திருவள்ளுவர் தினம்
வள்ளுவர்,
மத போதகர் அல்ல!
வாழ்வியல் நெறி போதித்தவர்!
அறம் உணர்த்தி யவரை மதங் கொண்டு அறுத்தல் வேண்டா! – thiruvalluvar thinam

ஈரடியில் இல் வாழ்வின்
இனிமை உணர்த்தி யவரை
இனம் காட்டி
இழிவு படுத்த வேண்டா!
இயற்றிய குறளை வகுப்பினால்
தெளிவுரை வழங்கிய நாட்டில்
வள்ளுவரையே வகுப்பு காட்டி வசை பாட வேண்டா!
மனிதர்களை மதத்தால் பிளவு படுத்துவதே போதும்!
மனிதம் கற்பித்த மகான்களையும் நம் மடமை யினால்
மாசு படுத்த வேண்டா!
குறள் வழியில் அறங்கொண்டு
பொருள் ஈட்டி இன்பம் காணாவிடினும் குற்றங் கண்டு
சமனியம் சிதைக்க வேண்டா!
காழ்ப்பு ணர்வால் சமழ்ப்பு
கொள்ள வேண்டா!
தமிழின் தலைமகனாம்
வள்ளுவரை
நம் செந்தமிழால் போற்றுவோம்!
தமிழால் இணைவோம்!!
வாழ்க தமிழ்!
வள்ளுவர் தின வாழ்த்துக்கள்!!
– ஆனந்தி, ஓசூர்.