மாங்காய் நிலக்கடலை சாதம்

குழந்தைகள் விரும்பும் மாங்காய் சாதம் செய்முறை. அதிலும் கூடுதல் சுவை தரும் நிலக்கடலை கலவை – Raw Mango Rice Recipe

தேவையான பொருள்கள்

மாங்காய் – 1 பெரியது.
நிலக்கடலை – 100 கிராம்.
சின்ன வெங்காயம் – 10
மிளகாய் பொடி – 1 தேக்கரண்டி
நல்ல எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு, கறிவேப்பிலை ,கொத்து மல்லி
வடித்த சாதம் – 2 கப்

செய்முறை

மாங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அல்லது துருவிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிது வெந்தயம்,கடுகு நலக்கடலை சின்ன வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். அதில் மிளகாய் பொடியையும் சேர்க்கவும்.மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கவும். நன்கு வதங்கியவுடன் மாங்காயையும் சேர்த்து வதக்கவும்.அனைத்தும் எண்ணெய்யில் ஒன்று சேர்ந்து கலந்தவுடன் வடித்து எடுக்கப்பட்டுள்ள சாதத்தை (உதிரியாக) சேர்த்துக் கிளறவும்.மேலே மல்லி கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும். சுவையான மாங்காய் நிலக்கடலை சாதம் தயார்.

– ஏஞ்சலின் கமலா

You may also like...

2 Responses

  1. தி.வள்ளி says:

    அருமையான,செய்வதற்கு எளிதான ,செய்முறை கொண்ட சுவையான உணவு .இதே செய்முறையில் பரும் நெல்லிக்காயையும் சாதம் செய்யலாம் .பகிர்தலுக்கு நன்றி சகோதரி

  2. கு.ஏஞ்சலின் கமலா says:

    நன்றி .வள்ளி Mam