வார ராசிபலன் ஆவணி 07 – ஆவணி 13

ஆவணி மாத மின்னிதழ் பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். விநாயகர் சதுர்த்தி 2020 பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும். – rasi palangal aug 23 – aug 29.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சூரிய பகவான் பல நன்மைகளை செய்வார். வீட்டில் ஆடம்பர பொருட்கள் வாங்க யோகம் உள்ளது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த பிரச்சினைகள் அடியோடு மறையும். வீட்டில் குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, அண்டை வீட்டார் மத்தியில் நட்பு வளர வாய்ப்புள்ளது. பணியாளர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவார்கள். வியாபாரம் வளர்ச்சி அடையும். கலைஞர்கள் வருவாய் உயரும். மாணவர்கள் வெற்றி மேல் வெற்றி அடைவார்கள். விவசாயத்தில் நல்ல வருவாய் எதிர்பார்க்கலாம். 
வழிபாடு: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். வீட்டில் பொன் பொருள் வாங்க யோகம் உள்ளது, அதேசமயம் வீட்டில் களவு போகும் வாய்ப்புகள் உள்ளது கவனம் தேவை. உடல்நலம் சுமாராகவே இருக்கும், பணவரவு நன்றாகவே அமையும். பணியாளர்கள் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். கலைஞர்கள் தேவை எளிதாக பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் நன்கு சிறப்படைவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல வருவாய் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். சுற்றுவட்டத்தில் மதிப்பு மரியாதை கூடும், சுப நிகழ்ச்சி ஒன்று குடும்பத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது. பெண்கள் தன் கணவரின் ஆதரவை பெறுவார்கள். பணியாளர்கள் பணியில் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் நன்மதிப்பை எடுப்பார்கள். விவசாயம் காய்கறி மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
வழிபாடு: திங்கட்கிழமை அம்மன் வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் இருந்துவந்த பகைவர்கள் சதி முறியடிக்கப்படும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். பெண்கள் மூலம் நன்மையை எதிர்பார்க்கலாம். இந்த வாரம் விருந்து விழா என சென்று வர வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் கோரிக்கைகள் அனைத்தும் வெற்றி பெறும். வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட வியாபாரம் நல்ல லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் அரசாங்க விருதுகள் பெறுவார்கள். மாணவர்கள் முயற்சியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் கிழங்கு வகை விவசாயம் நல்ல லாபம் அதிகரிக்கும்.
வழிபாடு: வெள்ளிக்கிழமை லட்சுமி வழிபாடு செய்து வருவது சாலச்சிறந்தது.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் குரு பகவான் பல நன்மைகளை செய்வார். உறவினர்கள் வகையில் வருத்தப்பட நேரிடும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி ஒன்று நடைபெற வாய்ப்பு உள்ளது. வீட்டில் குழந்தை பாக்கியம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் தேவைகள் பூர்த்தி செய்து கொள்வார்கள். வியாபாரத்தில் தங்கம் வெள்ளி போன்ற வியாபாரிகள் நல்ல லாபம் அடைவார்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயத்தில் விரயத்தை எதிர்கொள்ள நேரிடும்.
வழிபாடு: பிரதோஷ தினத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் சுக்கிர பகவான் பல நன்மைகளை செய்வார். சகோதரர் வழியில் ஆதாயம் கிடைக்க வழிவகைகள் உள்ளன. பெற்றோர் வீட்டிலிருந்து சீதனப் பொருட்கள் எதிர்பார்க்கலாம். புண்ணியத் தலங்களுக்கு சென்று வர வாய்ப்புகள் உள்ளன. உறவினர் வருகை பகைமை உருவாகலாம், கவனம் தேவை. பணியாளர்கள் நல்ல சிறப்பு அடைவார்கள். வியாபாரத்தில் லாபம் உயரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் இடையூறுகளை எதிர்கொள்வார்கள். விவசாயம் சுமாரான பலனை எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: தினமும் காலை சூரிய வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். வீட்டில் தெய்வ அனுகூலம் ஏற்படும். பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவீர்கள். அரசாங்க உதவி கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. குடும்பம் மகிழ்ச்சிகரமாக காணப்படும். பணியாளர்கள் உன்னத பலனை பெறுவார்கள். வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல லாபம் பெறும். கலைஞர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றியை அடைவார்கள். விவசாயத்தில் வருவாய் இரண்டு மடங்காகும்.
