வார ராசிபலன் ஆனி 27 – ஆனி 32
ஆனி மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal july-11 to july-17
மேஷம் (Aries):
இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். சில சமயங்களில் சிக்கலில் இருப்பீர்கள். நீண்ட நாளைய பிரச்சினை முடிவுக்கு வரும். குடும்பத்தில் குழப்பங்கள் நிலவும். பணியாளர்கள் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவார்கள். வியாபாரம் முன்னேற்றம் அடையும். கலைஞர்கள் நடுநிலை வகிப்பார்கள். மாணவர்கள் குடும்பத்தில் பாராட்டுகளை பெறுவார்கள். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.
ரிஷபம் (Taurus):
இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். மன நிம்மதி அடைவீர்கள். பிறருக்கு உதவி செய்ய ஆர்வம் கொள்வீர்கள். செலவுகள் சற்று உயரும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வீர்கள். பணியாளர்கள் நிதானமாக செயல்படவும். வியாபாரத்தில் குறைந்த லாபமே கிடைக்கும். கலைஞர்கள் உற்சாகம் அடைவார்கள். மாணவர்கள் எதிலும் கவனமாக செயல்படவும். விவசாயம் லாபம் அடையும்.
பரிகாரம்: லட்சுமி வழிபாடு சாலச்சிறந்தது.
மிதுனம் (GEMINI):
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். எடுத்த காரியம் வெற்றி அடையும். பணவரவு நன்றாக இருக்கும். சுப செலவுகள் அதிகரிக்கலாம். பணியாளர் வேலையில் கவனம் செலுத்தவும். வியாபாரம் குறைந்த லாபமே கிடைக்கும். கலைஞர்கள் ஒற்றுமையுடன் காணப்படுவார்கள். மாணவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். விவசாயத்தில் குடும்ப தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.
கடகம் (Cancer):
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். சுப நிகழ்ச்சி ஒன்று நடக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். பணியாளர்களின் திறன் அதிகரிக்கும். வியாபாரத்தில் அளவான லாபம் கிடைக்கும். கலைஞர்கள் அரசாங்க ஆதரவு கிடைக்கப் பெறுவார்கள். மாணவர்கள் கல்வியில் உயர்வார்கள். விவசாயம் உச்சம் அடையும்.
பரிகாரம்: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.
சிம்மம் (LEO):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். தேவையான பண வரவு இருக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குவீர்கள். முயற்சிகள் வெற்றி அடையும். உடல்நலம் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் கடின வேலை செய்ய வேண்டியிருக்கும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்களுக்கு கடின உழைப்பு தேவை. விவசாயம் நஷ்டம் அடையும்.
பரிகாரம்: சிவ வழிபாடு செய்து வரவும்.
கன்னி (Virgo):
இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். கடின உழைப்பு தேவைப்படும். பணவரவு சுமாராக அமையும். செலவுகள் சற்று உயரும், மற்றவர்களிடம் கவனமாக பேசவும். பணியாளர்கள் வீண் அலைச்சலை எதிர்கொள்வார்கள். வியாபாரத்தில் நிறைய லாபம் கிடைக்கும். கலைஞர்கள் லாபம் அடைவார்கள். மாணவர்கள் புதிய சிந்தனையுடன் செயல்படுவார்கள். விவசாயத்தில் அதிக லாபம் எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.
துலாம் (Libra):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். செலவுகள் வரலாம் மனக் குழப்பங்கள் இருக்கும். பணியாளர்கள் எச்சரிக்கையாக செயல்படவும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கலைஞர்கள் தேவை பூர்த்தி அடையும். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: திங்கட்கிழமை அன்று சிவ வழிபாடு செய்து வரவும்.
விருச்சிகம் (Scorpio):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். எடுத்துக்கொண்ட செயல்களில் வெற்றி காணலாம். எதிலும் கவனமாக செயல்படவும். மற்றவர்களை எதிலும் பொருட்படுத்த வேண்டாம். பணியாளர்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். கலைஞர்கள் பாக்கியவான்கள் திகழ்வார்கள். மாணவர்கள் உற்சாகம் அடைவார்கள். விவசாயம் காய்கறி சம்பந்தப்பட்டவை நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.
தனுசு (Sagittarius):
இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு சுமாராக அமையும். பூர்வீக பிரச்சனைகள் வரலாம். எதிலும் கவனமாக செயல்படவும். பணியாளர்களுக்கு வேலை அதிகரிக்கும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் அதிக கவனம் செலுத்தவும். விவசாயத்தில் நஷ்டம் அடையலாம்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.
மகரம் (Capricorn):`
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படலாம். ஆயுள்பலம் நீட்டிக்கலாம், வரவும் செலவும் சமமாக அமையும். பயணத்தின் போது தடங்கல் வரலாம். பணியாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் குறைந்த லாபமே கிடைக்கும். கலைஞர்கள் சிரமப்படுவார்கள். மாணவர்கள் எச்சரிக்கையாக செயல்படவும். விவசாயம் கீரை சம்பந்தப்பட்டவை நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: சிவ வழிபாடு செய்து வரவும்.
கும்பம் (Aquarius):
இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். புதிய உற்சாகம் அடைவீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. சகோதரர்கள் ஆதரவு பெருகும். பணியாளர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரம் வழக்கம் போல் செயல்படும். கலைஞர்களுக்கு சத்துரு பயம் ஏற்படலாம். மாணவர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.
மீனம் (Pisces):
இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். புதிய நண்பர்கள் உருவாவார்கள். குடும்பத்தில் சாதகமான நிலை உருவாகும். பணியாளர்களுக்கு வேலை குறையும். புதிய உத்தியை பயன்படுத்தி வியாபாரம் பெருகும் கலைஞர்கள் ஏற்றம் அடைவார்கள். மாணவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். விவசாயத்தில் குடும்ப தேவைகள் பூர்த்தி அடையும்.பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வருதல் சாலச்சிறந்தது – rasi-palangal july-11 to july-17
– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு)