வார ராசிபலன் ஆடி 04 – ஆடி 10
தடுக்கி விழும் திட்டுகளையும் படிக்கட்டுகளாக மாற்றிவிடுவது தன்னம்பிக்கையும், பக்தியுமே – rasi palangal july 19 – july 25
மேஷம் (Aries):
இந்த வாரம் குரு பகவானே பல நன்மைகளை செய்வார். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் வந்து சேரும். தெய்வ வழிபாடு நமக்கு நன்மை அளிக்கும். பெண்கள் தன்னுடைய பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. பணியாளர்கள் அலுவலகத்தில் மிகவும் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். வியாபாரத்தை பொருத்தவரை இந்த வாரம் சுமாரான லாபமே அடையும். குடும்பத்தில் பொருளாதாரம் மேம்பாடு அடையும். கலைஞர்கள் தன் வாழ்க்கையை நடுத்தரமாக நடத்துவார்கள். மாணவர்கள் வெற்றியை குறிப்பார்கள். விவசாயிகள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
வழிபாடு: தினம் காலை விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
ரிஷபம் (Taurus):
இந்த வாரம் சுக்கிர பகவானே பல நன்மைகளை செய்வார். வீட்டில் மனைவியின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது, எதிர்பாராத செலவுகள் வர வாய்ப்புள்ளது. திட்டமிட்ட செயல்களில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். வியாபாரத்தில் கடுமையாக உழைக்க நேரிடும். கலைஞர்களுக்கு அரசாங்க உதவி கிடைக்கும். மாணவர்கள் மகிழ்ச்சிகரமாக செயல்படுவார்கள். விவசாயத்தில் நல்ல மகசூல் கிடைக்கப்பெறும்.
வழிபாடு: முருகப் பெருமான் வழிபாடு சாலச்சிறந்தது.
மிதுனம் (GEMINI):
இந்த வாரம் சந்திரபகவான் பல நன்மைகளை செய்வார். தங்கள் பணிகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள், பணவரவு செலவு நடுத்தரமாக ஆமையும், உறவினர்கள் மத்தியில் பகைமை உருவாக வாய்ப்புள்ளது. நண்பர்களிடம் விட்டுக்கொடுத்துப் போவது நன்மை பயக்கும். அலுவலகத்தில் தங்கள் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய திட்டத்தை வகுப்பீர்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் பெற்றோரின் அறிவுறுத்தலை கேட்பது நல்லது. விவசாயம் செழிப்படையும்.
வழிபாடு: பைரவர் வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.
கடகம் (Cancer):
இந்த வாரம் கேதுபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாக அமையும். உறவினர்கள் மத்தியில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பெண்கள் தன் பேச்சில் நிதானமாக செயல்படவும், குடும்பத்தில் மகிழ்ச்சிகரமாக இந்த வாரம் அமையும். பணியாளர்கள் தன் நிலுவையிலுள்ள பணியை சிறப்பாக முடிப்பார்கள். வியாபாரம் நல்ல லாபகரமாக செயல்படும். கலைஞர்கள் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வார்கள். மாணவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதல்படி நடப்பார்கள். விவசாயத்தில் சுமாரான வருவாய் கிடைக்கும்.
வழிபாடு: நரசிம்மர் வழிபாடு செய்வது சாலச்சிறந்தது.
சிம்மம் (LEO):
இந்த வாரம் ராகு பகவான் நன்மையே செய்வார். பணியில் சிந்தித்து செயல்பட வேண்டிய வாரமாகும். பிள்ளைகள் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும். திட்டமிட்ட செயல்களை செய்வதில் தடை ஏற்படும். பணியாளர்கள் பதவி உயர்வை பெறுவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் திறமையுடன் செயல்பட வேண்டும். விவசாயம் நல்ல லாபத்தை தரும்.
வழிபாடு: ராமபிரான் வழிபாடு செய்வது நல்லது.
கன்னி (Virgo):
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். வாழ்க்கை துணைவி நல்ல ஒத்துழைப்பு தருவார். பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு அடைவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் வெற்றி அடைவார்கள். விவசாயம் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும்.
