நீரோடை இலக்கிய விழா (நிகழ்வு 9)
by Neerodai Mahes · Published · Updated
ஞாயிறு (29/12/2024) மாலை இணையவழியில் நடைபெற்ற நீரோடை இலக்கிய நிகழ்வு இந்த முறை கவி மன்றமாக நிகழ்ந்தது. [https://meet.google.com/qiu-cuty-hwh]
இது ஒரு புதிய முயற்சியாக இருந்தாலும் எதிர்பார்த்தைவிட வரவேற்பு நன்றாக இருந்தது.
அதென்ன கவி மன்றம்?
நீரோடை கவி மன்றம் (இலக்கிய நிகழ்வு) ஒரு அற்புத நிகழ்வாக மாற்றிய கவிஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி…
மக்கள் கருத்து
இன்றைய கவியரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது . கவியரங்கத்தில் கலந்துகொண்டு மிகச்சிறப்பாக கவிபாடிய தோழமைகளின் படைப்புகள் அருமையாக இருந்தது. நடுவர் ஐயா அவர்கள் மிகச்சிறப்பான தீர்ப்பளித்தார். இதுபோன்ற கவியரங்கம் மேலும் தொடவேண்டும் . நிகழ்விற்கு அடித்தளமிட்டு சிறப்பாக செயல்படுத்திய நீரோடை மகேஷ் அண்ணா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
– ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்
—————
அருமையான இலக்கிய நிகழ்வு. அற்புதமான தலைப்பு. நிறைவான தீர்ப்பு. நீரோடை மகேஷ் மற்றும் எங்கள் ஐயா மா. கோமகன் அவர்களுக்கும், கலந்துக்கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள் – நா தியாகராஜன் சென்னை
நீரோடையின் மகேஷ் அவர்களுக்கும், நடுவர்களின் நடுவர் எங்கள் ஐயா மா. கோமகன் அவர்களுக்கும், கவிஞர்களுக்கும், கதை சொல்லிகளுக்கும் மற்றும் பங்குகொண்ட அனைவர்க்கும் நன்றிகள். மீண்டும் (சி)(ச)ந்திப்போம்.
சபாஷ் சிறப்பான தீர்ப்பு
நீரோடை நிறுவனர் மகேஷ் ஐயா மற்றும் நடுவர் இருவரும் நன்றி
மேலும் பல நிகழ்வுகள் நடத்த அஸ்திவாரம்
கவியரங்கம் கவிதைகள் ஆரவாரம்
அனைவரின் முகம் காண அற்புதம்
படிக்கும் போது உச்சரிப்பு அட்டகாசம்
ராகவன் சென்னை
——————————–
நீரோடை இணையத்தின் புதுமை
கவிமன்றம் என்ற இனிமை
கலந்தோர் மனதில் குளுமை
கேட்டோர் செவிகளுக்கு
பெருமை
அடுத்தடுத்து தொடரும் இந்த மகிமை
– மா. கோமகன்
————————————–
சூப்பர்
சிறப்பான நிகழ்ச்சி
அருமையான ஏற்பாடு
ஆனால் பலருடைய கவிதைக்கு நடுவர் பின்னோட்டம் தரவில்லை
சிறப்பான வரிகள் எடுத்து சொல்லவில்லை
தீர்ப்பு சொல்லும் போதாவது இவற்றை விரிவாக சொல்லி முடித்து இருக்கலாம்
டக்கென முடித்து விட்டார்
வேகமாக போனது போல இருந்தது
சிறப்பான நீரோடை நிறுவனர் மகேஷ் ஐயா மற்றும் நடுவர் நடுவாண்மை பணி
பட்டிமன்றம் பாதி, கவியரங்கம் பாதி கலந்து செய்த கலவை தான் நீரோடை கவிமன்றம். அருமையான சிந்தனை.
கலந்து கொண்ட கவிஞர் பெருமக்கள் தாங்கள் எடுத்து கொண்ட தலைப்பில் நிறைய உவமைகளை உட்புகுத்தி ரசிக்கும்படியான கவிதைகளை படைத்துள்ளனர். அனைத்து கவிஞர்களுக்கும் சிறப்பு நன்றிகள்.
ஒவ்வொரு கவிஞரையும்
தனித்தன்மையோடு அழைத்தும், நடுநிலைமையோடு தீர்ப்பை வழங்கிய தோழர் மா.கோமகன் (எழுத்தாளர்) அவர்களுக்கும் நன்றிகள்.
கவிமன்றத்தை அற்புதமாக ஒருங்கிணைத்தும், நல்லதொரு இலக்கிய நிகழ்விற்கு சிறப்பான தலைப்பை தேர்வு செய்தமைக்கும் தோழர் நீரோடை மகேஷ் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும், மகிழ்வும்.
தொடர்ந்து பயணிப்போம்.
பேரன்புடன், ல.ச.பா, பெங்களூரு
————————————–
இன்றைய கவிமன்றம் மிகச்சிறப்பாக அமைந்தது. புதிய முயற்சியின் ஆவல்களை அளவுக்கு அதிகமாவே நிறைவேற்றிவிட்டது நீரோடை.
நடுவரின் முன்னுரை உட்பட, அனைவரின் கவிதைகளும் நிறைவாய் அமைந்தன. அனைவரும் ஏற்கும்படியான சிறப்பான தீர்ப்பு இன்னும் சிறப்பித்தது!!
எங்களுக்கு இப்படி ஒரு நல்வாய்ப்பை அமைத்ததற்கும், எங்கள் ஆவல்களை அதிகரிக்கும் வகையில் கவிமன்றத்தை துவங்கிய நீரோடை மகேஷ் அண்ணா அவர்களுக்கும் நன்றி!! – ஷகிலா தேவி பெங்களூரு
மறக்க முடியாத நிகழ்வு..
தொடர்ந்து நடத்துவோம்…