விநாயகர் சதுர்த்தி 2020

விநாயகர் சதுர்த்தி பாடல் மற்றும் விநாயகர் பற்றிய பல அறிய தகவல்கள் – vinayagar sathurthi 2020

vinayagar sathurthi 2020

வெள்ளை விநாயகர்

விநாயகரரை மக்கள் மாவு வெல்லத்தில் பிடித்து வழி படுவது போல், தேவர்கள் கடல் நுரையால் உருவாக்கிய விநாயகரே திருவலஞ்சுழி விநாயகர், இவருக்கு பச்சைக்கற்பூரம் தூவுவதை தவிர வேறு அபிஷேகம் கிடையாது. இக்கோயில் திருவலஞ்சுழியில் உள்ளது.

ஆயிரமும் விநாயகரும்

கும்பகோணத்தில் உள்ள விநாயகருக்கு கரும்பாயிரம் கொண்ட விநாயகர் என்றும்,
திருவண்ணாமலை ஆலயச் சுவரில் ஒரு ஜான் உயரமே கொண்ட விநாயகருக்கு ஆயிரம் யானை திறை கொண்ட விநாயகர் என்றும்,
திருநெல்வேலி நகரில் எண்ணாயிரம் பிள்ளையார் என்றும்,
ஆறுமுகமங்கலம், கிளாக்குளம் ஆகிய ஊர்களில் ஆயிரத்தெண் விநாயகர் என்னும் பெயர்களில் வழிபடுகின்றார்கள்.

முக்குறுணி விநாயகர்

மதுரை, திருச்செந்தூர், சிதம்பரம், குமரக்கோட்டம் முதலிய திருத்தலங்களில் முக்குறுணி விநாயகர் மிகப் பெரிய திருவுருவம் கொண்டு விளங்குகிறார்.
நன்றி ராஜகுமாரி, சென்னை.


நீரோடை சிறப்பு பதிவு

முக்குறுணி விநாயகர் மீனாட்சி அம்மன் சன்னதியிலிருந்து, சுவாமி சன்னதிக்குச் செல்லும் வழியில் 8 அடி உயரத்தில் காட்சி தருகிறார்.
ஒரு குறுணி என்பது 6 படி. இவ்விநாயகருக்கு 3 குறுணி, அதாவது 18 படி பச்சரிசி மாவால் ஆன கொழுக்கட்டை, விநாயகர் சதுர்த்தி நாளன்று படைக்கப்படுகிறது. எனவே இவருக்கு முக்குறுணி விநாயகர் என்ற பெயர் நிலைத்துவிட்டது – vinayagar sathurthi 2020.

விநாயகர் சதுர்த்தி பாடல்

பெற்றோரே உலகமென்றாய்,
உலகமெல்லாம் உன் வீடானது.

நீ இல்லாத ஊர் இல்லை,
நீ இடம்பெறாத பூஜைகள் இல்லை.

காலங்களை வென்றாய்,
காக்கை வாகனனையும் வென்றாய்.

நெடுந்தூரப் பயண
வழி துணை நீ!
தினமும் தரிசனம்
தரும் கரிசனம் நீயே
விநாயகனே போற்றி !! – நீரோடை மகேஷ்


பிள்ளையார் என்ற பெயர் வந்ததன் கதை

ஒரு முறை பார்வதி தேவி குளிக்க செல்லும் பொழுது காவலுக்கு ஆள் இல்லாததால், தன் உடலில் உள்ள அழுக்கால் ஒரு சிறுவன் உருவத்தை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிற்க வைத்துச் சென்றார்.

தியானம் முடிந்தபின் கைலாய மலையில் இருந்து வந்த சிவபெருமானை உள்ளே செல்ல விடாமல் தடுத்த அச்சிறுவனை கண்டு சிவபெருமான் சினம் கொண்டு தன் சூலத்தால் தலையை துண்டித்தார். பின்னர் அச்சிறுவன் பார்வதிதேவியின் மகன் என்பதை அறிந்து அச்சமுற்ற சிவபெருமான் பார்வதிதேவி குளித்துவிட்டு வரும்முன் உயிர்ப்பிக்க முடிவெடுத்தார். தன் பூதகணங்களை அழைத்து முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை கொண்டு வருமாறு உத்தரவிட்டார். பூதகணங்களும் யானையை பார்த்ததால் யானையின் தலையை கொண்டு வந்தனர்.

சிவபெருமான் யானைத் தலையைப் பொருத்தி அச்சிறுவனுக்கு உயிர் கொடுத்தார். குளித்து விட்டு வந்த பார்வதி இந்தப் பிள்ளை யார் என்று கேட்டதால் இவருக்கு பிள்ளையார் என்ற பெயர் சூட்டி தன் மகனாக ஏற்றுக் கொண்டார் சிவபெருமான்.

நீரோடையின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

You may also like...

5 Responses

  1. Rajakumari says:

    முழுமுதல் கடவுள் விநாயகர் பற்றிய தகவல்களை அறிந்து மகிழ்ந்தோம்

  2. தி.வள்ளி says:

    விநாயகர் சதுர்த்தி பதிவுகள் அருமை.நீரோடை அன்பர்கள் அனைவரும் விநாயகர் அருள் பெற்று வாழ வாழ்த்துகள்

  3. Kavi devika says:

    பாடலும் , கருத்துகளும் மிக சிறப்பு. வாழ்த்துகள்

  4. கு.ஏஞ்சலின் கமலா says:

    நல்ல தகவல்ளை பகிர்ந்தளித்தமைக்கு
    நன்றி.

  5. மாலதி நாராயணன் says:

    விநாயகர் அபூர்வ தகவல்கள் மிகவும் அருமை