அதிபதி சந்திரன்.

28. ஜெய வருடப்பலன்

ஜெய வருடந்தன்னிலே செய்புலங்களெல்லாம்
வியனுறவே பைங்கூழ் விளையும் – நயமுடனே
அஃகம் பெரிதாமளவில் சுகம் பெருகும்.
வெஃகுவார் மன்னிரிறை மேல்.

நிலம் புலம் யாவும் நன்கு விளந்து நன்மை அதிகமாகி சுகம் பெருகும். ஆட்சியாளர்கள் கர்வமடைவார்கள். வருட அதிபதி செவ்வாய்.

29. மன்மத வருடப்பலன்

மன்மதத்தின் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மை மிகும் பல் பொருளு நண்ணுமே – மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென் திசையிற் காற்று மிகுதி
கானப்பொருள் குறையுங்காண்.

நல்ல மழை பெய்து பல விளைவும் பெருகி உயிர்களுக்கு நன்மையுண்டு. சீன தேசத்தில் சண்டையுண்டு. தென் திசையில் காற்று அதிகமாகும். காட்டுப் பொருள் விளைவு குறைவு. வருட அதிபதி புதன் ஆவார் – tamil varudangal 60.

30. துன்முகி வருடப்பலன் Click

மிக்கான துன்முகியில் வேளாண்மை யேறுமே
தொக்க மழை பின்னே சொர்யுமே – மிகுகான
குச்சர தேசத்திற் குறை தீரவே விளையும்
அச்சமில்லை வெள்ளை அரிதாம்

விவசாயம் செழிக்கும். பின் பாதியில் மழை அதிகம். வட தேசத்தில் நல்ல விளைச்சல் ஏற்படும். பயம் இல்லை. வெள்ளைப் பொருட்கள் குறையும். வருட அதிபதி குரு பகவானாவார்

tamil varudangal 60

You may also like...

5 Responses

 1. A Arivalagan says:

  Sir
  Please add for the remaining 30 more years thanks

 2. நிச்சயமாக பதிவிடுகிறோம்.

 3. Govindasamy says:

  Very good information, Are the details added for remaining 30 years,

 4. காமாட்சி says:

  அடுத்த 30 வருடங்களின் விவரங்களையும் பதிவிடவும்

 5. Sharad says:

  அடுத்த 30 வருடங்களின் விளக்கம் கிடைத்தால் நல்லது. அனைவருக்கும் பயன்படும்.