நல்ல தீர்வு – சிறுகதை

நீரோடைக்கு கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் எழுதிவரும் உஷாமுத்துராமன் அவர்களின் நம்பிக்கையூட்டும் சிறுகதை. பெற்றோரை விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய சிறுகதை – nambikkai sirukathai.

nambikkai sirukathai

தன் பள்ளி தோழி லதா வீட்டிற்கு வந்ததில் வசந்திக்கு ரொம்ப சந்தோசம்.
“லதா உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆகி விட்டது” என்று சொல்ல “ஆமாம் வசந்தி…. நான் வெளியூரில் கல்யாணம் செய்து கொண்டதால் வெளியூர் போய் விட்டேன். உனக்கு இந்த ஊரிலேயே மாப்பிள்ளை கிடைக்க நீ இங்கேயே இருக்கிறாய்.” என்று பதில் சொன்னாள்.

அப்பொழுது “வசந்தி… அம்மா வசந்தி” என்று வசந்தியின் மாமியார் கூப்பிடும் குரல் கேட்டு “ஒரு நிமிஷம் லதா” என்று சொல்லி ஓடினாள் வசந்தி.
லதாவும் வசந்தியினை பின் தொடர…..”அந்த அறையில் வயதான வசந்தியின் மாமியார் படுத்திருந்தார்.
“அம்மா சொல்லுங்க அம்மா என்ன வேண்டும்” என்று வசந்தி பணிவுடன் கேட்டாள்.

“எனக்கு கொஞ்சம் வெந்நீர் வேண்டும்” என்று சொல்லி விட்டு லதாவை பார்த்து “யாரு” என்று கேட்டார்.
“அம்மா இவ பேரு லதா… என்னோட பள்ளியில் படித்தாள்” என்று சொல்லி விட்டு “இதோ வெந்நீர் கொண்டு வருகிறேன்” என்று சமையல் அறையினை நோக்கி சென்றாள்.

ஜோசியத்தில் நம்பிக்கை உண்டா

பின்னேயே வந்த லதா ” ஏன் உங்க மாமியாருக்கு என்ன வயசு” என்று கேட்டாள்.
“85”
“பரவாயில்லை பார்ப்பதற்கு நல்ல தெம்பாகவும் இருக்காங்க நல்ல தெளிவாகவும் பேசறாங்க… ஏன் படுத்துகிட்டேயே இருக்காங்க” என்று கேட்டாள் லதா.

“ஆமாம் லதா ஒரு குறையும் இல்லை. சுகர் இல்லை பிரஷர் இல்லை. ஆனால் எப்பொழுதும் ஏதாவது வியாதி சொல்லி டாக்டரிடம் அழித்து போனால் செக் பண்ணிவிட்டு ஒன்றுமில்லை என்று அனுப்பி விடுகிறார் என்ன செய்வது” என்று சொன்னாள் வசந்தி.

“வசந்தி உங்க மாமியாருக்கு ஜோசியத்தில் நம்பிக்கை உண்டா”
“ஐயோ….ரொம்பவே உண்டு…. டி.வியில் புத்தத்தில் எந்த ஜோசியம் வந்தாலும் அதை படித்து விட்டு இந்தவாரம் எனக்கு இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என்று சொல்லி புலம்புவாங்க” என்று சொன்னாள் – nambikkai sirukathai.

நல்ல யோசனை

“அப்படியானால் எனக்கு தெரிந்த ஒரு ஜோசியர் இருக்கார் அவரை வரவழைத்து பார்க்க சொல்லுவோம்” என்று சொல்லி விட்டு காதில் மீதி செய்தியினை சொன்னாள்.
“ஆமாம் லதா இது நல்ல யோசனை” என்று சொல்ல சிறிது நேரம் இருந்து விட்டு கிளம்பினாள் லதா.

லதா சொன்ன ஜோசியர் வந்து பார்த்து “அம்மா நான் கொடுக்கும் இந்த விபூதியினை காலையிலும் மாலையிலும் நெற்றியில் இட்டு கொண்டு 12 முறை “ஓம் நாம சிவாயா” என்று சொல்லுங்க நல்லா ஆகி விடுறீங்க ” என்று சொன்னார்.

வசந்தியின் மாமியாரும் அந்த ஜோசியர் சொன்னதை பய பக்தியுடன் செய்ய இதனால் உற்சாகமாக உணர்ந்தார். முன்பு எப்பொழுதும் டாக்டரிடம் போக வேண்டும் என்று சொன்னவர் இப்பொழுது மாறியே விட்டார்.

நல்ல தீர்வு

வசந்தியின் கணவன் கண்ணன் “என்ன வசந்தி அம்மா டாக்டரிடம் போக வேண்டும் என்றும் சொல்வதில்லை ரொம்ப உற்சாகமாக வேற இருக்காங்களே
என்று சொல்ல “ஆமாங்க என்று தோழி லதா கொடுத்த ஐடியாதான் என்று சொல்லி ஜோசியர் சொன்னதை சொன்னாள்”

“அப்படியா. ஆமாம் இதுவும் ஒரு நல்ல அணுகுமுறைதான், இதனால் நல்ல தீர்வு கிடைத்தது” என்று சொல்லி வசந்தியினை பாராட்ட, வசந்தி வெட்கத்தினால் தலை குனிந்தாள்

– உஷாமுத்துராமன், திருநகர்

You may also like...

5 Responses

 1. S. Rajakumari chennai says:

  உண்மையில் ஒரு நல்ல தீர்வு தான் பாராட்டுகள்

 2. Boomadevi says:

  சின்ன கதை.நல்ல யோசனை.அவரவர் போக்கிலேயே அவரவரைக் கையாளணும்.
  வாழ்த்துகள்

 3. தி.வள்ளி says:

  அருமையான கதை..பெரியவர்களின் உளவியல் அறிந்து சகோதரி உஷா முத்துராமன் அவர்கள் கதையை அருமையாய் முடித்துள்ளார்.அவருக்கு என் பாராட்டுகள்.

 4. மாலதி நாராயணன் says:

  கதை நன்றாக உள்ளது
  நிறைய வயதானவர்கள் இப்படித் தான் இருக்கிறார்கள் நல்ல‌ தீர்வு..

 5. R. Brinda says:

  “ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடற மாட்டைப் பாடிக் கறக்கணும்” ன்னு சும்மாவா சொல்லி இருக்காங்க பெரியவங்க. உஷா முத்துராமனுக்குப் பாராட்டுக்கள்!💐💐💐