கவிதை போட்டி 2022_10

போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக கவிதை பகிர்ந்த கவிஞர்கள் அனைவருக்கும் நீரோடை சார்பாக நன்றிகளை சமர்ப்பிக்கிறோம் – kavithai potti 2022-10

வெற்றி பெரும் கவிஞர்களின் பெயர்கள் அடுத்த மாத மின்னிதழில் வெளியிடப்படும்.

kavithai potti

கவிதை போட்டி முடிவுகளை அறிய அதற்க்கென ஏற்படுத்தப்பட்டுள்ள பக்கத்தை வாசிக்கவும்.


கவிதை போட்டி 2022_10 அறிவிப்பு

தீபாவளி
நான் வாழும் சொர்க்கபூமி (சொந்த ஊர் பற்றி)
மேகக்கடன்காரி
சந்தன நிலவு
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
விரும்பிய தலைப்பு

மேற்கண்ட தலைப்புகளில் 15 வரிகளுக்குள் கவிதை எழுதி கீழே உள்ள கட்டங்களில் (கமெண்ட்ஸ் பாக்சில்) பதிவு செய்து கலந்துகொள்ளலாம். எங்கள் (Admin) ஒப்புதலுக்கு (Approve) பிறகு பின்னூட்டத்தில் (comment section இல்) தங்களின் கவிதைகள் வெளியிடப்படும்.

வாட்சாப் அல்லது மின்னஞ்சலில் நேரடியாக அனுப்பப்படும் கவிதைகள் போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

வெற்றி பெறும் இரண்டு கவிஞர்களுக்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படும்

தனி நபரையோ, ஏதேனும் இயக்கத்தையே, அரசியலையோ சாடாமல் கவிதை எழுதுதல் அவசியம் – kavithai potti 2022-10. போட்டி இந்த மாத இறுதி வரை நடைபெறும். ஒரு நபர் எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் பகிரலாம். போட்டியின் நடுவர்களாக நமது நீரோடையின் பிரதான குழு செயல்பட்டு வெற்றியாளரை தேர்ந்தெடுத்து அடுத்த மாதம் முதல் வாரத்தில் (அடுத்த மாத மாத மின்னிதழில்) வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.


குறிப்பு:

1. தங்களிடம் மின்னஞ்சல் கணக்கு இல்லையென்றால் info@neerodai.com என்று (Email) மின்னஞ்சல் கட்டத்தை நிரப்பி கவிதை பகிரலாம்.
2. அலைபேசி எண் போன்ற தங்களின் தனிப்பட்ட விபரங்களை கவிதையோடு இணைத்து பகிர்வதை தவிர்க்கவும்.
3. போட்டிக்கான கவிதை பகிரும் பொது ஏதேனும் இடையூறுகளை சந்தித்தால் எங்கள் வாட்சாப் +919080104218 எண்ணிற்கு தங்கள் கவிதையுடன் தொடர்புகொள்ளவும். வலைத்தளம் (Website) என்ற கட்டத்தை நிரப்ப வேண்டிய அவசியம் இல்லை (Do not need to fill the text box “website”).

தங்களின் பதிவு எங்களுக்கு மிக முக்கியமானது

தாங்கள் பதிவு செய்த கவிதை எங்கள் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்படும். அதற்காக ஒரு நாள் மட்டும் பொறுமை காத்து உதவவும்.

You may also like...

14 Responses

 1. பிரணவ் says:

  மழை.

  உன்னை பிரிந்து, இன்று நூறாவது நாள்.
  அன்று போல் இன்றும் மழை.

  ஜாதியும் ஜாதகமும்
  காலமும் கம்ப்யூட்டரும் என்னை நகர்த்தியதோ, நான்காயிரம் மைல்.

  தொலைந்த வாழ்க்கையை தேடி கடல் கடந்து வந்திருக்கிறேன். கடந்துபோவதல்லவா வாழ்கையின் தத்துவம்.

  உன்னை மறக்கும் முயற்சிகள் தோல்விகளே.
  ஆயினும், நகர்கிறோம் நாட்களும் நானும்.
  பல முறை நாட்களால் மட்டுமே நானும்.

