வார ராசிபலன் வைகாசி 25 – வைகாசி 31

சார்வரி வருடம் பற்றி வாசிக்க மற்றும் முக்கிய தினங்கள் பற்றி அறிந்துகொள்ள சொடுக்கவும் – rasi palangal june 07 – june 13.

மேஷம் (Aries):

aries mesam


சுக்கிரன் மற்றும் ராகு பகவான்கள் நன்மையே செய்வார். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் யோகமுண்டு, சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறும். பணியாளர்கள் வெற்றியே காண்பார்கள். தொழில் வியாபாரம் லாபகரமாக இயங்கும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள். விவசாயம் இரட்டிப்பு  லாபம் கிடைக்கும். தினமும் காலை சூரிய வழிபாட்டு செய்யவும்.


ரிஷபம் (Taurus):

taurus rishabam

புதன் பகவான் நன்மையே செய்வார். நல்ல பணவரவு இருக்கும், குடும்பம் ஆரோக்கியமாக இருக்கும். சகோதர வழியில் உதவி கிடைக்கும். பணியாளர்கள் புதிய பொறுப்பை ஏற்பார்கள். தொழில் வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். கலைஞர்கள் செல்வாக்கு பெறுவார்கள். மாணவர்கள் முழு வெற்றி அடைவார்கள். விவசாயம் சுமாரான பலனையே ஈட்டித்தரும். முருகப் பெருமான் வழிபாடு செய்யவும்.


மிதுனம் (GEMINI):

gemini mithunam

புதன் பகவான் நன்மை செய்வார். குடும்ப ஆரோக்கியமாக காணப்படும். கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போகவும். பயணத்தில்  பிரச்சினைகள் உருவாகலாம், கவனம் தேவை. பணியாளர்கள் கவனமாக செயல்படவும். தொழில் வியாபாரம் நஷ்டத்தை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. கலைஞர்கள் ஒப்பந்தம் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். மாணவர்கள் முழு வெற்றி காண்பார்கள். விவசாயம் காய்கறி வாயிலாக சிறப்பாக இருக்கும். சனிபகவான் வழிபாடு செய்யவும்.


கடகம் (Cancer):

cancer kadakam

சூரிய பகவான் நன்மை செய்வார். குடும்ப நலம் நன்றாக இருக்கும், குடும்பத்தின் பிரச்சனைகள் நன்மையாக முடியும். பணியாளர்கள் தலைமை பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரத்தில் வருமானம் நன்றாக   இருக்கும். கலைஞர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டுதலை பின்பற்ற  வேண்டும். விவசாயத்தில் செலவுகள் அதிகரிக்கும். நவகிரக வழிபாடு செய்யவும்.


சிம்மம் (LEO):

leo simmam

புதன் பகவான் நன்மையே செய்வார். வீட்டின் தேவைகள் பூர்த்தி ஆகும். உறவினர் வருகை நன்மையில் முடியும். அண்டை வீட்டார் மத்தியில் செல்வாக்கு உயரும். பணியாளர்கள் வெற்றி அடைவார்கள்.  தொழில் வியாபாரம் கவனமாக இருக்கவும்.  கலைஞர்கள் சுமாரான பலனை  பெறுவார்கள். மாணவர்கள் இரட்டிப்பு வெற்றி பெறுவார்கள். விவசாயம் நிலம் தொடர்பான  தேவைகள் பூர்த்தியாகும். குரு பகவான் வழிபாடு செய்யவும்.


கன்னி (Virgo):

virgo kanni

குரு பகவான் நன்மை செய்வார். பணவரவு நன்றாக இருக்கும், குடும்பத்தின் தேவைகள் பூர்த்தி ஆகும். பணியாளர்கள் ஆதாயம் பெறுவார்கள். தொழில் வியாபாரம் லாபகரமாக இருக்கும். கலைஞர்கள் நஷ்டத்தை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் போட்டியில் வெற்றி பெறுவார்கள். விவசாயம் நல்ல வருவாய்  பெற்றுத் தரும். பெருமாள்  வழிபாடு செய்யவும்.


