அப்துல்கலாம் பற்றிய கவிதைகள்

நீரோடை முகநூல் கவிதை போட்டி 2 இல் கலந்துகொண்ட கவிதைகளில் அப்துல்கலாம் என்ற தலைப்பில் கவிதைகள் பகிர்வதன் வாயிலாக ப.வெங்கட்ரமணன் குளித்தலை, பிரியாவெங்கட் சென்னை ஆகியோரை நீரோடையில் அறிமுகம் செய்கிறோம் – abdul kalam kavithai

apj abdul kalam

விஞ்ஞானத்தில் எழுச்சி கொண்ட மனிதர் !
வாழ்க்கைக்கு வழிகாட்டிய மாமனிதர் !
இராமேஸ்வரத்தில் பிறந்து !
சரித்திரம் படைக்கும் …
இளைய தலைமுறையினரின்
எதிர் கால கனவை நினைவாக்கிட !
கனவு காண வலியுறுத்தி !
காணும் கனவுக்கு உயிர் கொடுத்த வல்லவரே !
சிந்திக்க வைத்ததோடு மட்டும் அல்லாமல் !
சந்திக்கும் பிரச்சனைகளை எதிர்
கொண்டு போராடிடு !
சாதிக்க துடிக்கும் உன் எண்ணமே !
சாதனையாளராக உன்னை மாற்றி விடுமே!
விழித்தெழுந்து உன் முயற்சியை
கடை பிடித்திடு மனிதா !
விண்ணுலகம் பாராட்டும் புகழை
கரம் பிடித்திடு தோழா !
நம்பிக்கை எனும் மூலதனத்தை வைத்தே !
தன்னம்பிக்கையின் பலத்தோடு வெற்றி
காண்பாய் ! விரைவில்…
கணத்த இதயமும் கலங்கி விடுமே !
கலாம் பிரிவின் துயரத்தை நினைத்து …!!!

– வேல், தூத்துக்குடி


அமைதி நிழலாகி
அகிலம் போற்றும்..
அணையாத சுடராகி
கருணை கொடுக்கும்..
கவின் முகிலாகி
உண்மை உரைக்கும்..
உயர்ந்த சிகரமாகி
எண்ணிய வரத்தின்..
ஏற்ற வடிவமாகி
உலகமே வாழ்த்தும்..
ஒப்பற்ற தலைவனாகி
மணம் இல்லாத..
மகான் வடிவமாகி
மக்கள் மனதில்..
மனித தெய்வமாகி
வாழும் அறிவியல்..
துறை வித்தகராகி
சிங்காரம் கொண்ட..
சிற்ப சிலையாகி
நிற்கும் பிதாமகர்..
கலாம் ஐயா
அவர்கள் வாழிய..
வாழியவே பல்லாண்டு
புகழும் வளமும்..

– ப.வெங்கட்ரமணன், குளித்தலை


அறிவுப் புத்தகம் நீ
அருமைப் பெட்டகம் நீ
அறிவியல் வித்தகன் நீ
ஆயிரம் கனவுகளின் களஞ்சியம் நீ
அஞ்சா நெஞ்சமும் நீ
அக்னிச் சிறகுகளின் அன்னையும் நீ
அனுசக்தியின் ஆரம்பம் நீ
அனு ஏவுகனையின் நாயகன் நீ
அனு ஆராய்ச்சியின் அற்புதம் நீ
ஆண்டவன் தந்த பொக்கிஷம் நீ
அவதாரம் எடுத்து வந்து
எங்களின் கனவை மெய்பிப்பாய் நீ!!! – abdul kalam kavithai

– பிரியாவெங்கட், சென்னை


ஆழ் கடலோர அக்னி சிறகு
அகிலம் அளந்தது தன் அறிவாள்…….
எட்டி பிடிக்க காண சொன்ன பல கனவுகள்
ஏவுகணை களையும் தொட்டன…..
பேக்கரும்பு பெற்ற பிள்ளை போர்
அணுவையும் துளைத்து பேர் பெற்றது….
அன்னை தமிழ்நாட்டின் கலங்கரை விளக்கம்
வழி காட்டியது தத்தளித்த நம் இளைஞர்களுக்கு…..
பெற்ற பதவியும் புகழ் கொண்டதே
பெருமகனின் வரவைகண்டு…..
ராஷ்டிரபதி பவனின் மலரும் பாடுமே
இவர் புகழ் கொண்டு…..
புத்தகம் பல படித்த களஞ்சியமே
உன் அறிவியல் பணி இயற்ற ஒர் புத்தகம் போதாது……
ஏழ்மை வரையறை யல்ல உயர
எண்ண ஏற்றம் போதும்…..
பல மத வாழ்வு புதுமை யன்று
மக்களோடு ஒன்றாய் வாழ்ன்…..
பெரும் பொறுப்பும் சுமையன்று கொண்ட
கல்வி தொண்டு செய்ய……
இல்லறமும் இனிதல்ல இறையாண்மையை தழுவி வாழ்ந்த…..
என்றும் எங்கள் வாழிகாட்டி ஆசிரியர்
ஐயா அப்துல்கலாம் புகழ் வாழியவே…..!

– சிவராஜ் மணிவண்ணன், வேலூர்

You may also like...

1 Response

  1. Jothibai says:

    மணிமணியான கவிதைகள்.
    கலாமின் கனவுகளை நனவாக்குவோம்.