தீபாவளியை ஏன் கொண்டாடுகிறோம்

தீமை போக்கி நன்மை தரும் தீபாவளி

நம்மால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அது மட்டுமல்லாது வெற்றியின் அடையாளமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். தீபாவளியை தீப ஒளி என்றும் குறிப்பிடுவதுண்டு. தீமை அழிந்து நன்மை பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு கதை பின்னணி உள்ளது அது போல தீபாவளிக்கும் பல கதைகள் உண்டு. முக்கியமாக நரகாசுரனை வதம் செய்த நாளாக பலரால் சொல்லப்படுகிறது dheepavaliyai en kondadukirom.

dheepavali kondaduvathan nokkam

தீபாவளி உருவான கதை

மகா விஷ்ணு வராக அவதாரமெடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அளிக்க சென்ற பொழுது அவரின் சரீரத்தால் பூமாதேவிக்கு பிறந்தவன் நரகாசுரன். அடிப்படையில் போரின் பொது பிறந்ததால் அசுர குணங்கள் நிரம்பி இருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. அவனின் அட்டகாசங்களை அடக்க எண்ணிய விஷ்ணு தந்திரம் செய்கிறார். அவன் பூமித்தாயின் மகனென்பதால் நேரடியாக அவனை வாதம் செய்ய முடியாது. ஆகவே போரின் போது அம்பு படுமாறு தந்திரம் செய்து மயங்கி விழுகிறார். கோபம் கொண்ட மகாலக்ஷ்மி (சத்யபாமா) நரகாசுரனை போருக்கு அழைத்து வதம் செய்து வெற்றிகொண்ட நாள் தான் நரகாசுரனின் வேண்டுதலின் பேரில் பின்னாளில் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. இன்னொரு வரலாற்று நிகழ்வில் பரமசிவன் சக்திக்கு தன்னில் பாதியை அளித்து அர்த்தநாதீஸ்வரராக காட்சியளித்த நாள் என்றும் பேசப்படுகிறது dheepavaliyai en kondadukirom.

அனைத்து சமூகத்தாரும் போற்றும் தீபாவளி

தீபாவளி தெற்காசிய நாடுகள் மட்டும் அல்லாது உலகத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டுகளில் உலகின் பல்வேறு நாடுகளில் வணிகம் செய்த நமது மக்கள் அங்கும் சென்று தீபாவளியை கொண்டாடியதால் இன்று வரை பல இடங்களில் தீபாவளி கொண்டாடப் படுகிறது. மன்னர் காலத்தில் இந்துக்கள் அல்லாத மற்ற சமயத்தாராலும் கொண்டாடப்பட்டது. உதாரணமாக முகலாய மன்னர்கள் பலரும் மக்களுடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடியதாக சொல்லப்படுகிறது.

வெளிச்சத்தின் திருவிழா

தீபாவளி வெளிச்சத்தின் திருவிழா என்று கொண்டாடப்படுவதன் பின்னணி நரகாசுரன் கொல்லப்பட்ட நாள் என்று புராணங்களில் கூறப்படுகிறது. அவனது உண்மைப்பெயர் வேறு, அவன் மக்களுக்கு நரகத்தின் வேதனையை தந்ததால் அப்பெயர் பெற்றான் என்றும் கூறுவர். புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் நம்மிடம் ஒரு வித மந்த தன்மை ஏற்படும் ஆகவே பல்லாயிரம் ஆண்டுகளாவே நம் முன்னோர்கள் தீபம் ஏற்றி கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது. தீபாவளி இருளை , மந்தத்தன்மையை நீக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

You may also like...

1 Response

  1. Pavithra says:

    Arumai..
    Nalathoru seithi….pathivirku nanrikal pala