வார ராசிபலன் ஆனி 13 – ஆனி 19
ஆனி மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal june-27 to july-03
மேஷம் (Aries):
இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்ப வருமானம் உயரும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமையும். பணியாளர்கள் பணி சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். விவசாயத்தில் சுமார் லாபமே கிடைக்கும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று விஷ்ணு பகவானை வழிபட்டு வரவும்.
ரிஷபம் (Taurus):
இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். கடன் தொல்லைகள் நீங்கும். உங்கள் முயற்சி வெற்றி அடையும். நினைத்தது நடக்க வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் வெற்றியைக் காண்பார்கள். வியாபாரத்தில் வேகம் அதிகரிக்கும். கலைஞர்கள் குடும்பத் தேவை பூர்த்தி அடையும். மாணவர்கள் உச்சம் அடைவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: கிருஷ்ணர் வழிபடுவது சாலச் சிறந்தது.
மிதுனம் (GEMINI):
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். எதையும் திறமையாக செய்து முடிப்பீர்கள். பண பரிவர்த்தனை மூலம் லாபம் உயரும். சுப நிகழ்ச்சி ஒன்று நடக்க வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் நல்ல உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் உற்சாகம் அடைவார்கள். மாணவர்கள் நல்ல ஆர்வம் கொள்வார்கள். விவசாயம் காய்கறி விவசாயத்தின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.
கடகம் (Cancer):
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். பணியாளர்கள் சங்கடங்களை எதிர்கொள்வார்கள். வியாபாரத்தில் குறைந்த லாபமே கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல பாடத்திட்டத்தில் சேர்வார்கள். விவசாயத்தில் சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும்.
பரிகாரம்: தினம் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.
சிம்மம் (LEO):
இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு சுமாராக அமையும். காரிய வெற்றி அடையும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரம் பூஜை பொருள் சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் அரசாங்க ஆதரவை பெறுவார்கள். மாணவர்கள் நட்புறவுடன் காணப்படுவார்கள். விவசாயத்தில் நஷ்டம் அடையும்.
பரிகாரம்: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.
கன்னி (Virgo):
இந்தவாரம் கேது பகவான் நன்மையே செய்வார். எல்லோரிடமும் நட்புறவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் திடீர் மாற்றங்கள் வரலாம். ஆபரணங்கள் வாங்க யோகம் உள்ளது. யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். பணியாளர்கள் இடமாற்றம் அடைவார்கள். வியாபாரத்தில் புதிய யுக்தி பயன்படுத்தப்படும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் பாக்கியசாலிகள் ஆவார்கள். விவசாயத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று பெருமாள் வழிபாடு செய்து வரவும்.
துலாம் (Libra):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். ஆடை ஆபரணங்கள் வாங்க யோகம் உள்ளது. உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் அதிக வேலையை சந்திப்பார்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். கலைஞர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள். மாணவர்கள் சிரமப்பட நேரிடும். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செய்தல் சாலச் சிறந்தது.
விருச்சிகம் (Scorpio):
இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். தாயின் உடல்நிலை முன்னேற்றம் அடையும். பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எதிலும் நிதானம் கடைபிடிக்கவும். பணியாளர்களுக்கு நன்மை கிடைக்காது. வியாபாரம் சுமாராகவே காணப்படும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் நன்மதிப்பைப் பெறுவார்கள் விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நன்மை அடையலாம்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.
தனுசு (Sagittarius):
இந்த வாரம் ராகுபகவான் நன்மையே செய்வார். ஏதாவது தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசாங்க உதவி கிடைக்கும். எதிரிகள் உங்கள் வசம் சரண் அடைவார்கள். பணியாளர்கள் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். வியாபாரம் சுமாராகவே காணப்படும். கலைஞர்கள் தேவை பூர்த்தி அடையும். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி அடைவார்கள். விவசாயம் நஷ்டம் அடையும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனிபகவானுக்கு வரவும்.
மகரம் (Capricorn):`
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு எதிர்பார்ப்பு நிறைவேறும். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். உடல்நலனில் சற்று கவனம் தேவை. குடும்பத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பணியாளர்கள் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கலைஞர் கவனமாக செயல்படவும். மாணவர்கள் குடும்ப மதிப்பெண் பெறுவார்கள். விவசாயம் லாப நஷ்டம் என்று சீரடையும்.
பரிகாரம்: வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.
கும்பம் (Aquarius):
இந்த வாரம் சூரியபகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். எதிலும் சற்று பொறுமை தேவை. சகோதர சகோதரிகள் உதவி கிடைக்கப் பெறும். பணத் தேவைகள் பூர்த்தியடையும். பணியாளர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். கலைஞர்கள் உற்சாகம் அடைவார்கள். மாணவர்கள் பொறுமை காக்கவும். விவசாயத்தில் நஷ்டம் அடையும்.
பரிகாரம்: அனுமன் வழிபாடு செய்து வரவும்.
மீனம் (Pisces):
இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். உடல்நிலை ஆரோக்கியமாக காணப்படும். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். சகோதர ஒற்றுமை நிலவும். எதிலும் நன்மையை எதிர்பார்க்கலாம். பணியாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். வியாபாரத்தில் பூஜை பொருள் சம்பந்தப்பட்ட வியாபாரம் லாபம் அடையும். கலைஞர்கள் முன்னேற்றம் அடைவார்கள். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயம் நன்மையே அடையும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும் – rasi-palangal june-27 to july-03
– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு)