என் மின்மினி தொடர்கதை (பாகம் – 68)
முந்தைய பதிவை வாசிக்க – ஆசிரியர் சிறப்பு பகுதியில் தொடர்கதை ஆசிரியர் அ.மு.பெருமாள் அவர்களின் மின்மினி தொடர்கதை… – என் மின்மினி தொடர்கதை பாகம்-68
En minmini thodar kadhai
இன்னும் மழை வெளியே விட்டபாடில்லை.கொட்டி தீர்த்து கொண்டிருந்தது…
வீட்டுக்கூரையின் அந்தரத்தில் இருந்த ஒரு மின்சார விளக்கும் பக்,பக் என்று அணைந்து எரிய முயற்சித்து தோற்று போனது…அதே வேளையில் ஆளுக்கொரு வாயாக குடித்த தேநீர் இப்பொழுது முடிந்து போயிருந்தது.ஆனாலும் ஒரே டீ கப்பில் இருவரது கைகளும் பிரிய மனமில்லாமல் பிணைந்து கொண்டிருந்தது. அவன் தோளோடு சாய்ந்து இருந்தவள் எழுந்து செல்ல மனமின்றி அவனுடைய கண்களை பார்த்தவாறே மயங்கி., எப்போதும் என்னை விட்டு பிரிந்து போகமாட்டேதானே என்று கேட்டவாறே அவனது கன்னத்தினை லேசாக அவள் வருட…
ஜென்மங்கள் அத்தனையிலும்…
சத்தியமாய் சொல்கிறேன் இந்த ஜென்மம் மட்டுமல்ல நாம் பிறக்கும் ஜென்மங்கள் அத்தனையிலும் உன்னை மட்டுமே தான் என் துணையாக கொள்வேன் என்றவாறே அவன் கன்னங்களை பற்றிய அவள் கைகளை அவன் இறுகப்பற்றினான்…
இருவருக்குள்ளும் காதல் கரைப்புரண்டு,எல்லையை கடக்கும் நேரமும் வந்தது.இடியும் மின்னலும் இன்னும் அதிகமாகி இருவருக்குள்ளும் நெருக்கத்தை ஏற்படுத்தி காதலோடு காமங்களும் கைக்கோர்க்க…
மழை வெள்ளம் வெளியே கரைபுரண்டு ஓட,உணர்ச்சி வெள்ளம் இருவரின் மனதினில் பாய்ந்தோட.,, அவர்களையுமரியாமல் ஆசை என்னும் அமுத ஊற்றிலே நீராடி,சரசம் என்னும் கடல் அலையில் மூச்சடக்கி, முத்துக்குவியலாய் முத்தமிட்டு, அவன் ஏனோ கெஞ்ச,அவள் தான் மிஞ்ச. , இறுதியில் பாலோடு தேன் போல ஒன்றிணைந்து ஓர் உணர்ச்சி காவியமே அவங்களுக்குள் நடந்து முடிந்து கொண்டிருந்த வேளையில் மழையின் சத்தமும் கொஞ்சம் அடங்கி போனது…
மின்னலே நீ என்னுடன் இருக்க…
ஜன்னலின் வழியே மின்னலின் ஒளிக்கீற்றுகள் மட்டும் இருவரின் முகத்தினை ஒளியூட்டியபடி மின்னி கொண்டிருக்க அவனருகில் இருந்து கலைந்த தன் ஆடைகளை சரி செய்தபடி மெழுகுவர்த்தியை தேட ஆரம்பித்தாள் ஏஞ்சலின்…
மின்னலே நீ என்னுடன் இருக்க இன்னும் வேண்டுமோ விளக்கின் வெளிச்சம் என்றபடி அவளது கைகளை பிடித்து இழுத்து தன்வசமாக்கியபடி அவன் வர்ணிக்க.,
ம்ம்…ம்ம்…என்றபடி அவனருகில் சென்று அவனது தோளில் சாய்ந்தபடி இந்த நொடி இப்படியே நின்று விடாதா…உன்னுடன் சேர்ந்த இந்நொடி தான் என் வாழ்நாளிலே முக்கியமான,மறக்கமுடியாத நொடி என்று அவனிடம் அவள் சொல்லிக்கொண்டிருக்க அவனது விரல்கள் அவளது விரல்களை வருடிக்கொண்டிருந்தது…
ம்ம்.. ஹா…ஹா என்று சிரித்தபடி…ஏன் அப்படி சொல்லுறே.உன் ஆசைப்படி இந்த நொடி இப்படியே நின்று விட கூடாது…அப்படி நின்று விட்டால் நான் எப்படி உன்னை கல்யாணம் கட்டிக்கிறது.புள்ளைக்குட்டி பெத்துக்கிறது…எப்படி அவர்களை நாம படிக்க வெக்குறது என்று அவன் அடுக்கிக்கொண்டே செல்ல… தன் மெல்லிய ஆள்காட்டி விரலால் அவனது வாயை மூடி.,போதும் நான் உன்கிட்டே ஒரு முக்கியமான விசயம் சொல்லணும் என்று கண்கள் நிறைந்து ஓரங்களில் வழிய காத்திருக்கும் கண்ணீரோடு அவள் சொல்ல…
ஹே என்ன கண்ணு கலங்கி இருக்கு…எதுக்கு இப்போ அழுகை வருது.உன்னை நான் ஏமாத்திக்கிட்டு போயிருவேன்னு நினைத்து அழுகுறீயா என்று அவளிடம் அவன் கேட்க…
கடவுளால் தூக்கி எரியபட்ட..