வழிபாடு: அம்மன் வழிபாடு செய்வதே சிறந்தது.
துலாம் (Libra):
இந்தவாரம் கேதுபகவான் நன்மையே செய்வார். பிள்ளைகள் மூலம் அதிக செலவினை எதிர்பார்க்கலாம். உடல் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தவும், புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். சேமிப்பை பெருக்கிக் கொள்வது நல்லது. பணியாளர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரம் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். மாணவர்கள் பெற்றோரின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். விவசாயத்தில் ஓரளவே லாபம் கிடைக்கும்.
வழிபாடு: துர்க்கை வழிபாடு செய்வது நலம் தரும்.
விருச்சிகம் (Scorpio):
இந்த வாரம் குரு பகவான் பல நன்மைகளை செய்வார். உடல்நலத்தில் நல்ல அக்கறை செலுத்தவும், குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது சிந்தித்து செயல்படவும், பணவரவு நன்றாக அமையும். பணியாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக முடிப்பார்கள். வியாபாரம் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காது. கலைஞர்கள் புது புது ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் ஓரளவு லாபம் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.
தனுசு (Sagittarius):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். எந்த செயலிலும் எச்சரிக்கையாக செயல்பட்டு வரவும், பிள்ளைகள் உடல்நலனில் அக்கறை தேவை, திட்டமிட்டு செயல்படும் செயல்கள் தடை ஏற்பட வாய்ப்புள்ளது. பணியாளர்கள் திறம்பட செயல்படுவார்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். கலைஞர்கள் அரசாங்க உதவியைப் பெறலாம். மாணவர்கள் மிகவும் கவனமாக செயல்படவும். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: சிவ வழிபாடு செய்வது நலம் தரும்.
மகரம் (Capricorn):`
இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். தேவையற்ற பகை உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம், எதிலும் பொறுமையாக செயல்படவும். பணியாளர்கள் அலுவலகத்தில் தங்களுடைய செல்வாக்கு குறைய வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் வெளி ஆட்களை நம்பவேண்டாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் இரட்டிப்பு வெற்றி அடைவார்கள். விவசாயம் சுமாரான பலனை எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: குலதெய்வ வழிபாடு செய்து வரவும்.
கும்பம் (Aquarius):
இந்த வாரம் சனி பகவான் பல நன்மைகளை செய்து வருவார். உடன்பிறப்புகள் மூலம் ஆதாயம் பெறலாம், பணப்பிரச்சனை வந்து போகலாம். பெண்கள் செய்யும் பணிகள் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் அடையும். கலைஞர்கள் வாழ்வாதாரம் சிரமமாக இருக்கலாம். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். விவசாயம் நல்ல எதிர்பார்ப்பை கொடுக்கும்.
வழிபாடு: குரு வழிபாடு செய்தல் நல்லது.
மீனம் (Pisces):
இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். வீட்டில் உறவினர்கள் வருகை நல்ல மகிழ்ச்சியை கொடுக்கும், திட்டமிட்ட பயணங்களை தவிர்க்க வேண்டாம், எதிரிகளிடம் உங்கள் பலம் அதிகரிக்கும், உடல்நலத்தில் நல்லா அக்கறை செலுத்தவும். பணியாளர்கள் வீண் அலைச்சலை எதிர்கொள்ளவேண்டும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் திட்டமிட்டு செயல்படுவார்கள். விவசாயம் நல்ல லாபம் அடையும்.
வழிபாடு: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு சாலச்சிறந்தது – rasi palangal july 19 – july 25.
– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு)
நாளும் கோளும் தான் நம்மை காக்க வேண்டும்.இறையருள் துணை நிற்க வேண்டும்.
மிக சரியாக கணிக்கப்பட்ட ராசி பலன். அதன்படி நடந்து இந்த வாரம் வெற்றிகளை பெற முடியும் என ற நம்பிக்கை வந்தது. நன்றி
ராசிபலன் நல்லதே நடக்கின்றது