கந்த சஷ்டி சிறப்பு

கந்த சஷ்டி சிறப்பு

தீபாவளிக்கு அடுத்த நாளான அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி ஆகிய ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. முதல் நாளான பிரதமை அன்று அதிகாலை ஆற்று நீரென்றால் எதிர்முகமாக, கிணற்று நீரென்றால் வடக்கு திசையில் நின்றும் குளித்து விரதத்தை ஆரமிக்கவேண்டும் .

பூரண கும்பத்தில் தண்ணீர் நிரப்பி மாவிலை வைத்து, தர்ப்பையை வைத்து முருகனை அதில் ஆவாகனம் செய்து மலரிட்டு தீபம் காட்டி வழிபடுவது சிறப்பு. ஐந்து நாட்கள் நோன்பு இருந்து ஆறாம் நாள் சஷ்டியன்று நீராடி முருகனை வழிபடுதல் சிறப்பு.

விரத நாட்களில் திரு முருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், கன் தரனுபூதி, கந்தலங்கரம், கந்தர்குந்தாடி, கந்தா கலிவெண்பா, திருப்புகழ் படித்தால் முருகன் அருள் கூடும் என்பது நம்பிக்கை மற்றும் சூரா சம்ஹாரத்தில் கலந்துகொள்ளவேண்டும் என்பது கட்டாய வழிபாடாக பலர் கடை பிடிக்கின்றனர்.

kandha sasti viratham

ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறு செய் தனி வேல் வாழ்க
குக்குடம் வாழ்க -செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க
ஆனை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்கசீர் அடியார் எல்லாம் !

கந்த சஷ்டி விரதம்

வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும். உண்ணா நோன்பு இருக்கும் போது செரிமான சக்தி ஓய்வெடுக்கும். எனவே செரிமான சக்தியும், இயக்க சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக உருமாறும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது. உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை.

ஆறுமுகனுக்காக ஆறு நாட்கள் விரதம்

‘செரிமான சக்தி’ தான் ‘முருகனின் தாய் பார்வதி. ‘நோய் எதிர்ப்பு சக்தி’ தான் ‘முருகன்’. ‘நோய்’ தான் ‘அரக்கன்’. வெளியில் நடக்கும் அதே போர் உங்கள் உடலிலும் நடக்கிறது. இந்த விழாவில் எப்படி ‘முருகப்பெருமான்’ தனது தாயிடம் இருக்கு சக்தி பெற்று அசூரனை வதம் செய்கிறாறோ, அதேப்போல் நமது உடலில் உள்ள ‘நோய் எதிர்ப்பு சக்தி’ தனது தாயான செரிமான சக்தியிடம் இருந்து சக்தி பெற்று நோய்களை வதம் செய்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

வெளியில் முருகனுக்கும்,அரக்கனுக்கும் நடக்கும் அதே போர் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க்கும் நடக்கிறது. இறுதியில் வெல்வது யார் என்று உலகிற்கே தெரியும். எப்படி ஒவ்வொரு நாளும் ‘முருகன்’ சக்தி பெற்று ஆறாவது நாள் அசூரனை வதம் செய்கிராறோ, அதேப்போல் தான் ஒவ்வொரு நாளும் நமது ‘நோய் எதிர்ப்பு சக்தி’ வலிமையடைந்து ‘டெங்கு போன்ற எந்த வைரஸ் கிருமிகள், நோய்கள்’ இருந்தாலும் வதம் செய்துவிடும்.

என்ன சாப்பிடலாம்

உடலில் நடக்கும் இந்த அறிவியல் உண்மையை நமக்கு சூட்சமமாக சொல்லவோ என்னவோ, ஆறு நாட்களையும் ‘உண்ணா நோன்புடன்’ அழகான விழாவாக வடிவமைத்துள்ளார்கள். ஆறு நாளும் தண்ணீர் மட்டும் குடித்து இருக்கலாம். ஆறு நாளும் பாலும், பழமும் மட்டும் உண்டு இருக்கலாம். ஆறு நாளும் பழங்களை மட்டும் உண்டு இருக்கலாம். இதில் உங்களுக்கு பழக்கம் இருக்கும் முறை எதுவோ, அந்த முறைப்படி இருக்கலாம். வேலைக்கு செல்வோருக்கு, வேறு உணவு தேவைப்பட்டால், தேங்காய், வேர்கடலை சாப்பிடலாம், இதனால் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும்.

ஆறு நாட்கள் ஓய்வு

எதையெல்லாம் நாம் சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியுமோ அதை எல்லாம் சாப்பிடலாம். பழங்கள், இளநீர், நாட்டு காய்கனிகள், தேங்காய், வேர்கடலை என பச்சையாக சாப்பிடக்கூடிய உணவுகளை மட்டும் ஆறு நாட்கள் எடுக்கலாம். நீரிழிவு நோயாளிகள், ஆறு நாள் பழங்களை மட்டும் எடுக்க முடியாதவர்கள் எல்லாம் தேவைப்பட்டால் இதனுடன் பட்டை தீட்டப்படாத அரிசி கஞ்சி, நீராகாரம், அவல், நாட்டு பசும் பால் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

நன்மைகள் என்ன

ஆண்டுக்கணக்கில் தேங்கிய நச்சுக்கழிவுகள் வெளியேறலாம். சிறுநீர் அடர்த்தி நிறமாக வெளியேறலாம். மலம் கருப்பாக வெளியேறலாம். சளி வெளியேறலாம். உடல் ஓய்வு கேட்கலாம். காய்ச்சல் வரலாம். வலிகளை உணரலாம். அதிக உடல் எடை சீராகும், முகம் பொழிவு பெறும். கண்ணில் ஒளி வீசும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். இரத்தம் தூய்மை பெறும். தோலின் நிறம் சீராகும். மன உளைச்சல் குறையும், கவலை, பயம், கோபம் குறையும். புத்துணர்வு கிடைக்கும். உடல் பலம் பெறும். மனம் அமைதி பெறும். ஆழ்ந்த தூக்கம் வரும். கந்தன் அரக்கனை சம்ஹாரம் செய்வது போல் உடல், உங்கள் அனைத்து பிரச்சனைகளை அழித்துவிடும்.

You may also like...