  கலைந்த கனவின் விளிம்பில் தொங்கும் அவல நிலை.

  மழைக்காலத்தின் தொடக்கமாம் இங்கே.
  பெருவாரியாக தென்படும் புன்னகை, எனில் மட்டும் இல்லை.
  காரணம், களவுபோன கனவு.
  கனவாய் போன என் காதல்.

  அவ்வபோது வரும் மழையும்
  உன்னை நினைவுருத்துமென
  குடையும் கையுமாய் அலைகிறேன் நான்.

  ஒன்று மட்டும் புரிந்தது.

  அழுகை நிரந்தர ஆறுதல் இல்லை.
  அழுகை நிரந்தரமோ, ஆறுதலோ இல்லை.
  சிந்தும் கண்ணீரில் அர்த்தமில்லை என தோன்றும் வரை மட்டுமே அழுகையின் துணை.

  நாளை கணம் குறையும் எனும் நம்பிக்கையில் மட்டும் ஓடுகிறது பொழுது.
  காலமும் தூரமும் ஆற்றாத காயங்கள் உண்டோ இப்புவியில்.

  இங்கே ரயில் தாமதிப்பதில்லை.
  காற்றில் மாசில்லை.
  ரோட்டில் குழிகள் இல்லை.
  குப்பைகள் கூளங்கள் இல்லை.
  அவ்வபோது மனிதர்களும் தென்படுவதில்லை.
  எனினும், மனிதம் தென்படுகிறது.

  இம்மாற்றம் ஒன்றே என் ஆறுதல்.

  நினைவுகளின் நடுவே
  குடை விளிம்பின் வழி,
  சிறு தூரல் கையில் விழ உணர்கிறேன்,

  “நீயும் தமிழும் இல்லாத இடம் எதுவும்,
  அந்நியமாகும் எனக்கென்று”.

 2. Sahithyabharathi says:

  உலகில்
  உருவெடுக்கும்
  ஒவ்வொரு
  உயிரும்
  எல்லா போராட்டங்களையும்
  எதிர்கொக்கொள்ள
  வேண்டும்.
  ஏட்டில்
  எழுதப்படாத
  உலக நியதி.

  ஆம்
  உருவம்
  உறுப்பேராததற்க்கு
  முன்பே…
  தாயின் கருவில்.

  வெளிவரும்
  குழந்தை அழுவதும்
  எப்படி
  எதிர்கொக்கொள்ள
  போகிறோம்…
  என்பதாக
  இருக்கலாம்.

  வாழ்க்கையில்
  சாதிக்க
  நினைக்கும்
  அனைவரும்
  எதிர்க்கொள்ள
  வேண்டியதுதான்.

  பள்ளியில் தான்
  குழந்தைகளின்
  லட்சியம்…
  இலக்கு…
  என்ன
  என்பது
  நிர்ணயம் செய்யப்படும்.

  என்னுடைய
  இலக்கும்
  நிர்ணயம் ஆனது
  பள்ளியின் வகுப்பறை.

  ஆம்
  அனைத்து
  பள்ளியிலும்
  ஆசிரியர் கேட்கும் வினா.
  உன் இலக்கு என்ன
  கேட்கப்பட்டது
  என்னிடமும்.

  இன்று வரை
  போராடிக்கொண்டு தான்
  இருக்கிறேன்.
  வேறு வழி
  இல்லாமல் இல்லை.
  இலக்கை நோக்கி…

  இன்று தான் உணர்ந்தேன்
  பாடங்களை
  படித்தால்
  மட்டும் போதாது.

  அடையாள அட்டை
  அணிந்து
  அரசு கல்லூரி
  பேராசிரியர் ஆக
  அரசாங்கம்
  அங்கீகாரிக்கும்.
  என்று
  எதிப்பர்த்த
  அனைவரும்
  கருப்பு கொடி
  அணிந்து
  போராட்டம்.
  வேலை கொடு.

