விவாக (ம்) ரத்து…. (குட்டி கதை)

மருத்துவத்துறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட நினைவுச் சிறகுகள் புத்தகத்தின் ஆசிரியர் வள்ளி அவர்களின்  சிறுகதை நமது நீரோடைக்காக – vivagam vivagarathu

vivagam vivagarathu

வெளியே வானம் இருண்டிருந்து.வசுந்திரா தேவியின் மனமும் கருத்திருந்த வானத்தைப் போலவே கனத்திருந்தது.கல்யாண வயதில் இரு பெண்களை வைத்துக் கொண்டு எத்தனை விவாகரத்து வழக்குகளில் விவாகரத்து வழங்கி தீர்ப்பளிக்கிறேன்.மனம் கசந்தது.

இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார்

ஃபேமிலி கோர்ட் ஆரம்பித்தது. நீதிபதி வசுந்தராதேவி உள்ளே நுழைய… எல்லோரும் எழுந்து நின்றனர். வசுந்தரா தேவி சம்யுக்தா , ராகவ் வந்திருப்பதை கவனித்துக்கொண்டார். அவர்கள் விவாகரத்து வழக்கில் அன்று தீர்ப்பு. மூன்று முறை கவுன்சிலிங் போய் வந்தாலும் அவர்கள் முடிவில் எந்த ஒரு மாற்றமும் இல்லை.

நான்காவது வழக்காக அவர்கள் விவாகரத்து வழக்கு வர, வசுந்தராதேவி தீர்ப்பளித்தார்… ” பலமுறை பேசியும், இருவரின் முடிவிலும் எந்த மாற்றமும் இல்லாததால், இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளிக்கிறேன்” கூறும் போதே மனம் வலித்தது – vivagam vivagarathu.

வீட்டிற்குள் வசுந்திரா தேவி அலுப்பாக நுழைய…., சப் ரிஜிஸ்டரராக வேலை பார்க்கும் அவள் கணவனும் உள்ளே நுழைந்தார்.” ரொம்ப அலுப்பா இருக்கு வசுந்தரா. இன்னைக்கு மட்டும் நாலு கல்யாணங்கள். அதுல ரெண்டு காதல் கல்யாணம் வேற.. பண்ணி வச்சிருக்கேன். போன பிறவியில கல்யாண புரோக்கரா த்தான் பிறந்திருப்பேன் போல!” என்று கூறி சிரிசிரியென சிரித்தார்.

வசுந்த்ரா தேவியின் மனமும் லேசாக.. அவரும் சிரிக்க ஆரம்பித்தார், விதியின் விளையாட்டை நினைத்து…

– தி.வள்ளி, திருநெல்வேலி

You may also like...

13 Responses

 1. R. Brinda says:

  எப்போதுமே நமது குறிக்கோளும் நமது தொழிலும் ஒன்றுக்கொன்று எதிராகத் தான் இருக்கும். இதைப் பிரதிபலிப்பதாய் இருக்கிறது விவாகம் (ரத்து) கதை. அருமை!!

 2. உஷாமுத்துராமன் says:

  விவாக(ம்) ரத்து கதை படித்து மனம் வலித்தது. விட்டு கொடுத்து வாழ்ந்து இல்லறத்தை நல்லறமாக மாற்ற தெரியாத கணவன் மனைவி எடுக்கும் அவசர முடிவு என்று நினைத்து வேதனைபடத்தான் முடிந்தது. கணவன் மணம் முடிக்க மனைவி விவாகரத்து செய்ய இரு முரண்பாடான தொழில் செய்யும் கணவன் மனைவி கதை ரசிக்க வைத்தது. பாராட்டுக்கள்

 3. Kavi devika says:

  விவாக ரத்து . அருமையான முரண்பாட்டை எடுத்துரைக்கும் இயல்பியல் மற்றும் நடைமுறை கதை. எதார்த்தம் மிக அழகு.

 4. என்.கோமதி says:

  யதார்த்தம் அப்படியே..வாழ்த்துக்கள் வள்ளி

 5. முத்துசாமி says:

  வாழ்த்துக்கள் சகோ, சிறு கதையானாலும் பெரிதாய் மனதில் நின்றது

 6. சுவேதா says:

  முறன்பாடு irony என்று ஆங்கிலத்தில் கூறப்படும் விஷயம் கதையாக…. நாம் வாழ்க்கையில் பல விதங்களில் இப்படி தான் உணர்கறோம்

 7. ராஜகுமாரி போருர் says:

  ஒருவர் சேர்க்கிறார் மற்றவர் பிரிக்கிறார் பரவாயில்லை இருவரும் தான் பிரிக்கக்ககூடாது

 8. நிர்மலா says:

  அருமை.

 9. Jayanthi says:

  சிறப்பு

 10. தி.வள்ளி says:

  அன்பு நண்பர்களுக்கு நன்றி..தங்கள் திறனாய்வு மிகப் பெரிய ஊக்கமாக எனக்கு அமையும்…நன்றி..

 11. Vysali says:

  மிக அழகான அருமையான கதை..

  இரு வேறு தொழில் செய்யும் கணவனும் மனைவியும் கூட சிறப்பான தம்பதிகளாக இருக்க முடியும் என்ற தம்பதி ஒரு வகை..

  நான்கு முறை மறு பரிசீலனை செய்தும் சேர மாட்டோம் என்ற தம்பதி இன்னொரு வகை..

  யதார்த்தமாக வேறுபாட்டை காட்டியுள்ளார்..

  அனைத்து தொழிலிலும் சலிப்பதற்க்கான ஒரு காலம் வரும் போது அதை யதார்த்தமாக எதிர்கொண்டால் அழகாய் கடக்கலாம் என சிறப்பாக கொடுத்து இருக்கிறார் வள்ளி..

 12. மணிகண்டன் சுப்பிரமணியம் says:

  நம்ம ஊர் வட்டார மொழியில் சொல்வதென்றால்”இரண்டுக்கும் சரியா போய்டுச்சு” போங்க…!
  *நல்ல கற்பனை வாழ்த்துக்கள்…*

 13. Boomadevi says:

  என்னமோ போங்க….வாழ்க்கை இப்படித்தான் புரியாத புதிர்.