என் மின்மினி (கதை பாகம் – 41)

சென்ற வாரம் அவன் மேலே உள்ள உன்னோட காதல் உண்மைனா நீ கூப்பிட்டு பேச வேண்டியது தானே என்று அவள் மனசாட்சி அவளை குத்திக்காட்டியது – en minmini thodar kadhai-41

en minmini kathai paagam serial

இரவுப்பொழுது எப்படியோ முடிந்து போக சூரியன் தன் கதிர்களை எழுப்பியவண்ணம் பொழுது புலர்ந்து போக அவசர அவசரமாக ஆபீஸ்க்கு கிளம்பி சென்றாள் ஏஞ்சலின்… எதிரினில் தனது கைபேசியினை நோண்டியவாறே பிரஜின் வருவதை பார்த்து தலையை குனிந்தபடி.,எதாவது ஒரு வார்த்தை பேச மாட்டானா என்று ஏக்கத்துடன் நடந்தாள்…

நிமிர்ந்து பார்த்த பிரஜின் சற்று தயங்கியவாறே, ஏஞ்சல் உன்கிட்ட கொஞ்ச பேசணும் நேரம் கிடைக்குமா என்று கேட்டான்… அவன் அப்படி கேட்டதுதான் உண்டு மனசுக்குள் மத்தாப்பூ ஒளிவீசியது போலே மகிழ்ச்சி அலை வீசியது… ஆனாலும் வெளிக்காட்டாதவளாக ம்ம் இப்போ எனக்கு நிறைய வேலை இருக்கு., ஈவினிங் 6 மணிக்கு மேலே வேணும்ணா பார்க்கலாம் என்று சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்…

என்ன ஆச்சு இவளுக்கு,முன்னாடி எல்லாம் எப்போதுடா நான் பேசுவேன் என்று காத்துட்டு இருப்பா.இப்போ என்னன்னா ஈவினிங் பாக்கலாம் அப்படிணு சொல்லிட்டு கண்டுக்காம போறா என்று வருத்தம் அடைந்தான் பிரஜின்…
பின்னே உனக்கு இதெல்லாம் வேணும்,அந்த புள்ள எவ்வளவுதான் விட்டுகொடுத்து போகும். ஒரு அளவு வேணா…

அந்தபுள்ளஆசையா ஒரு வாட்ச் கொண்டு பரிசா தந்தது.நீ என்ன பண்ணுனே அதை பேசி பேசி காயப்படுத்திட்டே.இப்போ போயி அங்க குடையுது,இங்க குடையுதுணு சொன்னா.,முதலில் போயி அந்த புள்ளகிட்டே மன்னிப்பு கேளு என்றது அவன் உள்மனது…

எப்போதுதான் ஈவினிங் 6 மணி ஆகும் என்று காத்திருந்தவாறே தன் வேலையினை தொடர்ந்தான் பிரஜின்… காத்திருந்து காத்திருந்து ஒரு வழியாக மணியும் 6 ஆனது.அவசர அவசரமாக வேலையினை முடித்துவிட்டு ஆபீஸினை விட்டு வெளியே வந்து ஏஞ்சலுக்காக காத்துகொண்டிருந்தான் பிரஜின்…

ஆபீஸில் இருந்து வெளியே வரும் வழியினை எட்டி எட்டி பார்த்து ச்சே இன்னும் வரல.மணி 7.10 ஆகுது.உள்ளே இன்னும் என்னதான் பண்ணி தொலையுறா. வரட்டும் அப்படியே மூக்கு மேலேயே குத்தி விடுறே என்று மனசுக்குள் திட்டியவாறே மீண்டும் ஆபீஸ் வாசலை எட்டிப்பார்த்தான் பிரஜின்…

7.45மணி இருக்கும்.மெதுவாக நடந்து வெளியே வந்தாள் ஏஞ்சலின்…தூரத்தில் இருந்து பார்த்து கொண்டே., நான் எவ்வளவு நேரம் வெயிட் பண்றே. இவ மெதுவா ஆடி அசைந்து வருவதை பாரே.திமிர் புடிச்சவ,ராட்சஷி என்று புலம்பிக்கிட்டே சற்று உற்று அவளை நன்கு கவனித்தான் பிரஜின்…. – en minmini thodar kadhai-41

– அ.மு.பெருமாள்

பாகம் 42-ல் தொடரும்

You may also like...

1 Response

  1. தி.வள்ளி says:

    காதலர்களின் உணர்வை நன்றாக பிரதிபலிக்கிறது கதை ..வளரட்டும் …வாழ்த்துக்கள்