 3. G. Sahithyabharathi says:

  எங்கு
  எப்போது
  என்ன
  சரியா, தவறா
  என
  எதுவும் அறியாமல்
  செய்வபை…
  சில சமயங்களில்
  மிகவும்
  அபத்தமாகிறது.

  ஆம்
  முன்பால்லாம்
  தப்பு செய்தால்…
  சாமி தாண்டிக்கும்.
  என்றிருந்தது
  இப்போது
  காலம்
  மாற மாற…
  சற்று மாறி
  தவறுகள் அதிகமாகிற்று.

  காரணம்
  பரிகாரங்கள்.
  யார்
  என்ன
  தவறு
  செய்தாலும்…
  யாருக்கும்
  அச்சப்படுவதில்லை.

  ஆறறிவுள்ள மனிதன்
  மட்டும் தான்
  இப்படி.
  மற்ற
  உயிரினங்கள்
  எதுவும்
  இப்படி
  நினைத்து கூட
  பார்ப்பதில்லை.

  ஒரு சிங்கம்
  அதன்
  இனத்தினை
  அழித்ததாக
  எந்த
  வரலாறும்
  இல்லை.

  மற்ற உயிரிடம் இருந்து.
  மனிதன்
  வேறுபட்டு
  நிற்கும்
  காரணம்
  ஒன்று.
  பகுத்தறிவு.
  பயன்படுத்தி
  மனிதனாக
  வாழ்வாங்கு
  வாழ்ந்து விட்டு
  செல்லலாமே…
  என்ற
  எதிர்ப்புர்ப்புகளுடன்
  எதிர்காலம்.

 4. G. Sahithyabharathi says:

  பிறந்த நாள்.
  சாதாரணமா இருக்கலாம்
  வாழும்
  வாழ்க்கை
  வரலாறு
  படைக்க வேண்டும்…
  உதாரணங்கள்
  என் நாட்டில்
  ஏராளம்.

  ஆதி காலம் கொண்டே
  கடவுள் செய்த வதமும்.
  மனிதன் செய்த பிழையும்…
  என்று
  மாரி மாரி
  உணர்த்திக்கொண்டே இருக்கின்றன.

  யாருமே
  யாருக்காகவும்
  கண்ணீர் சிந்துவதை
  விரும்புவது இல்லை.

  அதிகமா
  கொடுமைகள்
  செய்த
  நரகசுரன்
  நான்.
  இறந்த
  இந்த நாள்
  எல்லா
  இன்புற்றிருக்க
  வேண்டியே
  கொண்டாட பெறும்
  தீபவொளி
  திருநாள்
  தீபாவளி.

 5. விருப்பத் தலைப்பு
  இலக்கியமாணவளே

  குயில்பாட்டுக் குரல்
  குறுந்தொகை இடை
  பழ(ல)மொழி பேசும் இருவிழிகள்
  பதிற்றுபத்து விரல்கள்
  ஐங்குறுநூறாய் ஆசைகள்
  பிரபந்தமேனி கொண்டவளே!

  உன்னுள் நான் கண்டவையெல்லாம்
  புறநானூறாய் இருக்க
  காணாதவையெல்லாம்
  அகநானூறாய் தோன்றுதடி,

  அகம்காண நினைத்தே
  குறிஞ்சிப் பாட்டும் சொல்லும்
  நம் காதல் கதையை,

  இன்னா நாற்பதாய் நானிருந்தேன்
  இனியவளே இனியவை நாற்பதாய்
  நீ கிடைத்தாய்

  மூதுரை விளக்கமாய் நான் இருக்க
  நெடுநல்வாடையாய் நீ இருக்க
  அன்பே உயிரும் மெய்யும் கலந்த
  ஆத்திச்சூடியாய் நாம் இருக்க

  பிள்ளைத் தமிழ் வேண்டி இருவரும் இனிதே இணைவோம் ஓர் மணநூலாய்,

  அன்பே பெருந்திணையென
  அன்பை வளர்த்து நாளும்
  ஆசார வித்தாய் நாம் திகழ
  ஔவையின் நல்வழியில்
  நடப்போம் வா…

 6. G. Sahithyabharathi says:

  உலகமும்,
  உருவாகும் அனைத்து
  உயிரும்.
  உள்ளத்திலும்,
  உருவத்திலும்
  வளர்ச்சிதை
  மாற்றம்
  அடைந்துக்கொண்டே தான்
  வருகிறது.

