காதல் வாழ்க்கையின் இறுதி நாள் வரை

கவிஞர் பூமணி அவர்களின் “தோழனின் காதல் வாழ்க்கையின் இறுதி நாள் வரை” கவிதை வரிகள் – kaathal vaazhkkai varai

kaathal vaazhkkai varai

நண்பனே !
பல ஜென்மங்கள் வாழ்ந்த மயக்கம்!
உன் விழியை ஊடுருவி சென்ற போது !
உன் விழியில் விழுந்த நொடி !
மறந்துவிட்டேன் என்னை !

உன் கண் என்ன காந்தமோ !
உன் கருவிழியை கண்டால் !
கவிதை கூட வர மறுக்கிறது !
என் நாணம் ! சூரியனை
கண்ட பனித்துளி போல மறைக்கிறது !

கனவில் கூட அலைகிறேன் !
உன் கண்விழியை காண…..
நிஜத்தில் உன்னை பார்த்தால் !
என் நினைவிழந்து நிற்கிறேன் கனவென்று……
நீ தந்த மாற்றம் !
கணித தேற்றம் போல் நீண்டு கொண்டே செல்கிறது !

உன் நினைவால் !
மாற்றத்தை தந்துவிட்டு !
எங்கு சென்றுவிட்டாய் என்னவனே!
காத்திருப்பேன்……
கற்பனையை மெருகூட்டும் கவிஞனை போல !
உன்” தோழியாக “அல்ல !
இதயசிறையில் உன்னை
சிறைவைக்க விரும்பும் !
“உன் காதலியாக “!….

– க.பூமணி, செஞ்சி, விழுப்புரம்

You may also like...

5 Responses

  1. Kavi devika says:

    அருமையான காதல் கவி வரிகள்… வாழ்த்துகள் கவியே

  2. R. Brinda says:

    கவிஞர் பூமணியின் “காதல் வாழ்க்கையின் இறுதி நாள் வரை” வரிகள் மிக அருமையாக இருக்கிறது.

  3. தி.வள்ளி says:

    இதயச் சிறையில் காதலரை சிறை பிடிக்க நினைக்கும் காதலியின் உணர்வுகள் அருமை…முதல் வரியிலேயே தன் முத்திரையை பதிக்கிறார். கவிஞர் பூமணிக்கு வாழ்த்துக்கள்.

  4. SUBRAMANIYAM says:

    கவிஞரின் வரிகள் சில நினைவலைகளை சீண்டிச் செல்கிறது வாழ்த்துக்கள்…!

  5. கு.ஏஞ்சலின் கமலா says:

    அருமையான படைப்பு. இனிமை.