வழிபாடு: வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் சூரிய பகவான் பல நன்மைகளை செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி பொங்கும். வழக்கு வகையில் பிரச்சினைகள் வர வாய்ப்புகள் உள்ளன கவனம் தேவை. பணியாளர்கள் பணியிடத்தில் சிறு தடைகள் வர வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் கூடுதல் வருவாய் கிடைக்கும். கலைஞர்கள் பாராட்டுகளை பெறுவார்கள். மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். விவசாயம் சீரான மகசூல் கிடைக்கும்.
வழிபாடு: அனுமன் வழிபாடு செய்து வருவது சாலச்சிறந்தது.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். வீட்டின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். கணவன்-மனைவி இடையே இணக்கமான சூழல் நிலவும். சகோதர வகையில் பண உதவி கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் ஒதுங்கியே இருக்கவும். பணியாளர்கள் நல்ல வளர்ச்சியை அடைவார்கள். வியாபாரத்தில் சீரான பணவரவு இருக்கும். கலைஞர்கள் பெண்களின் மூலம் பிரச்சினையை எதிர் கொள்வார்கள். மாணவர்களுக்கு இது சோதனை காலமாக அமையும். விவசாயம் புதிய விவசாயக் கருவிகள் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும்.
வழிபாடு: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். உடல்நலம் நல்ல ஆரோக்கியமாக காணப்படும். அண்டை வீட்டார்கள் அனுசரணையுடன் இருப்பார்கள். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். சீதன பொருட்கள் வர வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் வெற்றியை அடைவார்கள். வியாபாரத்தில் பகைவர்களின் சதி முறியடிக்கப்படும். கலைஞர்கள் தோல்வியை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயத்தில் நல்ல வருவாய் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: துர்க்கை அம்மன் வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும், வசதி வாய்ப்புகள் நல்லமுறையில் பெருகும். புதிய வீடு மனை கட்டும் யோகம் உள்ளது. புத்தாடை அணிகலன்கள் வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் கோரிக்கை அனைத்தும் வெற்றி பெறும். வியாபாரத்தில் வரவு செலவு சமமாக அமையும். கலைஞர்கள் வெற்றிக்கொடி நாட்டுவார்கள். மாணவர்கள் கல்வியில் நல்ல வெற்றி அடைவார்கள். விவசாயத்தில் கூடுதல் வருமானம் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: புதன்கிழமை அன்று குலதெய்வ வழிபாடு செய்யவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் சூரிய பகவான் பல நன்மைகளை செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். உங்கள் வாழ்க்கையில் அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதாரம் மேம்பாடு அடையும், மக்கள் மத்தியில் மரியாதை கூடும். பணியாளர்கள் முன்னேற்றம் அடைவார்கள். விவசாயம் நல்ல சிறப்படையும். கலைஞர்கள் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். மாணவர்கள் நற்பலன் அடைவார்கள். விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்கும்.
வழிபாடு: நரசிம்மர் வழிபாடு செய்து வருவது நன்மை பயக்கும் – rasi palangal aug 23 – aug 29.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

2 Responses

  1. Rajakumari says:

    ராசி பலன் சரியாக சொன்ன மாதிரி நடக்கின்றது நன்றி

  2. தி.வள்ளி says:

    இராசி பலன்… பல மிகச் சரியாக நடக்கிறது..முத்துசாமி ஐயா அவர்களுக்கு நன்றி..