  விதை விருச்சமாவதும்,
  மழலை மாமனிதனாகுவதும்,
  விளையும் நிலங்களை கூட
  விட்டு வைக்கவில்லை.
  மாற்றம்.

  ஆம்
  மாற்றங்கள்
  அதிகமாக
  உள்ள உலகில் தான்
  மாரி மாரி
  மயமாக போகும்
  வார்த்தை
  விளையாட்டுகளில்
  விளையாட தெரிந்தவர்கள்
  வெற்றி மாலை.

  தெரியாதவர்கள்
  தேடிகிகொண்டிருக்கிறார்கள்
  மனித உறவுகளுக்குள்
  மாற்றம்.

 7. G. Sahithyabharathi says:

  உலகில் வாழும்
  ஒவ்வொரு உயிரும்
  பந்தம்,
  பாசம்,
  நேசம்…
  வைத்து தான்
  ஓடிகொண்டிருக்கின்றனர்கள்.

  ஆனால்
  யார் மீது,
  யாருக்காக
  எந்த தருணம்
  என்பது தான்…
  மனிதனை
  தவிர
  மற்ற உயிர்களிடம்
  பாகுபாடு இல்லை.

  ஆம்
  பகுத்தறிவு
  பயன்படுத்தும்
  மனிதன் மட்டும் தான்
  எதனை
  எப்படி
  எங்கு
  செய்வது என்று
  அறியாமல்.
  ஒரு சில…
  பண்டிகைகள்
  கொண்டாடுகிறோம்.

  உறவின் வருகையை எண்ணி
  உறவுகள்…
  ஆம்.
  அப்பா அம்மா வை
  எதிர்பார்க்கும்
  மகள்கள்.

  அண்ணன், தம்பிக்காக
  சகோதரிகள்.
  என
  சிறப்புக்கள்
  அதிகம் மிக்க
  பண்டிகைகள்…
  அதில் ஒன்று
  தீபவொளி
  திருநாள்
  தீபாவளி 🎆🎆.

 8. Shanav Gunasekaran says:

  நான் வாழும் சொர்க்க பூமி

  மண்ணிலோர்
  வியத்தகு சொர்க்கம்!
  விண்ணிலே இல்லா
  விசித்திர கூடமாய்,
  விந்தைப் பொழுதுகள்
  பல விழுதெனத் தாங்கி
  அகன்று தெறித்து
  ஆழ்மனம் நனைத்து
  அழியாத் தடமென
  நினைவுகள் புதைத்து
  உயிர்த்தெழுகின்றது
  உயிர் நீத்த பின்
  உலவிடும் சொர்க்கமாய்
  கண் முன்!

  மழலை குரலில்
  அழுகையை தொடங்கி
  தாய்பாலில்
  சப்தமும் அடங்கி
  உறக்கம் மிகவே
  உழன்ற பொழுதுகளும்….

  அன்னையின் அன்பே
  அமுதமாய்
  தந்தையின் சொல்லே
  வழித் துணையாய்
  ஆசான் அறிவே
  அறநெறியாய்
  தோழமைத் தோள்களே
  ஊன்றுகோலாய்
  வாழ்வில் நின்று
  வாகை கொண்டதும்
  இம் மண்ணில்……

  மின்னி மறைந்திடும்
  வெளிச்சக் கீற்றில்
  கிழிந்திடும்
  சூன்ய இரவின்
  கருந்திரை போல
  என் தனிமைத் துயரின்
  வடுக்கள் களைய
  தடந்தோள் பற்றி
  மனையாள் உடன் வர
  அவள் மென்விரல் பற்றி
  மழலைகள் பின் வர
  என் வம்சம் தாங்கும்
  தொட்டிலாய்,கட்டிலாய்
  மாறி மாறி சுமந்தது……
  நான் வாழும் மண்,
  இல்லை இல்லை
  நான் வாழும் சொர்க்கபூமி
  என் சொந்த ஊர்!
  இதுவே என் சொர்க்கம்!
  இதுவே தாய் மடி!

