நீல கண்ணனே நீ வர வேண்டும்

ஜகம் காக்க, துவாபர யுகம் காக்க
அவதரித்த நீல மலரே – krishna jayanthi sirappu kavithai,

உன் குழலோசை தனில் மயில்கள் மயங்கும்
மாலைப்பொழுது புலர்ந்ததை உணராமல்,

இலையுதிர் கால சருகும் தன் கிளை பற்றும்
நிந்தன் குழலோசை கேட்டால்,

கம்சனை துவம்சம் செய்து
வம்சம் திளைக்க வைத்தாய்,
பாண்டவர் மானம் காத்தாய்,
உலகம் நல்வழிப்பட கீதை தந்தாய்,
நட்பின் இலக்கணமாய்த் திகழ்ந்தாய்,
தர்மம் நிலைக்கச் செய்தாய்,
யுகங்கள் போற்றும் நின் மலரடி.

ஓம் நமோ வாசுதேவாய நமக !
ஓம் நமோ நாராயணா !

அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி மற்றும்
ஜன்மாஷ்டமி வாழ்த்துக்கள்!

உங்கள் நீரோடை மகேஷ்

You may also like...