திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நவராத்திரி நெய்க்குளம் தரிசனம்

திருமீயச்சூர் லலிதாம்பிகை திருக்கோயில் அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோயில் மற்றும் கோயிலின் உள்ளே இளங்கோயில் என்னும் அருள்மிகு மின்னும் மேகலை சமேத சகல புவனேஸ்வரர் திருக்கோயில் என இரண்டு கோயில்கள் சேர்ந்து அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க கலை நயம் மிகுந்த சிவ தலமாக விளங்குகிறது neikkulam thirumeeyachur.

 

இக்கோயிலின் சிறந்த சிற்பக் கலைக்கு உதாரணமாக, சுவாமி அம்பாளை அமைதியாய், சாந்தமாய் இருக்கச் சொல்லும் தோற்றத்தில் இத்தலத்தின் க்ஷேத்திர புராணேஸ்வரர் திருவுருவ சிலை அமைந்துள்ளது.

திருமீயச்சூர் ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் தோன்றிய திருத்தலம். இங்குதான் ஸ்ரீ ஹயக்ரீவர், அகத்திய முனிவருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்தார். அகத்தியரும் ஒரு பௌர்ணமி நாளன்று ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தினால் திருமீயச்சூர் லலிதாம்பிகையை வழிபட்டதுடன் ஸ்ரீலலிதா நவரத்தின மாலை என்ற பாடலையும் தமிழில் இயற்றி அம்பிகைக்கு அர்ப்பணித்தார். இதனை தினமும் படித்து லலிதாம்பிகையை வழிபட சகல நலன்களும், செல்வச்செழிப்பையும் அடைவது உறுதி என்று கூறப்படுகிறது.

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் நவராத்திரி காலத்தில் மிகவும் பிரசத்தி பெற்றது.

விஜயதசமியன்று மூன்று மூட்டை அரிசியில் சர்க்கரைப் பொங்கல், புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும்.

சர்க்கரைப் பொங்கலின் நடுவில் பள்ளம் அமைத்து இரண்டரை டின் நெய் ஊற்றப்படும்.

தேவிக்கு நன்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டு திரை விலக்கப்படும் போது தேவியின் பிம்பம் சர்க்கரைப் பொங்கலில் உள்ள நெய்க்குளத்தில் தெரிவதைக் காண்பது பெரும் பாக்கியம்.

இதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது என்று நம்பப்படுகிறது.

இத்தலத்தின் தல விருட்சமாக வில்வ மரமும், புண்ணிய தீர்த்தமாக சூரிய புஷ்கரணி தீர்த்தமும் அமைந்துள்ளது.

You may also like...

2 Responses

  1. Pavithra says:

    Arumai entha kachi kana aayiram kangal vendum….

  2. VEERARAGHAVAN KANNAN says:

    இந்த நெய்க்குளத்தின் பின் ஏதாவது கதை உள்ளதா?