  உவகையுடன் கழித்த
  அத்தனை நாளும்
  உயிர்ப்புடன் சுமந்த
  அத்தனை நினைவும்
  தந்தது இம் மண்!

  மண்ணின் பெருமை
  மனிதருள் உண்டு
  ஆம்! அது உண்மை தான்,
  என்னில் பெருமை
  எந்தன் ஊரே!
  என் முளைத்தலும் அதிலே
  மண் மூடலும் அதிலே!

  ஷனவ் குணசேகரன்

 9. வே. ஹேமலதா says:

  சந்தன நிலவு
  ————————–

  ஓடையில் விழுந்து
  நீர்க்கோடுகளில் நகர்ந்து
  கனவினில் நுழைந்து
  கருத்தினில் வழிந்து
  கவிதையில் படர்ந்து
  ஐ என விளைவதை
  வாடிக்கையாய் கொண்டிருந்த அவள்

  உலகத்தின் முழு நயனம்
  தன்மீது படர்ந்திருந்த ஒரு இரவில்
  விழுவதும் நகர்வதும் படர்வதும்
  சலித்த பொழுதினில்
  அனலாய் அடர் சிவப்பாய்
  கடல் அலைகளை சீண்டி
  மேல் எழுப்பி விளையாடினாள்

  அவளின் பேராற்றல் கண்டு
  அன்று பிரம்மித்தது உலகம்
  அழகின் உருவும் நானே
  வல்லமையின் கருவும் தானே
  என்றுணர்த்திய களிப்பில்
  அனல் தனிய சந்தனமர வனம் புகுந்து
  குளிர்ந்து வெளியேறினாள்
  சந்தன நிலவாய்!

 10. Shanav Gunasekaran says:

  நான் வாழும் சொர்க்க பூமி

  மண்ணிலோர்
  வியத்தகு சொர்க்கம்!
  விண்ணிலே இல்லா
  விசித்திர கூடமாய்,
  விந்தைப் பொழுதுகள்
  பல விழுதெனத் தாங்கி
  அகன்று தெறித்து
  ஆழ்மனம் நனைத்து
  அழியாத் தடமென
  நினைவுகள் புதைத்து
  உயிர்த்தெழுகின்றது
  உயிர் நீத்த பின்
  உலவிடும் சொர்க்கமாய்
  கண் முன்!

  மழலை குரலில்
  அழுகையை தொடங்கி
  தாய்பாலில்
  சப்தமும் அடங்கி
  உறக்கம் மிகவே
  உழன்ற பொழுதுகளும்….

  அன்னையின் அன்பே
  அமுதமாய்
  தந்தையின் சொல்லே
  வழித் துணையாய்
  ஆசான் அறிவே
  அறநெறியாய்
  தோழமைத் தோள்களே
  ஊன்றுகோலாய்
  வாழ்வில் நின்று
  வாகை கொண்டதும்

  இம் மண்ணில்……

  மின்னி மறைந்திடும்
  வெளிச்சக் கீற்றில்
  கிழிந்திடும்
  சூன்ய இரவின்
  கருந்திரை போல
  என் தனிமைத் துயரின்
  வடுக்கள் களைய
  தடந்தோள் பற்றி
  மனையாள் உடன் வர
  அவள் மென்விரல் பற்றி
  மழலைகள் பின் வர
  என் வம்சம் தாங்கும்
  தொட்டிலாய், கட்டிலாய்
  மாறி மாறி சுமந்தது……
  நான் வாழும் மண்,
  இல்லை இல்லை
  நான் வாழும் சொர்க்கபூமி
  என் சொந்த ஊர்!
  இதுவே என் சொர்க்கம்!
  இதுவே தாய் மடி!

  உவகையுடன் கழித்த
  அத்தனை நாளும்
  உயிர்ப்புடன் சுமந்த
  அத்தனை நினைவும்
  தந்தது இம் மண்!

