சிந்தனையே வெற்றி

உறங்கிய சந்தர்ப்பங்களும் sindhanaiye vetri
தவறிய சந்தர்ப்பங்களும்
உயிர்த்தெழும் உன் சிந்தனையால் .

இரவைத் தேய்த்து பகலை துயில்
எழுப்பும் கதிரவனின் சிந்தனை போல்!
தினம் தினம் நிழலாய் உன்னில் உதிக்கும்
சிந்தனைகளை நிஜத்தில் உருவாக்கு ! !

காலம் கடந்த பயணங்கள்
தேவையில்லை , உன்னில்
பயணிக்க காலம் காத்திருக்கிறது.

உன் உள்ளம் உருக்கும் மாயை
உருவங்கள் வேண்டாம் ..

வழியெல்லாம் விழியைத் தேடும்
உளறல்கள் வேண்டாம் ?

உன் விழியில் வழித் தேடு !
வெற்றி உனதே ! ! ! !

sindhanaiye vetri

 – நீரோடைமகேஷ்

You may also like...

1 Response

  1. Thamarai says:

    அருமை நல்ல ஊக்கம் தந்த வரிகள்