வார ராசிபலன் ஆனி 28 – ஆடி 03

தடுக்கி விழும் திட்டுகளையும் படிக்கட்டுகளாக மாற்றிவிடுவது தன்னம்பிக்கையும், பக்தியுமே – rasi palangal july 12 – july 18

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சுக்கிர பகவான் நன்மை செய்வார். ஏற்றத்தாழ்வு உள்ள வாரமாகும். உறவினர் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு தாய்வீட்டு சீதனம் கிடைக்கப்பெறும். பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் பழைய பாக்கி வசூல் ஆகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல வெற்றி பெறுவார்கள். விவசாயத்தில் சுமாரான பலனையேஎதிர்பார்க்கலாம்.
வழிபாடு: முருகப்பெருமான் வழிபாடு செய்யவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் புதன் பகவான் நன்மைகள் செய்வார். எடுக்கும் செயலில் நிதானம் தேவை. குடும்பத்தில் கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போகவும். உறவினர்களால் வீண் அலைச்சல் உருவாகும். பணியாளர்கள் எதிர்பார்த்த இடமாறுதல் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் தேவைகள் பூர்த்தி ஆகும். மாணவர்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவார்கள். விவசாயத்தில் லாபம் அதிகரிக்கும்.
வழிபாடு: நவகிரக வழிபாடு செய்யவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் புதன் மற்றும் செவ்வாய் பகவானே நன்மை செய்வார்கள். குடும்பத்தில் புதிய முயற்சி வெற்றி அடையும், புதுமனை குடிசெல்ல வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. பணியாளர்கள் சகாக்களிடம் பணிவாக நடந்துகொள்ளவும். தொழில் வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். கலைஞர்கள் விரயத்தை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் நல்ல வெற்றி பெறுவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பில்  நல்ல வருமானம் ஈட்டித்தரும்.
வழிபாடு: அம்மன் வழிபாடு செய்யவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வரம் சுக்கிர பகவான் நன்மை செய்வார். குடும்ப அடிப்படை வசதிகள் மேம்படும். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும். பெண்களுக்கு தாய்வீட்டு சீதனம் கிடைக்கும். பணியாளர்கள் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வார்கள். தொழில் வியாபாரம் வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் விடாமுயற்சி செய்ய வேண்டியிருக்கும். விவசாயத்தில் நல்ல வருமானம் கிடைக்கும்.
வழிபாடு: சனிபகவான் வழிபாடு செய்யவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் குரு பகவான் நன்மை செய்வார். எதிர்பாராத நல்ல செய்தி வந்து சேரும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. சொத்து விவகாரம் முடிவுக்கு வரும். பணியாளர்கள் நிறைவாக காணப்படுவார்கள்.  தொழில் வியாபாரம் லாபம் ஈட்டித்தரும்.  கலைஞர்கள் தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்கள் புதிய உச்சத்தை ஏட்டுவார்கள். விவசாயத்தில் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காது.
வழிபாடு: பெருமாள் வழிபாடு செய்யவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் கேது பகவான் நன்மை செய்வார். குடும்பத்தில் மனக்கசப்புகள் நீங்கும். தைரியமான முடிவுகளை எடுக்க நேரிடும். பணத்தேவைகள் பூர்த்தியடையும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைய வாய்ப்புள்ளது. தொழில் வியாபாரம் புதிய பொருட்கள் விற்பனைக்கு வரும். கலைஞர்கள் தேவைகள் பூர்த்தியடையும். மாணவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவார்கள். விவசாயத்தில் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.
வழிபாடு: பெருமாள் வழிபாடு செய்யவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் செவ்வாய் பகவானே ராஜயோக  நன்மையே செய்வார். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும், எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பணியாளர்கள் நிலுவைப்பணியை முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் தோல்வியை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் வெற்றிப்பாதையில் செல்வார்கள். விவசாயத்தில் லாபம் சுமாராக இருக்கும்.
வழிபாடு: தினமும் காலை சூரிய வழிபாடு செய்யவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் குரு பகவான் நன்மை செய்வார். குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியடைய தாமதமாகலாம், ஒப்பந்தங்களை தள்ளிப்போடுவது நல்லது. பெரியோர் நல்லாசி கிடைக்கும். பணியாளர்கள் கவனத்துடன் செயல்படவும். தொழில் வியாபாரத்தில் விட்டுக்கொடுத்து போகவும். கலைஞர்கள் வெளியூர் பயணம் செல்லவேண்டி இருக்கும். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயத்தில் புதிய வருவாய் கிடைக்கும்.
வழிபாடு: துர்க்கை வழிபாடு செய்யவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குரு பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் உடல் நலனை பார்த்துக்கொள்ளவும். எடுத்த முயற்சியில் வெற்றி காண்பீர்கள். மனைவியின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. பணியாளர்கள் நிலுவைப்பணியை முடிப்பீர்கள். தொழில் வியாபாரம் நல்ல வளர்ச்சி அடையும். கலைஞர்கள் சிரமப்பாட வேண்டியிருக்கும். மாணவர்கள் இரட்டிப்பு வெற்றி பெறுவார்கள். விவசாயம் நல்ல விளைச்சல் தரும்.
வழிபாடு: பைரவர் வழிபாடு செய்யவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் ராகு பகவான் நன்மை செய்வார். குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்படலாம், அரசாங்க எதிர்பார்ப்பு நிறைவேறும். பயணத்தில் கவனம் தேவை. பணியாளர்கள் இடமாற்றம் அடைவார்கள். தொழில் வியாபாரம் லாபம் நஷ்டம் சமமாக இருக்கும். கலைஞர்கள் உற்சாகமாக காணப்படுவார்கள். மாணவர்கள் அலைச்சலை சந்திக்க நேரிடும். விவசாயத்தில் நடுத்தர வருமானம்கிடைக்கும்.
வழிபாடு: சிவ வழிபாடு செய்யவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் குரு பகவான் நன்மை செய்வார். குடும்பத்தில்  நல்ல மகிழ்ச்சி இருக்கும், இருந்து வந்த தடைகள் விலகி வெற்றி பெரும். பொறுமை கடைபிடிக்கவும். பணியாளர்கள் மறைமுக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரம் போட்டிகள் குறையும். கலைஞர்களுக்கு  குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டுதலை பின்பற்றவும். விவசாயத்தில் நல்ல வருவாயை எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: பெருமாள் வழிபாடு செய்யவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும், தேவைகள் நிறைவேறும். உடல் நலத்தில் கவனம் தேவை. பணியாளர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பை பெறுவார்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். கலைஞர்கள் அரசு உதவி பெறுவார்கள். மாணவர்கள் நல்ல வெற்றி பெறுவார்கள். விவசாயத்தில் இரட்டிப்பு மகசூல் கிடைக்கும்.
வழிபாடு: அனுமன் வழிபாடு செய்யவும் – rasi palangal july 12 – july 18.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

2 Responses

  1. S. Rajakumari chennai says:

    ராசி பலன்கள் நன்கு புரியும் வகையில் இருந்தது நன்றி.

  2. தி.வள்ளி says:

    ராசிபலன்கள் அறிந்து கொண்டோம்.நேர்மறையாக ககூறுவது சிறப்பு