  மண்ணின் பெருமை
  மனிதருள் உண்டு
  ஆம்! அது உண்மை தான்,
  என்னில் பெருமை
  எந்தன் ஊரே!
  என் முளைத்தலும் அதிலே
  மண் மூடலும் அதிலே!

  ஷனவ் குணசேகரன்

 11. Shanav Gunasekaran says:

  மாபெரும் சூரனின்
  மமதையை அடக்கி
  இறைவழி நின்று
  தர்மம் காக்க
  தாயெனும் அஸ்திரம்
  தகர்த்தது தமையனை!
  முடிவில்,
  அதர்மம் இறக்க
  தர்மம் பிழைக்க
  பறிக்கப்பட்டது மகனுயிர்
  காக்கப்பட்டது மண்ணுயிர்!

  மாயோன் சூதில்
  மகுடம் சூடிய
  தர்மத்தின் வெற்றியே
  மண்ணில் மலர்ந்தது
  முத்தாய்ப்பாய்….
  மகிழ்வை கூட்டிடும்
  மத்தாப்பூ தீபாவளியாய்!

  கெடு விதி நெருங்க,
  கொடு வரமென
  சூரன் கைகள் குவிக்க
  குவிந்தது வரம்
  குளிர்ந்து மனம்
  அதுவே இத் தினம்!
  மன இருட்டைப் புரட்டி
  நல் வெளிச்சம் காணும்
  தீப ஒளித் திருநாள்!

  வான வீதிகளில்
  வண்ண கோலங்களாய்
  வேடிக்கை வெடிகள்
  மின்னி நிரம்ப….
  தீப ஒளிதனிலே
  தீமை இருள் விலக…
  தித்திக்கும் இனிப்புடனும்
  திகட்டாத களிப்புடனும்
  சுற்றம் கூடி
  திளைத்து
  தர்மம் அதன்
  தடம் பற்றி
  அதர்மம் அதன்
  அழிவை கொண்டாடும்
  அழியா திருநாள்
  தீமையின் வழியடைத்த
  தீபாவளி பெருநாள்!.

  இந்நாளில்
  ஆனந்தம் பெருகி
  அன்பால் உருகி
  நல்லதை இணைத்து
  தீயதை கழித்து
  அறம் மதித்து
  ஆணவம் மிதித்து
  உள்ளத் தூய்மையுடன்
  உற்றாருக்கும்
  உறவினருக்கும்
  உரக்கச் சொல்வோம்……

  தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  -ஷனவ் குணசேகரன்

 12. கவியரசு.சு.ப.சு.சுரபி.கார்த்திகேயன். says:

