வாசகர்களின் நவராத்திரி கொலு

பெண்கள் விரதமிருந்து வழிபடக்கூடிய வழிபாடுகளில் சஷ்டி விரதம், மாங்கல்ய பூஜை மற்றும் முக்கிமாக நவராத்திரி வழிபாடு ஆகியன அடங்கும். இதில் நவராத்திரி வழிபாட்டில் முக்கிய பங்கு வகிப்பது கொலுவைத்து கொண்டாடுவதாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையின் மீது பல வித பொம்மைகளை வசதியாக அலங்க ரித்து வைத்து வழிபடுவதாகும். ஐம் பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களுக் கு சகல நலங்களையும் அம்பிகை தருவாள் என்பது ஐதீகம் readers golu photos.

நவராத்திரி பற்றியும் ஒன்பது நாள் வழிபாடு பற்றியும் நமது முந்தைய பதிவில் பார்த்தோம். நமது நீரோடை வாசகர்களில் சிலர் கொலு வைத்து வழிபட்டு அதன் புகைப்பட தொகுப்பையும் நம்மிடம் பகிர்ந்தனர். அவைகளை காண்போம்.

அவைகளில் முக்கியமாக நாம் அனைவரும் அறிந்த மனுநீதி சோழனின் ஆட்சி முறை அடங்கிய மண் பொம்மை தொகுப்பு குறிப்பிடத்தக்கது.

நம்மில் பலர் அறிந்தது மனுநீதி சோழன் தனது மகனை தேர்க்காலில் இட்டு பழி கொடுப்பதை தான். ஆனால் உண்மையில் அவர் அப்படி செய்கையில் தேர் சக்கரம் மனுநீதி சோழனின் மகனின் கழுத்தில் ஏறி செல்லாமல் காற்றில் பறந்தது. அந்த நிகழ்வில் கன்றாக வந்தது இந்திரனும், பசுவாக வந்தது மகா ஈஸ்வரனும் ஆவார்கள். மனுநீதி சோழனின் ஆட்சியில் எந்த தவறும் நிகழாத தருணத்தில் கடைசீயாக அவரை சோதிக்க பரமசிவன் நடத்திய நாடகமே இதுவாகும்.

You may also like...

2 Responses

  1. Pavithra says:

    நேரில் சென்று பார்க்க முடியவில்லை, இருந்தாலும் இந்த தொகுப்பு வழியாக பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
    நீரோடைக்கு நன்றி.

  2. Rajan says:

    அருமை மிகவும் நன்றாக உள்ளது.