என் மின்மினி தொடர்கதை (பாகம் – 54)

சென்ற வாரம் ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை தொடர்ச்சியாக பத்து பாகங்கள் – என் மின்மினி தொடர்கதை பாகம்-54

En minmini thodar kadhai

இது என்ன சர்ப்ரைஸ் பண்றே.இன்னிக்கு உனக்கு தானே பிறந்தநாள்,நான் தானே எதாவது வாங்கி தரணும். நான் பண்ண வேண்டிய வேலையை நீயே பண்ணிட்டே.வேலை மிச்சம் என்று சிரித்தாள் ஏஞ்சலின். அது எப்படி உன் பிறந்த நாளுக்கு மட்டும் உனக்கு நானா கிஃப்ட் வாங்கி கொடுத்தே.நீ தானே எனக்கு வாட்ச் வாங்கி கொடுத்தே என்றவாறே,சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் இன்னிக்கு பரிசு ஒன்னும் இல்லையா என்றவாறே அவள் மெல்லிய
மான்கால்களில் கொலுசினை மாட்டினான் பிரஜின்.

ம்ம்ம்ம் அதான் கொஞ்ச முன்னாடியே கொடுத்தேனே,போதாதா என்று வெட்கத்தில் தலை குனிந்ததவாறே அந்த பக்கமாக கொஞ்ச திரும்பே என்றாள் ஏஞ்சலின். ஏன் என்ன ஆச்சு.அப்படி எல்லாம் திரும்ப முடியாது.இப்படியே சொல்லு என்றான் பிரஜின். ஹே மீண்டும் மீண்டும் திரும்பு டா என்று அவள் சொல்ல…அவன் முடியவே முடியாது என்று மறுக்கவே தன் மாராப்பிலே ஒழித்து வைத்திருந்த வெள்ளிச்செயினை எடுத்து அவனிடம் நீட்டினாள் ஏஞ்சலின்.

பாருடா..சஸ்பென்ஸ் வெக்குறாங்க..என்று சிரித்தபடியே அவளிடம் இருந்து அந்த செயினை வாங்கி பார்த்தான் பிரஜின். அதில் அவளுடைய பெயரின் முதல் எழுத்து டாலராக தொங்கிகொண்டிருந்தது…சரியாக கூட கவனிக்காமல் அதை வாங்கி தன் சட்டை பாக்கெட்டில் போட்டுவிட்டு..,சரி எனக்கு ஒரு பெரிய டவுட்டு என்றவாறே தலையை சொரிந்தான் பிரஜின். உனக்கு எப்பவுமே உருப்படியா வர ஒண்ணு இந்த டவுட்டு மட்டும் தான்.ம்ம் சொல்லு கிளியர் பண்ணிருவோம் என்று கேட்டாள் ஏஞ்சலின்.

இல்ல நான் வந்து உன்ன புடிச்சிருக்குனு சொல்லும் போது ஒண்ணுமே சொல்லாம மண்ணு மாதிரி இருந்துகிட்டு டப்புனு ஒரு கிஸ்ஸ போட்டுபுட்டே.இதுல இருந்து நீ என்ன லவ் பண்றேனு நான் எடுத்துக்கலாமா என்றான் பிரஜின்.
ம்ம் அப்படி எல்லாம் இல்ல.ஆனா அப்படியும் கொஞ்சம் சொல்லலாம்.உன் இஷ்டம் எப்படி வேணுமோ அப்படி எடுத்துக்கோ என்றாள் ஏஞ்சலின். இது என்ன சாக்குபோக்கு.முடியவே முடியாது.உன் தேன்சுவை உதடுகள் சுவைத்த என் உதடுகள் எப்போதும் உனக்கு மட்டுமே.

சோ….ப்ளீஸ்…. ஐ லவ் யூ அப்படினு ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்லிறு.ப்ளீஸ் என்றபடி மெல்லியகெஞ்சலில் சிரித்தான் பிரஜின். நிஜமாகவா.ஓகோ..நீங்க அப்படி வரீங்களா.சரி சரி நீ இவ்வளவு சொல்றே.போன போகுது பொழச்சு போ என்று சிரித்தபடி யோசிச்சுகிட்டே ஐ லவ் யூ டா என்றாள் ஏஞ்சலின்.

மழையின் நனைந்த இருவரின் ஆடைகளும் உடலை குளிர்விக்க மீண்டும் மீண்டும் அவர்களின் பற்கள் தந்தி அடித்து கொண்டிருந்தன…. – என் மின்மினி தொடர்கதை பாகம்-54

– அ.மு.பெருமாள்

பாகம் 55-ல் தொடரும்

You may also like...