துலாம் (Libra):

libra thulam

செவ்வாய் பகவான் நன்மையே செய்வார். நீண்ட கால  குடும்ப  பிரச்சனைகள் நீங்கும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். பணியாளர்கள் நல்ல பொறுப்பை ஏற்பார்கள். வியாபாரத்தில் காய்கறி மூலம்  லாபம் கிடைக்கும். கலைஞர்கள் சிரமப்பட்டே புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். விவசாயத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தினமும் காலை சூரிய வழிபாடு செய்யவும்.


விருச்சிகம் (Scorpio):

scorpio viruchukam

சனி  பகவான் நன்மை செய்வார். குடும்ப பிரச்சனைகள் தீர்க்கப்படும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. ஆடம்பரப்பொருட்கள் வாங்கும் வாய்ப்புள்ளது. பணியாளர்கள் பணி சிறப்பாக நடைபெறும்.. வியாபாரத்தில் லாபம் பெருகும்.. கலைஞர்கள் புதிய நுட்பத்தை கையாளுவார்கள். மாணவர்கள் கவனமாக செயல்படவும். விவசாயத்தில் நடுத்தர  விளைச்சல் பெறலாம். ஆஞ்சநேயர்  வழிபாடு செய்யவும்.


தனுசு (Sagittarius):

sagittarius thanusu

குரு பகவான் நன்மையே செய்வார். பணவரவு சமமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். அண்டை வீட்டார் மத்தியில் செல்வாக்கு உயரும். பணியாளர்கள் பாராட்டைப் பெறுவார்கள். வியாபாரம் லாபகரமாக இருக்கும், போட்டி நிலவும். கலைஞர்கள் நஷ்டத்தை எதிர்கொள்வார்கள். மாணவர்கள் உயர்வு  அடைவார்கள். விவசாயம் கால்நடை வளர்ப்பு லாபம்  பெற்று தரும். விநாயகர்  வழிபாடு செய்யவும்.


மகரம் (Capricorn):`

capricorn magaram

குரு  பகவான் நன்மை செய்வார். பணவரவு சுமாராக இருக்கும். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். வீட்டின் பிரச்சனைகள் நிவர்த்தி  ஆகும். பணியாளர்கள் சிரமப்பட்டு முன்னேற வேண்டியிருக்கும். தொழில் வியாபாரம் பழைய பாக்கி வசூல் ஆகும். கலைஞர்கள் நல்ல வருவாய் பெறுவார்கள். மாணவர்கள் கவனமாக செயல்படவும்.. விவசாயம் சுமாரான பலனே இருக்கும். குலதெய்வ வழிபாடு செய்யவும்.


கும்பம் (Aquarius):

aquarius kumbam

சனி பகவான் நன்மை செய்வார். குடும்பம் ஆரோக்கியமாக காணப்படும். எதிரிகள் சரண் அடைவார்கள். பணியாளர்கள் நல்ல நுட்பத்தை கையாளுவார்கள். வியாபாரம் பழைய பாக்கி வசூலாகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவார்கள். மாணவர்கள் பாராட்டைப் பெறுவார்கள். விவசாயம் சீராக இருக்கும். சிவ  வழிபாடு செய்யவும்.


மீனம் (Pisces):

pisces meenam

சுக்கிர  பகவான் நன்மையே செய்வார். வீட்டின் தேவைகள் பூர்த்தி ஆகும். கணவன் மனைவி உறவுகள் இனிதே இருக்கும். பணியாளர்கள் உயர்வு  பெறுபவர்கள். தொழில் வியாபாரம் லாபம் அதிகரிக்கும். கலைஞர்கள் தேவை பூர்த்தியாகும். மாணவர்கள் முன்னேற்றம் உச்சத்தை எட்டும். விவசாயம் லாபம் ஈட்டித்தரும் . நவகிரக  வழிபாடு செய்யவும் – rasi palangal june 07 – june 13.

– முத்துசாமி (அஞ்சல் துறை ஓய்வு) 

You may also like...

1 Response

  1. வார ராசிபலனுடன், அந்தந்த ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய தெய்வம் பற்றிய குறிப்பு அருமை..நன்றி!