கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஜென்மாஷ்டமி என்பது சக்தி வாய்ந்த 24 மணி நேரப் பொழுதாகும். இந்தக் காலகட்டத்தில், பகவான் கிருஷ்ணரின் தேய்வீக ஆற்றலால், இம் மண்ணுலகம் நிறைந்து விடுகிறது.

ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அஷ்டமி) ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது. தென்னிந்தியாவில் ஸ்ரீஜெயந்தி, ஜென்மாஷ்டமி,கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. கிருட்டிணன் (கிருஷ்ணன்) நடுநிசியில் பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை, முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு விரதம் இருப்பவர்கள் நள்ளிரவில் கிருஷ்ணனின் பிறந்த நாளைக் கொண்டாடும் வரை விரதம் இருப்பது வழக்கம். நள்ளிரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிப்பார்கள். அல்லது மறுநாள் காலையில் தகிலாவை உட்கொண்டும் விரதத்தை முடிப்பர்.

தகிலா என்பது பல்வேறு வகை தின்பண்டங்களுடன் தயிர், பால், வெண்ணெய் போன்றவற்றை கலந்து தயாரிக்கப்படுகிறது. கோபியர்களுடன் மாடு மேய்க்கும் போது கிருஷ்ண பகவான் எல்லோருடைய கட்டு சாதத்தையும் சேர்த்து உண்டது ஐதீகம். இந்த பாரம்பரியத்தை நினைவு கூர்ந்து பின்பற்றும் விதமாக தகிலா தயாரிப்பதும், தயிர் பானையை உடைப்பதும் வழக்கத்தில் உள்ளன. 

பகவான் விஷ்ணுவின் 9 ஆவது அவதாரமான கிருஷ்ண பகவானை, அவரது பிறந்த நாளில் வழிபட்டு மகிழ்விப்பது, கீழ்க்கண்ட ஆசிகள் கிட்டும் என புராணங்கள் கூறுகின்றன:

  1. ஆன்மீக வளர்ச்சி ஏற்படும்.
  2. விருப்பங்கள் நிறைவேறும்.
  3. பொருளாதார முன்னேற்றம் உண்டாகும்.
  4. தடைகள் விலகும்.
  5. குழந்தை வரம் கிடைக்கும்.
  6. உறவுகள் மேம்பாடும்.
  7. வறுமை நீங்கும்
  8. நோய்கள் விலகும்.
  9. தெய்வீக ஞானம் கிடைக்கும்.
  10. பாவங்கள் மறையும்.

கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு கவிதை

You may also like...