எல்லாம் மறந்தேன் உன்னை தவிர

கவிஞர் க. பூமணி அவர்களை அறிமுகம் செய்கிறோம். தமிழ்மொழியின் மீது அநீதி காதல் கொண்டவர்களில் பூமணியும் ஒருவர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்தவர் – ennavane kavithai tamil.

ennavane kavithai tamil

என்னவனே !
கருவறையில் பார்க்காத வெளிச்சத்தை தரும்
உன் கண்விழி !
நீ பார்த்த மறுநொடி
மனதிற்குள் சென்று
விதைத்து விட்டாய் காதல் செடி !
என்னவனே !

மழைக்கு முன் வரும் காற்று
நீ தரும் சுவாசம் !
இடிஇடிக்கும் சத்தம்
உன் கோபத்தின் உச்சக்கட்டம் !
இதற்கிடையில் வரும்
மின்னலின் வேகம் உன் வெக்கம் !
சலசலவென வந்து மரத்தை
பல துளிகளாக நனைக்கும் மழைத்துளி உன் வார்த்தைகள் !
விழும் சிறுதூறல்கள்
உன் வியர்வைத்துளி !
இரவில் பொழியும் பனித்துளி
உன் மௌனத்தின் மறுமொழி !
என்னவனே !
உன்னை நினைத்து
எழில் கொஞ்சும் இயற்கையை மறந்தேன்!
மழை என் மீது விழுவதை மறந்தேன் !
உணவருந்துவதை மறந்தேன் !
எல்லாம் மறந்தேன் !

“உன் நினைவு ஒற்றை தவிர “

– க.பூமணி, செஞ்சி, விழுப்புரம்

You may also like...

12 Responses

  1. R. Brinda says:

    பூமணி அவர்களின் கவிதையில் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் தேடித் தேடிப் போட்டு இருக்கிறார். அருமை! பாராட்டுக்கள்!!💐💐💐

  2. மணிகண்டன் சுப்பிரமணியம் says:

    கவிதையின் காதல் சொட்டில் கரைந்து நிற்கிறது மனம்..!
    வாழ்த்துக்கள் புது கவி பூமணி..!

  3. தி.வள்ளி says:

    எல்லாம் மறந்தேன் கவிதையில் என்னை மறந்தேன்..அருமையான வார்த்தை பிரவாகம்…வாழ்த்துகள்.கவிஞருக்கு

  4. Kavi devika says:

    வாழ்த்துகள்… அருமையான முயற்சி….

  5. S. Rajakumari chennai says:

    பூமணி அவர்களின் கவிதை பூக்களாய் மணக்கிறது

  6. Ushamuthuraman says:

    பூமணி அவர்களின் கவிதை வரி அனைத்தும் அருமை. வரிக்கு வரி அவருடைய எண்ணக் குவியல்களை அழகாக எழுதியிருப்பது அவருடை எதிர்கால வெற்றிக்கு அஸ்திவாரம் போல உள்ளது. மேன்மேலும் கவிதை வானில் ஜொலிக்க வாழ்த்துகிறேன்

  7. Sandhiya says:

    அருமை….எதிர்கால கவிஞர்….மேன்மேலும் எழுத்துக்கள் வடிக்க வாழ்த்துகள்

  8. பிரகாசு.கி., அவிநாசி says:

    சகோதரி பூமணி உங்களுடைய கவிதை வரிகள் ஒவ்வொன்றும் எழில்மிகு இயற்கை விட அழகாக இருந்தது…. வாழ்த்துக்கள்அன்பு சகோதரி

  9. Dinesh says:

    இனிமையான கவிதை

  10. அருமையான வரிகள் ! வாழ்த்துக்கள் தோழி…..

  11. S. Meenakshi says:

    Arumayaga irukiradhu unadhu kavidhai

  12. மீனாட்சி says:

    கவிதை நன்றாக உள்ளது பூமணி வாழ்த்துக்கள் .