ரவா ரோல் சிப்ஸ் – செய்முறை

தற்பொழுது விற்பனையில் இருக்கும் சுவை மிகுந்த நொறுக்குகள் இரசாயனங்கள் கலந்து. இயற்க்கை முறையில் குரே போன்ற நொறுக்குகளை ஓரங்கட்டி சுவையில் ஒரு இடத்தை பிடிக்கும் இயற்கையான நொறுக்கு (சிப்ஸ்) செய்முறை பற்றி பார்ப்போம் – rava chips recipe tamil.

rava role chips recipe tamil

தேவையான பொருட்கள்

 • வெள்ளை ரவை – 1 கப்
 • உருளைக்கிழங்கு – 2 பெரியது
 • உப்பு – தேவையான அளவு
 • சீரகம் – 1/2 டீ ஸ்பூன்
 • மிளகாய் பொடி (Chilli Flakes) – 1 ஸ்பூன்
 • கொத்தமல்லி தழை – தேவையான அளவு

YouTube – https://youtu.be/XoNodqQekgY

செய்முறை – Rava Role Chips

இரண்டு பெரிய உருளைக்கிழங்கையும் நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். ரவைக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி தண்ணீர் சுண்டி பசை போலாகும் வரை கிளறவும். வேகவைத்த ரவையை எடுத்து நன்றாக ஆற வைத்துக் கொள்ளவேண்டும்.

அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கை துருவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவேண்டும். அதனுடன் சீரகம் அரை டீஸ்பூன் போதுமானது, மிளகாய்ப் பொடி (Chilli Flakes) ஒரு டீஸ்பூன் போதுமானது – rava chips recipe tamil.

அதனுடன் நறுக்கி வைத்த கொத்தமல்லித்தழை தேவையான அளவு சேர்த்துக் கொண்டு நன்றாக பிசைந்து உருளை போல உருட்டிக்கொண்டு  அதை துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான ரவா உருளை சிப்ஸ் தயாராகிவிடும்.

வலையொளி (YouTube) காணொளி

இந்த செய்முறை விளக்கத்தை காணொளியில் (YouTube Video) கண்டு பயன்பெற – https://youtu.be/XoNodqQekgY

You may also like...

3 Responses

 1. மாலதி நாராயணன் says:

  மிகவும் சுவையான சுலபமான ரெசிபி
  குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட்டனர்
  நன்றி

 2. Kasthuri says:

  Nalla irukku, more people like this snacks.

 3. Nithyalakshmi says:

  Yummy snacks