வார ராசிபலன் ஆவணி 21 – ஆவணி 27

ராகு கேது பெயர்ச்சி பலன்களை 2020 வாசிக்க இங்கே சொடுக்கவும்.. – rasi palangal sep 06 to 12.

மேஷம் (Aries):

aries mesam


இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாக இருக்கும் சுப நிகழ்ச்சி ஒன்று நடைபெற வாய்ப்பு உள்ளது. குடும்பம் ஒரு சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். பணியாளர்கள் நல்ல சிறப்பை அடைவார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கலைஞர்கள் சுமாரான பலனை பெறுவார்கள். மாணவர்கள் வெற்றியே காண்பார்கள். விவசாயம் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும். 
வழிபாடு: தினமும் காலை சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

இந்த வாரம் சுக்கிர பகவானே பல நன்மைகளை செய்வார். சகோதர சகோதரிகள் உறவு மேம்படும். உடல் ஆரோக்கியமாக காணப்படும். வீட்டில் குழந்தை பாக்கியம் அமைய வாய்ப்பு உள்ளது. குடும்பத்துடன் விருந்து விழா என சென்று வருவீர்கள். பணியாளர்கள் சுமாரான பலனே கிடைக்கப் பெறுவார்கள். வியாபாரத்தில் கடன் அன்பை கெடுக்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி காண்பார்கள். விவசாயம் விரயத்தை எதிர்நோக்கும்.
வழிபாடு: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

இந்த வாரம் சுக்கிர பகவானே நன்மை செய்வார். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் வாங்க யோகம் உள்ளது. பணவரவு நன்றாகவே அமையும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வீட்டில் கணவன் மனைவி உறவு மேம்படும். பணியாளர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் பூரண வெற்றி பெறுவார்கள். விவசாயம் நல்ல லாபம் அடையும்.
வழிபாடு: நவகிரக  வழிபாடு செய்து வரவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். அண்டை வீட்டார் மத்தியில் நட்புறவு வளரும். சகோதரர் வழியில் உதவி கிடைக்கும். பணியாளர்கள் அமோக ஆற்றல் பெறுவார்கள். வியாபாரத்தில் பூஜை பொருள் வியாபாரம் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் அரசாங்க ஆதரவை பெறுவார்கள். மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல லாபம் எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வரவும்.


சிம்மம் (LEO):

leo simmam

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். புதிய மனை வாங்க யோகம் உள்ளது. பணவரவு நன்றாகவே இருக்கும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. பணியாளர்கள் தலைமை பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட வியாபாரம் சிறப்படையும். கலைஞர்கள் விரையத்தையே எதிர் நோக்குவார்கள். மாணவர்கள் முழு வெற்றி காண்பார்கள். விவசாயிகள் பாக்கியசாலிகள்.
வழிபாடு: சனிக்கிழமை அன்று சனிபகவான் வழிபாடு செய்து வரவும்.


கன்னி (Virgo):

virgo kanni

இந்த வாரம் புதன் பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். வேலை சற்று அதிகமாக இருக்கும். வீட்டின் தேவைகள் பூர்த்தி ஆகும். அண்டை வீட்டார்கள் சரண் அடைவார்கள். பணியாளர்கள் இடமாற்றம் அடைவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு வருமானம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி அடைவார்கள். விவசாயத்தில்  நஷ்டம் ஏற்படலாம்.
வழிபாடு: செவ்வாய்க்கிழமை தினத்தில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


துலாம் (Libra):

libra thulam

இந்த வாரம் சுக்கிரபகவான் நன்மையே செய்வார். குடும்பத்தின் செல்வாக்கு உயரும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும், அதேசமயம் குடும்பத்தில் ஒரு சில குழப்பங்கள் நிகழும். செலவுகள் சற்று கூடுதலாகவே இருக்கும். பணியாளர்கள் சக ஊழியர் மத்தியில் நன்மதிப்பை பெறுவார்கள். வியாபாரம் நல்ல லாபம் அடையும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் கடினப்பட்டு வெற்றி பேறவேண்டி இருக்கும்.  விவசாயத்தில் குடும்பத் தேவை பூர்த்தி செய்யப்படும்.
வழிபாடு: தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்து வருவோம்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

இந்த வாரம் குரு பகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பச் செலவுகள் சற்று அதிகரிக்கும். உறவினர் மத்தியில் பிரச்சனைகள் மறையும். பணியாளர்கள் பிரகாசமாக காணப்படுவார்கள். வியாபாரத்தில் பெண்களை பங்குதாரராக கொண்ட வியாபாரம் சிறப்படையும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வார்கள். மாணவர்கள் நல்ல வெற்றி அடைவார்கள். விவசாயத்தின் சுமாரான பலனே கிடைக்கும்.
வழிபாடு: செவ்வாய் கிழமைகளில் முருகப் பெருமான் வழிபாடு செய்து வரவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

இந்த வாரம் குருபகவான் நன்மையே செய்வார். குடும்பத்தில் ஒரு சில குழப்பங்கள் வர வாய்ப்புகள் உள்ளன. குடும்பத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். பணவரவு நன்றாகவே இருக்கும். பிரயாணத்தில் சற்று கவனமாக இருக்கவும். பணியாளர்கள் பதவி உயர்வு அடைவார்கள். வியாபாரம் இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். கலைஞர்கள் விரயத்தை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் விரும்பிய பாடம் கிடைக்க பெறுவார்கள். விவசாயத்தில் போதிய வருவாய் இருக்கும்.
வழிபாடு: சனிபகவான் வழிபாடு செய்து வருவோம்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

இந்த வாரம் சுக்ரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே இருக்கும். கடந்த கால பிரச்சினைகள் மறையும். பிள்ளைகளால் ஒரு சில தொல்லைகள் வரலாம். உறவினர் வருகை நன்மையில் முடியும். பணியாளர்கள் நிம்மதி அடைவார்கள். வியாபாரத்தில் காய்கறி காய்கறி வியாபாரம் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். கலைஞர்கள் தேவை பூர்த்தி செய்யப்படும். மாணவர்கள் உச்சம் பெறுவார்கள். விவசாயம் சுமார் வருமானமே எதிர்பார்க்கலாம்.
வழிபாடு: குலதெய்வ வழிபாடு செய்து வரவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

இந்த வாரம் சூரிய பகவான் நன்மையே செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணவரவு நன்றாகவே அமையும். குடும்ப குழப்பங்கள் நீங்கும், அண்டை வீட்டார் மத்தியில் ஒரு சில பிரச்சினைகள் வரலாம். பணியாளர்கள் சுமாராகவே காணப்படுவார்கள். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்ல. கலைஞர்கள் சுமாரான வாழ்வை நடத்துவார்கள். மாணவர்கள் மிகவும் கவனமாக செயல்படவும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும்.
வழிபாடு: சிவ வழிபாடு செய்து வரவும்.


மீனம் (Pisces):

pisces meenam

இந்த வாரம் சுக்ரபகவான் நன்மையே செய்வார். பணவரவு நன்றாகவே அமையும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். குடும்பத் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். அண்டை வீட்டார்கள் உங்கள் வசம் சரண் அடைவார்கள். பணியாளர்கள் அமோகமாக காணப்படுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் எதிர்பார்க்கலாம். கலைஞர்கள் செல்வாக்கு உயரும். மாணவர்கள் குடும்பத்தில் நல்ல பெயர் எடுப்பார்கள். விவசாயத்தில் காய்கறி தோட்டம் நல்ல வருவாய் கிடைக்கும்.வழிபாடு: தினம் காலை விநாயகர் வழிபாடு செய்து வரவும் – rasi palangal sep 06 to 12.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 


You may also like...

3 Responses

  1. Rajakumari says:

    ஐயா சொன்னது சொன்ன படியே நடக்கின்றது மிக்க மகிழ்ச்சி

  2. தி.வள்ளி says:

    மிக துல்லியமாய் பலன்கள்…மிக்க நன்றி ஐயா..

  3. Kavi devika says:

    அனைவருக்கும் நன்மை பயக்கட்டும்…