  தலைப்பு-தீபாவளி🪔.ஐப்பசியில் தீப ஒளியாய்🪔 பிறந்திட மனப் பசியில் மகிழ்வு ஒளியாய் கொண்டிட மகிழ்வு குசியில் வாழ்த்து மடல்களை தொடுத்திட திரயோதசியில் தித்திக்க இனிப்புகளை ஊட்டி விட சதுர்த்தசியில் சதுரங்க மனதில் சஞ்சலம் இல்லா மங்களம் மிகுந்து விட அம்மாவாசையில் அடி வயிறு பசிக்க உணவு எடுக்கா நோன்பு விடுத்திட பௌபீச்சு நாளில் புத்துணர்ச்சி பீச்சிட நரக சதுர்த்தசி அந் நாளில் கெட்ட எண்ணங்களை கை விட கிரகொரி நாட்காட்டி.மகழ்வு கிரகங்களாக தீபாவளி 🪔 நாட்களை சுற்றி விட தீபாவளி 🪔 நாம் கொண்டாடிட. இந்தியாவின் இளமை இந்து பருவ ஒளியாய் ஒளி விட நேபாளத்தின் நேர்த்தியான நேச சுடராய் சுடர் விட இலங்கையின் இதழ் விரித்து இனிமை மணம் கமழும் தீப மலராய் மலர்ந்து விட மியான்மாரில் மின் மினிகள் மினு மினுக்க மினித்திடும் ஒளியாய் ஒளி விட சிங்கப்பூரின் சிரித்து வரும் சிங்காரியாய் சிலு சிலுத்து கல கலக்க கலக்கும் கலை தொட மலேசியாவின் மங்கள் இராணியாக திங்கள் முகம் முன்னிட பிசியின் கவலை பசி தீர்க்க வரும் செழுமை ஒளியாய் ஒளி விட சீக்கியர்களின் சீமான் மகளாய் சிறப்புற்றிட சமணர்களின் சமரச கொண்டாட்டமாய் கொழுந்து விட பௌத்தத்தின் கௌரவமாய் கலக்கி விட தீபாவளி 🪔 சிறப்புடன்🙏 கொண்டாட.சந்து சந்தாய் இந்து மதம் மெயஞானம் சொல்லிட பந்துகளுக்கும் நண்பர்களுக்கும் அறிந்தவர்களுக்கும் அறிய விட கதை பந்து சுருள காண்போர் கீழ் வரிகளில் கண்டு விட. தாயின் பாசம் இராமன் கொண்டிட வாயின் வழி கட்டளைக்கு இணங்க வன வாசம் சென்று விட நாடு திரும்பும் அந்த நாள் வந்து விட நாடு பாசம் ஆடு ஆட்டம் கொண்டாட்டம் என்று அன்று தீபாவளியை🪔 கடைபிடிக்க.திரு சரணம் புரியும் திருமால் அவதாரம் வந்து விட அவதாரத்தின் அவசியமாய் வராக அவதாரம் எடுத்திட வராகத்தின் வாரிசு ஆக பவுமன் பிறந்திட பிறந்திட்ட பிறப்பன் பிரம்மனை நோக்கி தவம் செய்திட தாயால் மட்டும் சாகும் நிலை சக்தி பெற்றிட மனிதன் ஆக பிறந்து அசுரனாக மாறி விட நரகாசுரன் என்று மக்கள் பெயர் இட அழகு தேவதை அதிதியின் அம்ச வளையங்களை அவன் திருடிட பெருமை ஆக போற்றும் பெண்களை கற்பழித்து விட தேவாதி தேவர்களை சிறை பிடித்து விட இதை கண்ட தாய் ஆன சத்யபாமா அவனை நித்ய கொலை செய்து விட அந்த நாள் தீபாவளி 🪔 கொண்டாட🙏. திருப்பதி கல்வெட்டு கருத்துகளை பதிவிட திருவாரூர் செப்பேடு திரு புகழை புகழ்ந்திட சீக்கியர்களின் பொற் கோயில் இந்த நாளில் பொன்னரகமாய் தொடங்கிட மகா வீரருக்கு ஞானம் கொண்ட வீடு பேறு கிடைத்த இந்த நாள் தீபாவளி 🪔 ஆகி விட புத்தர் சித்தராகி பித்தம் பாசம் பிடித்த தன் தந்தையின் அழைப்புக்கு இணங்க கபிலவசுதுக்கு காண வந்த நாள் தீபாவளி 🪔 ஆகி விட.விஞ்ஞானம் கூறும் விசித்திர வரிகள் மனதில் வாசம் ஆகி விட சூடு தனித்து விட தலையில் எண்ணெய் தேய்த்து விட குதுகலமாய் குளியல் போட்டு விட புத்துணர்ச்சி கொண்டு வந்திட புத்தாடை உடுத்தி விட மகிழ்ச்சியை மாறி மாறி பரிமாறி கொண்டிட பட்டாசு வெடித்திட இனிப்புகள் வழங்கிட பெரியோரை வணங்கிட வாழ்த்துகளை பெற்று விட தீபாவளி 🪔 கொண்டாடிட🙏. மலர்கள் மணங்கள் ஆகி விட மணங்களின் இரு மனங்கள் புது மண தம்பதி ஆகி விட கொண்டாடும் முதல் தீபாவளி 🪔 தலை தீபாவளி 🪔 ஆகி விட இந்த நாளை மகிழ்வாய் கொண்டாடிட🙏. இருள் சூழ்ந்த கெட்ட எண்ணங்களை விரட்டிட அருள் சூழ்ந்த நல் தீப ஒளி🪔 எண்ணங்கள் வந்திட அசுத்த சாக்கடை சமுதாய சீர்கேட்டை அப்புறப்படுத்த பட்டாசு வெடித்திட புதிய மனமாய் வாழ புத்தாடை உடுத்திட இனிய சொல் வார்த்தை சொல்லிட இனிப்புகள் வழங்கிட வார்த்தைகளில் கவிதை தந்திட சரணம் போடும் தமிழ் தாய் மொழி மோட்சம் கொண்டிட எட்டு திக்கும் திகைத்திட பட்டி தொட்டி எங்கும் பட்டாசு பறந்திட நகரங்கள் நகை சுவைத்திட மாவட்டங்கள் மாணிக்கங்கள் ஆகி விட மாநிலங்கள் மாளிகையாக மாறி விட நாடே மகிழ்வு நாட்டியம் ஆட உலகம் ஒளி மயம் ஆகி விட வறுமை துயர் நீங்கிட வாசல் தோறும் வளம் பெருகி விட நிம்மதி நிலை நின்றிட அமைதி அரவனைத்திட தீமை விலகிட துணிவு பெருகிட நல் எண்ணங்கள் மனதில் பதிவு ஆகி விட அநீதி அழிந்து விட களவு கலைந்து விட கற்பழிப்பு எண்ணம் மறைந்து விட உறவுகளை உபசரித்து விட நண்பர்களை நல்ல விதமாய் பழகி விட எதிரிகள் எத்திசையும் ஓடி விட துரோகிகள் எத்திசையும் தும்சம் ஆகி விட தாயை காத்து விட தந்தைக்கு மரியாதை கொடுத்து விட சேயவனை பாதுகாத்து விட சகோதரியை சந்தோசம் படுத்தி விட சகோதரனை சமரசம் ஆக்கி விட இனிய தீபாவளி 🪔 கொண்டாட வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.

 13. ANISH says:

  மழலை
  ***********

  என் தொட்டில் தோட்டத்தில்
  மலர்ந்த தங்க ரோஜா – நீ
  என் கருவறை வானத்தின்
  வைகறை நீ!
  ‘தாய்மை’ எனும் பட்டம் தந்த
  பண்டிதன் நீ !
  உன் செல்லச் சிணுங்கல்கள்
  எனக்கு ‘சங்கீதம்’ ஆகும்
  கள்ளமின்றி நீ பேசும் உன்
  மழலை மொழி கேட்க என்
  மனம் யாசிக்கும்!
  உன் பட்டுப் பாதம் தடம்
  பதிக்கும் இடமெல்லாம் என்
  இதயம் அதை தாங்கும்!
  என் கருங் கோடையில் என் மனதை
  இளைப்பாற்ற வந்த கார்முகில் நீ!
  உன் மாயச் சிரிப்பால்!என்
  மன வலிப் போக்கி
  மன வலிமை உண்டாக்கும்
  மாயக் கண்ணன் – நீ!

 14. ANISH RAMAKRISHNAN says:

  மழலை

  **************
  என் தொட்டில் தோட்டத்தில்
  மலர்ந்த தங்க ரோஜா – நீ
  என் கருவறை வானத்தின்
  வைகறை நீ!
  ‘தாய்மை’ எனும் பட்டம் தந்த
  பண்டிதன் நீ !
  உன் செல்லச் சிணுங்கல்கள்
  எனக்கு ‘சங்கீதம்’ ஆகும்
  கள்ளமின்றி நீ பேசும் உன்
  மழலை மொழி கேட்க என்
  மனம் யாசிக்கும்!
  உன் பட்டுப் பாதம் தடம்
  பதிக்கும் இடமெல்லாம் என்
  இதயம் அதை தாங்கும்!
  என் கருங் கோடையில் என் மனதை
  இளைப்பாற்ற வந்த கார்முகில் நீ!
  உன் மாயச் சிரிப்பால்!என்
  மன வலிப் போக்கி
  மன வலிமை உண்டாக்கும்
  மாயக் கண்ணன் – நீ!