வார ராசிபலன் வைகாசி 30 – ஆனி 05

வைகாசி மாத இதழை (சிறப்பு பதிவை) வாசிக்க சொடுக்கவும் – rasi-palangal june-13 to june-19

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி அடையும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். தேவைகள் பூர்த்தியடையும். பணியாளர்கள் சிரமப்படுவார்கள். வியாபாரம் சுமாராகவே காணப்படும். கலைஞர்கள் அரசாங்க ஆதரவு பெறுவார்கள். மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தில் இணைவார்கள். விவசாயத்தில் வருமானம் உயரும்.
பரிகாரம்: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் நிம்மதி அடைவீர்கள். வேலை மந்த நிலை அடையும். தேவையற்ற பிரச்சனைகள் வரலாம். பெண்கள் கவனமாக செயல்படவும். பணியாளர்கள் வரவு செலவு சரியாக வைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் நன்மதிப்பைப் பெறுவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவகிரக வழிபாடு செய்து வரவும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் கேதுபகவான் நன்மையே செய்வார். புதிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் நிம்மதி அடைவீர்கள். எதிரிகள் சரண் அடைவார்கள். உங்கள் பிரச்சினைக்கு முடிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரம் சுமாராக காணப்படும். கலைஞர்கள் உச்சம் அடைவார்கள். மாணவர்கள் புதிய முயற்சி செய்வார்கள். விவசாயத்தில் குடும்ப தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பிரயாணத்தின் போது கவனம் தேவை. பணவரவு சற்று உயரும், செலவு குறைய வாய்ப்புள்ளது. பணியாளர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் குறைந்த லாபமே கிடைக்கும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்களுக்கு செலவு அதிகரிக்கும். விவசாயம் உயர்வு பெறும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். தெய்வ வழிபாடு செய்வீர்கள். பிரயாணத்தில் கவனம் தேவை. சுப நிகழ்ச்சி ஒன்று நடைபெறும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பணியாளர்கள் சக பணியாளர்கள் மத்தியில் ஒற்றுமை காணப்படும். வியாபாரத்தில் லாபம் உயரும். கலைஞர்கள் போதிய வருமானம் பெறுவார்கள். மாணவர்கள்  புதிய பாடத்தில் இணைவார்கள் விவசாயிகள் நஷ்டம் அடைவார்கள்.
பரிகாரம்: தினம் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். புதிய நட்பு கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. பணியாளர்கள் சக பணியாளர்களிடம் ஒத்துப்போகும். வியாபாரம் சுமாராக காணப்படும். கலைஞர்கள்  வருவாய் இழப்பு அடைவார்கள். மாணவர்கள் சிக்கனமாக செயல்படுவார்கள் விவசாயம் லாபம் அடையும்.
பரிகாரம்: விஷ்ணு பகவான் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். நேர்மை கடைபிடிக்கவும். எங்கும் நற்பெயர் கிடைக்கும். சுப செய்தி ஒன்று வரும். பணியாளர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். வியாபாரம் உயர்வடையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி அடைவார்கள். விவசாயம் நஷ்டம் அடையாது.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அம்மன் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். உடல் ஆரோக்கியமாக காணப்படும். குடும்பத்தில் குழப்பங்கள் வரலாம், கவனம் தேவை. சுப செய்தி ஒன்று வந்து சேரும். பணியாளர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் சுமாராக காணப்படுவார்கள். விவசாயம் நஷ்டம் அடையாது.
பரிகாரம்: பெருமாள் வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்தவாரம் சுக்கிர பகவான் நன்மையே செய்வார். எதிலும் நிதானம் கடைபிடிக்கவும். செலவுகள் சற்று கூடுதலாக இருக்கும். எதிரிகள் சரண் அடைவார்கள். பணவரவு சுமாராக இருக்கும். பணியாளர்கள் உயர்வைப் பெறுவார்கள். வியாபாரம் நடுத்தரமாக அமையும். கலைஞர்கள் நிம்மதி அடைவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் ஆதரவு பெறுவார்கள். விவசாயம் நஷ்டம் அடையும். 
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்கள் கவனமாக செயல்படவும். பணவரவு சுமாராக காணப்படும். புதிய யுக்தியை கடை பிடிப்பீர்கள். பணியாளர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகள் சுமாரான லாபம் பெறுவார்கள். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் நன்மை அடைவார்கள். விவசாயத்தில் குடும்பத் தேவை பூர்த்தி அடையும்.
பரிகாரம்: நரசிம்மர் வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பலன்கள் கிடைக்கப்பெறும், எதிலும் வெற்றி அடைய நீங்கள் பொறுமை காத்து வரவும். பணியாளர்கள் முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரிகள் கவனமாக செயல்படவும். கலைஞர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு அடைவார்கள். மாணவர்கள் உற்சாகம் அடைவார்கள். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

சனிபகவான் நன்மை செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். காரியத்தடைகள் நீங்கும். மக்கள் மத்தியில் செல்வாக்கு அடைவீர்கள். வீடு மாற்றம் வரலாம். பணியாளர்களுக்கு ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் பூஜை பொருள் சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஆற்றல் பிறக்கும். மாணவர்கள் 100 சதம் வெற்றி காண்பார்கள். விவசாயம் நவீன மயமாக்கப்படும்.
பரிகாரம்: தினமும் விநாயகர் வழிபாடு செய்து வரவும் rasi-palangal june-13 to june-19

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...