கார்த்திகை தீபம் ஆன்மிகம் மற்றும் அறிவியல் பின்னணி

கார்த்திகை தீபம் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை (கிருத்திகை) நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று வீடுகளை விளக்குகளால் அலங்கரித்து மலர்க்கோலமிட்டு கொண்டாடுவது சிறப்பு. அந்நாளில் பொரியும் அவலும் வெல்லப்பாகுடன் கலந்து சிவனுக்கு படைத்தது வழிபடுவது வழக்கம் karthigai deepam sirapamsam.

வெளிச்சம் தரும் கார்த்திகை

முதல் நாளான பரணி நட்சத்திரத்தன்று ஒரு வேலை விரதமிருந்து திருக்கார்த்திகை தினத்தை வழிபடுவது மிகச்சிறப்பு. எண்ணெய் கரைந்து தீரும் திரி கருகி மறையும் ஆனால் வெளிச்சம் தந்தே மறைகிறது. எண்ணெய் மற்றும் திரி போல பிறருக்காக திகாயம் செய்து வாழ வேண்டும் என்பதையே கார்த்திகை தீபம் உணர்த்துகிறது.

karthigai deepam siramsam

கார்த்திகை சிறப்பம்சம்

கார்த்திகை நாளில் வடக்கு, மேற்கு மற்றும் கிழக்கு திசைகளில் விளக்கு ஏற்றலாம். தெற்கு திசையில் மட்டும் விளக்கு ஏற்ற கூடாது. வடக்கில் ஏற்றுவோர் திருமணத்தடை நீங்க வேண்டி விளக்கேற்றுவர். மேற்கு நோக்கி விளக்கு ஏற்றுவோர் கடன் தொல்லை நீங்குதலுக்கு வேண்டி விளக்கேற்றுவர். கிழக்கு திசை நோக்கி விளக்கேற்றுவோர் துன்பங்கள் நீங்க வேண்டி ஏற்றுவது மரபு.

விளக்கேற்றும் முறை

கார்த்திகை தினத்தன்று மாலையில் குறைந்தது ஆறு விளக்கேற்றி வழிபடுவது நன்மை பயக்கும். விளக்குடிகளை ஒரு முகமாகவோ பன்முகமாகவோ ஏற்றலாம். ஒருமுகத்தில் ஏற்றினால் நன்மை உண்டாகும். இரு முகத்தில் ஏற்றினால் குடும்பம் சிறக்கும். மூன்று முகத்தில் ஏற்றினால் குழந்தை பாக்கியம் உண்டாகும். நான்கு முகத்திற்கு செல்வம் பெருகும் என்றும் ஐந்து முகத்தில் ஏற்றினால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருவண்ணாமலை தீபம்

திருக்கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது. அன்று அதிகாலையில் அன்னமமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் எற்றி பூசைசெய்வர். பிறகு அந்த தீபங்கள் ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். திருவண்ணாமலை பௌர்ணமி வழிபாட்டை விட பலமடங்கு மக்கள் திரளாக வந்து கார்த்திகை தீபத்தை தரிசித்து செல்வார்.

கார்த்திகை விளக்கீடு

படைத்தல் தொழிலை செய்யும் பிரம்மாவும், காத்தல் தொழிலை செய்யும் மகா விஷ்ணுவும் தம்மில் யார் பெரியவர் என்ற கூற்றுக்காக போரிட்டதை கண்டு சிவா பெருமான் அக்னி வடிவமாக காட்சியளிக்கிறார். பின்னர் ஆகாயத்திற்கும் பாதாளத்திற்கும் உருவெடுத்து பிரம்மனை தலையில் உள்ள மலரை தொட்டு வரவேண்டும் என்றும். விஷ்ணுவை கால் விரலை தொட்டு வர வேண்டும் என்றும் போட்டி வைக்கிறார் இருவரும் இயலாமல் போய் இறுதியில் தங்களுக்கு அளித்த ஜோதி வடிவ தரிசனத்தை அனைவருக்கும் தரிசனம் தரும்படி வேண்டிக்கொண்டனர். இதனாலே கார்த்திகை தீபம் வழிபாடு உருவானது என்று கூறப்படுகிறது.

somavaara valibaadu

சோமவார வழிபாடு

கார்த்திகை மாதத்தில் சிவாலயத்தில் முதல், இரண்டாவது அல்லது ஏதேனும் ஒரு சோமவாரத்தில் 108 அல்லது 1008 சங்குகளை வைத்து யாகம் நடத்தி வழிபடுவது மரபு. பெரும்பாலும் நூற்று எட்டு வலம்புரி சங்குகளால் அலங்கரித்து யாகம் நடத்தி சிவன் யாரும் பெறுவது சிறப்பு. பின்னர் அம்பாளுக்குக்கும் சிவபெருமானுக்கும் அலங்கார ஆராதனை செய்து சோமவார வழிபாடு நிறைவுபெறும்.

You may also like...