வார ராசிபலன் மாசி 23 – மாசி 29

மாசி மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும் – rasi-palangal mar-07 to mar-13.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். உடன்பிறப்புகள் ஆதரவு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் ஆற்றல் பிறக்கும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரம் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் தேவை பூர்த்தி அடையும். மாணவர்கள் முயற்சி வெற்றி காண்பார்கள். விவசாயம் குடும்பத் தேவை பூர்த்தி அடையும்.
பரிகாரம்: சனிக்கிழமை அன்று நவக்கிரக வழிபாடு செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். பணவரவு சீராக இருக்கும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். நீங்கள் நினைத்தது நடக்கும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரம் பெண்களை பங்குதாரராக கொண்ட வியாபாரம் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் தொழில் முன்னேற்றம் காண்பார்கள். மாணவர்கள் நல்ல பாக்கியம் அடைவார்கள். விவசாயத்தில் நல்ல உயர்வு கிடைக்கும்.
பரிகாரம்: நந்தி பகவான் வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். எதையும் சமாளிக்கும் திறமை உள்ளது. கையிருப்பு கரைய வாய்ப்பு உள்ளது. வாகன ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் சிரமப்பட நேரிடும். வியாபாரிகள் கவனமாக செயல்படவும். கலைஞர்கள் உற்சாகம் அடைவார்கள். மாணவர்கள் தோல்வி அடைய வாய்ப்புள்ளது. விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
பரிகாரம்: தேவி வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். எதிலும் நிதானமாக செயல்படவும். யாரிடமும் நிதானமாக பழகவும், தர்ம காரியத்திற்கு உதவி செய்யவும். பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவார்கள். வியாபாரம் பூஜை பொருள் சம்பந்தப்பட்டவை நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் வருமான இழப்பு அடைவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெருவர்கள். விவசாயம் காய்கறி சம்பந்தப்பட்டவை நல்ல வருவாய் கிடைக்கும்.
பரிகாரம்: லட்சுமி வழிபாடு செய்தல் நல்லது.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். மனதில் தைரியம் நிலவும். நினைத்ததை முடிப்பீர்கள். சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் ஏதாவது வகையில் வருமானம் உயரும். வியாபாரம் விரிவு அடையும். கலைஞர்கள் தேவை பூர்த்தி அடையும். மாணவர்கள் ஆசிரியரின் வழிகாட்டுதலைப் பின்பற்றவும். விவசாயம் சுமாராக இருக்கும். 
பரிகாரம்: தினமும் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். மனதில் நல்ல சிந்தனை நிலவும். எதையும் நேரடியாக முயற்சி செய்யவும். சில சமயங்களில் சில இழப்புகள் வரலாம். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரம் சுமாராகவே காணப்படும். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். விவசாயிகள் பாக்கியசாலிகள் ஆக திகழ்வார்கள்.
பரிகாரம்: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். வீண் விவாதம் செய்ய வேண்டாம். உறவினர் வருகை நன்மையில் முடியும். சற்று கூடுதல் செலவு ஆகும். பணியாளர்கள் கவனமாக இருக்கவும். வியாபாரம் சுமாராகவே காணப்படும். கலைஞர்கள் இரட்டிப்பு வருமானம் பெறுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் நஷ்டம் அடையும்.
பரிகாரம்: தினமும் காலை சூரிய பகவான் வழிபாடு செய்து வரவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் சனி பகவான் நன்மையே செய்வார். உடல் ஆரோக்கியமாக காணப்படும். ஆடை ஆபரணம் வாங்க வாய்ப்பு உள்ளது. சேமிப்பு உயரும். குடும்ப சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. பணியாளர்கள் நன்மதிப்பு பெறுவார்கள். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயம் தேவைகள் பூர்த்தியடையும்.
பரிகாரம்: சிவ வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். ஆடம்பர செலவுகள் உயரும். யாரையும் எளிதாக நம்ப வேண்டாம். புதிய நபரிடம் கவனமாக செயல்படவும்.  வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். பணியாளர்கள் முழு வெற்றி அடைவார்கள். வியாபாரிகள் புதிய முயற்சி செய்வார்கள். கலைஞர்கள் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பார்கள். விவசாயிகள் நஷ்டம் அடைவார்கள்.
பரிகாரம்: சிவ வழிபாடு செய்து வரவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். பிள்ளைகளால் ஆடம்பர செலவுகள் உயரும். சகோதரர் உதவி கிடைக்கலாம். உடல்நலனில் கவனம் தேவை. சிக்கனமாக செயல்படுவீர்கள். பணியாளர்கள் வரவு செலவு சரியாக வைத்துக் கொள்ளவும். வியாபாரிகள் நஷ்டம் அடைவார்கள். கலைஞர்கள் அரசாங்க உதவி பெறுவார்கள். மாணவர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். விவசாயம் மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம்  சுக்கிர பகவான் நன்மையே செய்வார். பணவரவு சுமாராக காணப்படும். பொருள் நஷ்டம் ஏற்படும். சொத்து வாங்க யோகம் உள்ளது. பணியாளர்கள் எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். கலைஞர்கள் உச்சம் அடைவார்கள். மாணவர்கள் தோல்வி அடைவார்கள். விவசாயம் சுமாராகவே காணப்படும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் ராகுபகவான் நன்மையே செய்வார். கண் பார்வை குறைபாடு வரலாம். உடல்நிலையில் கவனம் தேவை. எதையும் பேசி சமாளிப்பீர்கள். பணியாளர்கள் சம்பள உயர்வு அடைவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். கலைஞர் நஷ்டம் அடைவார்கள். மாணவர்கள் அதிக நன்மை அடைவார்கள். விவசாயத்தில் விரைவாக பணி முடியும்.
பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும் rasi-palangal mar-07 to mar-13

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...