சிறுகதை – மிருக மனதிற்குள் ஈரம்

ஒரு நடுத்தர வர்க்கத்து நபர் ஒருவர் தனது ஆடு மாடுகளுடன் ஆசையாக ஒரு புலிகுட்டியையும் வளர்த்து வந்தார்.
புலிக்குட்டி சாதாரணமாக அந்த ஆடு, மாடுகளுடனும் அதன் குட்டிகளுடனும் விளையாடி நேரத்தை கழிக்கும்.

அந்த புலிகுட்டிக்கு அந்த ஆடு மற்றும் குட்டிகளின் மேல் மாமிச ஆசை வராமல் இருக்க அதனை ஒன்றாகவே வளர்க்கிறார். புலிக்குட்டியும் அவ்வாறே எந்த எண்ணமும் இல்லாமல் நடந்து கொண்டது.

ஒரு நாள் அந்த புலிகுட்டிக்கு மாமிச ஆசை வரவே, அது தன் முதலாளியிடம் சென்று கேட்டது. அன்று முதல் ஒரு ஆட்டுக் குட்டியை மட்டும் ஒரு தனி குடிலில் வைத்து வளர்க்க ஆரமித்துவிட்டு புலிகுட்டியிடம் சொல்கிறார்,

“என்றாவது ஒரு நாள் உனக்கு மாமிச ஆசை தலைக்கேறும் போது இந்த குடிலின் கதவை சேதப்படுத்திவிட்டு அந்த  ஆட்டு குட்டியை தின்றுவிடு என்று”
புலிக்குட்டியும் அதை ஒப்புக்கொண்டது.

நாட்கள் நகர, ஒரு நாள் அவர் வெளியூர் சென்ற சமயத்தில் அந்த புலிகுட்டிக்கு மாமிச ஆசை தலைக்கேறுகிறது , உடனே முதலாளி சொன்னது நினைவுக்கு வர, அந்த குடிலின் கதவை சேதப்படுத்தி உள்ளே இருந்த ஆட்டுக்குட்டியை (இருள் சூழ்ந்த அறையில் உன்ன பழக்கமில்லாமல்) வெளியே இழுத்து வந்தது. அப்படி வந்த புலிகுட்டிக்கு வெளியே துள்ளி விளையாடித்திரிந்த ஆட்டுக்குட்டியை பார்த்ததும், சந்தேகம்  தலை சுற்றி போக…
இரண்டு குட்டிகளும் ஒரே மாதிரி தோற்றமளிக்க ! என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றது.
உடனே மனதில் ஒரு சிந்தனை, நாம் ஒன்றாக விளையாடி இருக்கிறோம் எனவே அவ்விரண்டையும் நுகர்ந்து பார்த்தால் வித்தியாசம் கண்டுகொள்ள(ல்ல)லாம் என்று முடிவு செய்து அதையும் பார்க்க இரண்டு ஆட்டு குட்டிகளின் வாசம் பழகிய வாசமாக தெரிகிறது.

இரண்டு குட்டிகளிடமே பழகிய எண்ணம் வளர அந்த ஆட்டுக்குட்டியை தன் பிடியில் இருந்து விட்டுவிட்டு வீட்டு வாயில் அருகே வந்து, அதற்கும் இதற்கும் உலாவிக்கொண்டு இருந்தது அந்த புலிக்குட்டி.
தன் முதலாளி எப்பொழுது வருவார் என்று எதிர்பார்த்த வண்ணம்.

நீண்ட நேரம் கழித்து முதலாளி வந்தார். வந்ததும் அவரிடம் முறையிட்டது, இரண்டு ஆட்டுகுட்டிகலுமே பழகிய நிறம் மற்றும் வாசமாக தெரிகிறது, நான் குழப்பத்தில் அவைகளை விட்டுவிட்டேன்.
அவரிடம் என்னவென்று விளக்கம் கேட்டது.

சிறுகதை - மிருக மனதிற்குள் ஈரம்

புலிகுட்டியின் முதலாளியும் விளக்கம் சொல்ல ஆரமித்தார் ..
ஒரே ஆட்டின் இரண்டு குட்டிகளை வித்தியாசம் தெரியாமல் இயற்க்கை வண்ணம் தீட்டி, வாரம் ஒரு ஆட்டுக்குட்டி உள்ளே இன்னொரு  ஆட்டுக்குட்டி வெளியே, அடுத்த வாரம் அப்படியே இடம் மாற்றி வைத்து புலிகுட்டியுடன் பழக விட்டதாக சொன்னார். அதானாலேயே இரண்டும் ஒரே வண்ணமாக வாசமாக தோன்றியதாக விளக்கம் தந்தார்.
புலிகுட்டியின் மிருகத்தனமான மாமிச ஆசைக்கு முன்னாள் பழகிய பாசம் வென்று விட்டதாக சொன்னார்.

இதனால் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் மனிதன் மனமும் அப்படிதான். பழகியவர்களை ஒரு மாதிரி பார்ப்பது புதியவர்களை ஒரு மாதிரி பார்ப்பது நடத்துவது.

இது வீடு, அலுவலகம் என தொடங்கி ஒரு வாலிபன் கன்னி பெண்ணை பார்ப்பது வரை விதி விலக்கில்லாமல் பரவி கிடக்கிறது.

இதை மனித மாக்களில் சில மிருகங்கள் புரிந்துகொண்டால் எப்படி இத்தனை பாலியல் பலாத்காரங்களும், கொலைகளும், ஏமாற்றுதலும்  நடக்கும்.

பழகியவனுக்கு ஒரு ஞயாயம் அடுத்தவனுக்கு ஒரு தர்மம் என்று வேறுபாடு பார்த்தல் தவிர்க்கப்படும்.

(சிறுகதை – மிருக மனதிற்குள் ஈரம்)

 

உங்கள் நீரோடை மகேஷ்.

உங்களின் கருத்துகளுக்கு இங்கே Click  செய்யவும்.

You may also like...