இல்லையில்லை.ஒரு சதவீதம் கூட உன்னை நான் அப்படி நான் நினைக்கவில்லை.இனியும் அப்படி நினைக்க போவதுமில்லை.அப்படி நான் உன்னை தப்பா நினைச்சு இருந்தா என்னருகில் கூட வர தடை விதித்து இருப்பேன்…நான் உன்னை மனப்பூர்வமாக நம்புறேன்.அந்த நினைப்பு என்னை சுட்டுப்போட்டாலும் மாறாது என்றவாறே மீண்டும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள் ஏஞ்சலின்…
கேள்வியும் நீ,பதிலும் நீ என்றபடி நீயா ஏதோ சொல்ல வர அப்பறம் சொல்லாமல் நீயா அழுகுறே… எனக்கு ஒண்ணுமே புரியல என்று பதைப்பதைத்தான் பிரஜின்…
உண்மைதான். நீ சொல்ற அத்தனையும் உண்மைதான். நீ உன் மனசில் அத்தனை ஆசைகளை வைத்து கொண்டு என்கிட்டே பழகிட்டு இருந்துறுக்க…நானும் என் விருப்பப்படி உன்னுடன் ஒண்ணா இருந்தேன்… நாம இருவரும் உனக்கு நான், எனக்கு நீன்னு தான் இருக்கோம்…
ஆனா நான் அதுக்கு எல்லாம் தகுதி ஆனவள் இல்லை…நீ ஆசைபடுற அளவுக்கு என்னால் உனக்கு எதுவுமே செய்ய முடியாது.என்னை தயவுசெய்து மன்னிசுறு…ஏழேழு பிறவிக்கும் உன் கூட வாழனும்ன்னு தான் எனக்கும் ஆசை… ஆனா என்று சொல்ல வந்ததை சொல்லாமல் வார்த்தைகளை விழுங்க ஆரம்பித்தாள் ஏஞ்சலின்…
ஆனா என்ன???
சொல்லவந்த விசயத்தை தயவுசெய்து மறைக்காமல் சொல்லு.என்று அவன் அவளது கைகளை பற்றி பதற…அவளது கண்களில் இருந்து கண்ணீர் மாலை மாலையாக வழிந்து கொண்டிருந்தது…
நான் உன்னை ஏமாத்திவிட்டேன் பிரஜின். நான் உன்னை ஏமாத்திவிட்டேன். என்னை தயவுசெய்து மன்னிச்சுரு… நான் ஒரு ராசியில்லாத,இந்த பூமியிலே பிறக்க கூட தகுதி இல்லாத,யாருக்கும் கிடைக்காத ஒரு சாபத்தை வாங்கி, கடவுளால் தூக்கி எரியபட்ட,உனக்கு ஒரு வாரிசை பெத்து தர முடியாத ஒரு பாவி நான்…
நான் ஒரு மலடி…நான் உன்னை ஏமாத்திட்டேன்…நான் ஒரு மலடி என்று தலையில் அடித்து கதறி
தரையில் விழுந்து துடித்தாள் ஏஞ்சலின்…
அவள் சொல்வதை கேட்க கேட்க அவனுக்கு இடியே தலையில் இறங்கியது போலே இருந்தது…என்ன செய்வது என்று புரியாமல் விழியில் கண்ணீர் மல்க அவளருகில் போயி மெதுவாக அமர்ந்தான் பிரஜின்…
பாகம் 69-ல் தொடரும்
– அ.மு.பெருமாள் (அர்ஜுன் பாரதி)