என்னவள் – காதல் கவிதை

காட்சிகளை, காதலை வருடிய வரிகளை அவரின் அவளுக்காக வழங்கியுள்ளார் சகோதரர் பிரகாசு.கி – ennaval kathal kavithai

ennaval kathal kavithai

என்னவளை சந்தித்த நேரம்‌
என் இதயம் ஒரு நிமிடம் என்னவளுக்காக துடித்தது!!
நான் புதிதாக பிறந்தது போல ஒரு உணர்வு!!
முதன் முதலாக பேச சொல்லும்போது நான்
குழந்தையாக மாறியது போல பேச்சுக்களில் தடுமாற்றம்!!
என்னவள் தந்த தேநீர் கூட அமிர்தம் ஆனது!! – ennaval kathal kavithai

அவளின் தலையில் வைக்கப்பட்ட பூவில் இருந்து வந்த வண்டு சொன்னது
என்னை விட அழகானவள் உன் என்னவள் என்று
என் காதில் ரகசியமாக வருட!!
பிரிய மனமில்லாமல் என்னவளை பார்த்த வண்ணம்ம்
அந்த இடத்தில் இருந்து நகர்ந்தேன்

– பிரகாசு.கி அவனாசி

You may also like...

10 Responses

 1. மணிகண்டன் சுப்பிரமணியம் says:

  உருகி மருக வைக்கிறது உரிவயவளை நினைத்து…!
  பிரகாசு இன்னும் பிரகாசிகட்டும்…!

 2. தி.வள்ளி says:

  இதயம் மீட்டும் உணர்வு வீணையின் இனிய நாதமாய்… இதயத்தை வருடும் கவிதை…கவிஞர் பிரகாசுக்கு பாராட்டுகள்.

 3. R. Brinda says:

  ‘என்னவள்’ காதல் கவிதையில் ஒவ்வொன்றையும் அனுபவித்து எழுதி இருக்கிறார் கவிஞர் பிரகாசு அவர்கள். பாராட்டுக்கள்!!

 4. Kavi devika says:

  ப்ரியத்தின் வெளிப்பாட்டை பகிர்ந்த கவிநயம் அழகு..வாழ்த்துகள்.

 5. S. Rajakumari chennai says:

  என்னவள் . கவிதை நன்றாக இருக்கிறது

 6. Ushamuthuraman says:

  என்னவள் கவிதை பிரமாதம். பாராட்டுக்கள்

 7. கோபி says:

  மிகவும் நன்றாக உள்ளது

 8. சித்ரா says:

  இளங்கவிஞர் பிரகாசு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

 9. Viji says:

  Very nice

 10. S. Meenakshi says:

  Very nice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *