சந்தர்ப்பத்தில் அர்த்தப்படுதடி ஜென்மங்கள்

பிறை தந்த சந்தர்ப்பத்தில்
மலர்ந்து சிரிக்குது முல்லை.மழலை தந்த சந்தர்ப்பத்தில்
சிலிர்க்குது தாய்மை.விடியல் தந்த சந்தர்ப்பத்தில்
சிரிக்குது காலை சூரியன்.

santharpathil arthapaduthadi jenmangal

இரவு தந்த சந்தர்ப்பத்தில்
வானத்தை அலங்கரிக்குது ஒற்றை நிலா.

அன்பே உன் கரங்கள் தந்த சந்தர்ப்பத்தில்
வாழ்க்கை என்னை கரம்பிடிக்குதே.

நீ தந்த சந்தர்ப்பத்தில்
அர்த்தப்படுதடி என் ஜென்மம்.

மொழிகள் மறந்து ஊமையானவன் உன்னால் மீண்டும்
கவிதை உலகில் துளிர்விட்டு இயற்கையுடன்
இயற்கையாக சங்கமிக்கிறேன் என்னவளே !

பிரியமானவளே !

 – நீரோடைமகேஸ்

You may also like...