ஆகரி | எழுதுகோல் – கவியின் கவிதை தொகுப்பு

தென்காசியை சேர்ந்த கவி தேவிகா அவர்களின் கவிதை தொகுப்பு நமது நீரோடைக்காக – akari eluthukol kaviyin kavithai

puthumai pen tamil story

ஆகரி

எல்லையில்லா
மகிழ்ச்சியின்
குவியல் …..
அளவற்ற
அன்பின்
புதையல்….
அனைத்து
துன்பங்களின்
சிதையல்…
அணுகூட
அசைவதில்லை
அவளின்றி….
மனிதம்
உயர்வதில்லை
அவளன்றி……

akari eluthukol pen kavithai

எழுதுகோல்

உனதன்பு தீண்டலின்றி
உள்ளத்து உணர்வுகளும்….
உயிர்ப்பிக்கும் கவிதைகளும்…..
கண்ணிறைக்கும் கற்பனைகளும்…..
கற்பனைக்கெட்டாத காட்சிகளும்……
உன்னை இயக்கும் “மை”யும்…..
என்னிதயம் இயக்கும் ” மெய் ” யும்…
உலர்ந்துதான் போகின்றன…………
பாலைநிலம் போல…….. – akari eluthukol kaviyin kavithai

– கவி தேவிகா, தென்காசி.

You may also like...

9 Responses

 1. N.கோமதி says:

  அலைபேசி வரவால் எழுதுகோல்கள், எழாமல் சோம்பி படுத்தே கிடக்கின்றன என்று உணர்த்தி விட்டார்.

 2. உஷாமுத்துராமன் says:

  ஆகரி, எழுதுகோல் இரு கவிதைகளும் அருமை. கண்ணியிலும், அலைபேசியிலும் தடலடச்சு செய்வதை விரும்பும் மக்களுக்கு எழுதுகோலின் அவசியத்தை உணர்த்தியது அருமை. பாராட்டுக்கள்

 3. மணிகண்டன் சுப்பிரமணியம் says:

  எழுதுகோல் எண்ணிலடங்கா கற்பனைக்கு ஓர் உறவுகோல் என உணர்த்திய கவிக்கு வாழ்த்துக்கள்.

 4. தி.வள்ளி says:

  ஆகரி..பெண்ணின்றி அணுவும் அசையாது..தெளிவாக உணர்த்தியது.
  எழுதுகோல் பயன்பாடு குறைந்து வருவது
  வருந்தற்குரியதே..
  யதார்த்த கவிதைகள்…கவிக்கு என் வாழ்த்துகள்

 5. ராஜகுமாரி போருர் says:

  எழுதுகோல் இல்லாமல் நாம் எதுவும் செய்ய முடியாது

 6. R. Brinda says:

  ஆகரி, எழுதுகோல் என்ற இரு கவிதைகளும் மிக அருமை. எழுதுகோல் இருப்பதையே தற்சமயம் மக்கள் மறந்து வருகிறார்கள் அலைபேசியின் வரவினால்.

 7. SRINIVASAN says:

  இரண்டு கவிதைகளும் மிகவும் அருமை

 8. ஹேமநாதன் says:

  உனதன்பு தீண்டலின்றி…
  உன்னை இயக்கும் “மை”யும்…..
  என்னிதயம் இயக்கும் ” மெய் ” யும்…
  வரிகள்…சிறப்பு
  2 கவிதைகளும்..அருமை…
  தோழிக்கு எனது வாழ்த்துக்கள்

 9. கணேஷ்பாபு ஜோதிசக்தி says:

  அருமையான வரிகள் மிகச் சிறப்பு வாழ்த்துகள் அக்கா