ஜென்மங்களில் வார்த்தைகள் இல்லையடி

உன் அந்த வெட்கச் சிணுங்கல்களுக்கு jenmangalil vaarthaigal illaiyadi kaathal kavithai,
வெளிப்படும் வெட்கத்தை
புன்னகைத்து மறைக்கும் உதடுகளுக்கு,

என் கண்ணிமையின் சிமிட்டல்களை மறந்து
பார்க்கத் தூண்டும் உன்னிருவிழிகளுக்கு,

jenmangalil vaarthaigal illaiyadi kaathal kavithai

நான் செய்த சிறு தவறுகளுக்கு
அதட்டல் சொன்ன உன் குரலுக்கு,

உன் உதட்டோரப் புன்னகையில் மட்டுமே
முகம் காட்டும் அந்த முத்துப் பற்களுக்கு,

என் முன்னே நீ நிற்கையில்
தரையில் படாமல் கோலமிடும் உன் கால் விரல்களுக்கு,

வருணனை சொல்ல என் ஜென்மங்களில் வார்த்தைகள்
இல்லையடி என் வானவில்லே !

 

– நீரோடை மகேஷ்
AUGUST 25, 2012

You may also like...

1 Response

  1. அருமையான வரிகள்…

    பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்… நன்றி… (TM 1)