என் மின்மினி தொடர்கதை (பாகம் – 55)

சென்ற வாரம் ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை தொடர்ச்சியாக பத்து பாகங்கள் – என் மின்மினி தொடர்கதை பாகம்-55

En minmini thodar kadhai

என்ன எங்கேயோ கூட்டிட்டு போறேனு சொல்லிக்கிட்டு எங்கேயோ கட்டான்தரையிலே கொண்டு உக்கார வெச்சுருக்கீயே இப்போவே மணி மூணு ஆகுது.நான் சீக்கிரம் ஹாஸ்டல் போகணும் கிளம்பலாம் என்றாள் ஏஞ்சலின்.
நான் கூட்டிட்டு போறேனு சொன்ன இடம் இது தான் என்றான் பிரஜின்.

இங்க கூட்டிட்டு வரவா இவ்வளவு பில்டப் கொடுத்தே,நான் கூட பார்க்காத அதிசயத்துக்கு கூட்டிட்டு போக போறே அப்படினு கனவு கண்டு வெச்சுட்டே. இப்படி என்ன ஏமாத்திட்டீயே என்று சலித்து கொண்டாள் ஏஞ்சலின். ஓகோ. நீ அப்படி ஒன்னும் சலித்து கொள்ள வேண்டாம்.கொஞ்சம் என்கூட வா என்று அவளின் கையை பிடித்தவாறு குடுகுடுவென ஓடினான் பிரஜின். அவன் தன் கைய புடிச்சுகிட்டு ஓடுகிறான் என்ற சந்தோஷத்தில் அவனுடன் ஈடுகொடுத்து ஓடினாள் ஏஞ்சலின்.

தீடீரென்று ஓடிகொண்டிருந்தவன் நின்று பிடித்த கையை விட்டு விட்டு அவள் பின்னால் ஒளிந்தப்படியே வெடுக்கென்று அவளின் கண்களை தன் கையால் பொத்திகொண்டே அவளை முன்னோக்கி அழைத்து சென்றான் பிரஜின்
ஹே என்ன பண்றே.என்ன ஆச்சு.ஏன் என்னோட கண்ணை பொத்தி கூட்டிட்டு போறே.அப்படி என்ன அதிசயத்தை காட்ட போற என்றவாறே அவனே கதி என்று அவன் காட்டிய பாதையில் தன்னையே மறந்து நடந்தாள் ஏஞ்சலின்.

கொஞ்ச நேரம் சென்றவுடன் தன் கையால் மூடியிருந்த அவள் மெல்லிய கண்களை திறந்தான் பிரஜின். கண்களை திறந்தவளுக்கு ஒரு நிமிடம் ஏதோ சொர்க்கத்தில் மிதப்பது போலே உணர்வு… தன் கண் முன்னே நீரோடைகள் சலசலக்க அதில் வெள்ளிக்கெண்டை மீன்கள் துள்ளி எழுந்து ஆடிகொண் டிருக்க,இமாலயம் எட்டும் தூரத்தில் இருந்து அருவிகள் ஆர்ப்பரிக்க,தூரத்தில் யானைபாகன் ஒருவன் தன் யானைகளை குளிப்பாட்டி கொண்டிருந்தான்…

அதே நேரத்தில் அந்த யானைகள் ஆனந்தத்தில் நீரை வாரி இறைத்து அந்த இடத்தை இன்னும் அழகாக்கி கொண்டிருந்தன… எங்கிருந்தோ வந்துகொண்டிருந்த கோவிலின் மணியோசை ஒன்றும் அந்த இடத்தை இன்னும் இன்னும் பிரமிப்பாக்கி அவளை ஒரே இடத்தில் நிற்க வைத்தது.

இயற்கையோடு இணைந்தவளை ஹோய் என்று சத்தமிட்டு வெளியே கொண்டுவந்தான் பிரஜின் ஹேய் இது என்ன இடம்…இவ்ளோ அருமையாக இருக்கு,கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் பச்சைபசேல்னு என்ன ஒரு அற்புதம் என்று தன்னை மறந்து கேள்விகணைகளை தொடுத்து கொண்டே போனாள் ஏஞ்சலின்…. – என் மின்மினி தொடர்கதை பாகம்-55

– அ.மு.பெருமாள்

பாகம் 56-ல் தொடரும்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *