மழலை – கவிதை தூறல்கள்!
மழலையுடன் பேசினால் மட்டுமல்ல நினைத்தாலே மனமும் உடலும் இனிக்கும், இதோ தி.வள்ளி அவர்களின் வரிகள் கவிதை தூறல்களாக – mazhalai kavithai thooralgal.
கொட்டாவி விட்ட
குழந்தையின் வாய்க்குள் எட்டிப்பார்த்தான்
குட்டி கிருஷ்ணன்
உலகம் தெரிகிறதாவென….
மூக்கோடு மூக்கு
உரசி கொண்டு கொஞ்சியதில், குழந்தையின் நெற்றி பொட்டு
ஆனது
பொம்மையின் திருஷ்டிப் பொட்டு…
அரை மணியில்
காய் பழமானது..
அதிசயம் நடந்தது
மழலையர் சண்டையில்..
குட்டி போடாத மயிலிறகை பத்திரமாய் புத்தகத்தில் மூடியது குழந்தை
நாளைய நம்பிக்கையில்…
குழந்தையின் ரயில் பயணம் சுகமானது, ஏனெனில்
அதற்கு
கட்டணம் உயர்வு கிடையாது …
நிஜத்தில் கொடியில் தொங்கிய அப்பாவின் சட்டை,
நிழலாய் பயமுறுத்தியது
பாப்பாவை
ஜீனி பூதம்ம்ம்ம்…..
– தி.வள்ளி, திருநெல்வேலி
வள்ளி அவர்களின் மழலை பற்றிய கவிதை வரிகளை படுத்ததும் என் மகளின் மழலைப் பருவம் நினைவிற்கு மலரும் நினைவாக வந்தது. அருமையான கவிதை. பாராட்டுக்கள்
அருமையான வரிகள், அனுபவித்து எழுதியதுபோலவும், வாசிக்கும்போது அனுபவிப்பதுபோல தோன்றுகிறது.
மிகவும் அருமையான வரிகள்… குழந்தைகளின் உலகில் மூழ்கிஎடுத்த முத்தான வரிகள்…
கவிதை நன்றாக இருக்கிறது
தங்கள் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே!
எளிய நடை..ரசிக்க வைத்த கவிதை..
வள்ளி அவர்களின் கவிதை மிக அருமையாக இருக்கிறது. ஒவ்வொரு வரியையும் படிக்கும் போது 30 வருடங்களுக்கு முன்பு நான் என் மகளைக் கொஞ்சியது நினைவுக்கு வருகிறது. பாராட்டுக்கள்!!💐💐💐
கவிதை வரிகள் அருமை.