என் மின்மினி (கதை பாகம் – 8)

சென்ற வாரம் நேற்று அவன் அமர்ந்து வேலை செய்த இடத்தில் ஒரு பெண் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தாள் – en minmini thodar kadhai-8.

en minmini kathai paagam serial

அவனது நினைவுகளால் கலைஇழந்தவளுக்கு அன்றைய ஆபீஸ் வேலையும் டல் அடித்தது….
அங்கும் இங்கும் நடந்தபடியே அவ்வவ்போது தன் டிப்பார்ட்மெண்ட்யினை விட்டு வெளியே வந்தும் அவன் எங்கே என்று
தேடவே செய்தது அவளது மனம்…
மதிய உணவு இடைவேளையும் ஆனது.வெறுப்புடன்சாப்பிட்டு வரலாம் என்று கிளம்பி டைன்னிங் ஹாலுக்கு வந்தாள் பப்பு

டைன்னிங் ஹாலின் நுழைவுவாயிலில் வரவும் குழந்தை முகத்தில் நீரை வாரி இறைத்தது போலே ஒரே ஏக மகிழ்ச்சி… உள்ளே
அவர்கள் இருவரும் எப்போதும் அமர்ந்து சாப்பிடும் டேபிளில் அச்சு உட்கார்ந்து கொண்டிருந்தான்…

தன் சந்தோசத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் அவன் அருகில் வந்து ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருந்தாள் பப்பு…
குனிந்து ஒய்வு எடுத்து கொண்டிருந்தவன் நிமிர்ந்து பார்த்தபடி., ஹே பப்பு வந்துட்டீயா???
ஏன் நின்னுகிட்டே இருக்கே..
வா உட்கார்ந்து சாப்பிட ஆரம்பிக்கலாம் என்றான் அச்சு
அவன் பேச பேச அவனை காணாமல் தவித்த ஏக்கமும், அவன் மேல் இருந்த கோபமும் அவள் மனதில் இல்லாமலே
போனது… அதற்கு பதிலாக அவன் ஒரு குழந்தையை போல பேசி கொண்டிருந்ததை ரசித்தபடியே.,
உக்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தவாறே எங்க போயிட்டே… நேத்துல இருந்து உன்னை காணோம்… எங்கேயாவது போனா
சொல்லிட்டு போகலாம் இல்லையா என்று சற்று கொஞ்சலுடன் அவனை பார்த்து கேட்டாள் பப்பு

ஏன் என்ன ஆச்சு… எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை… அதான் நேத்து லீவ் என்றான் அச்சு…
ஓ…. சரி சரி சொல்லியிருக்கலாம்ல என்றவாறே உன்னோட உண்மையான பெயர்தான் என்ன???

உன்னை காணோம்னு உன் கேபின்ல வந்து அச்சு எங்கே அப்படினு கேட்டதுக்கு அப்படியெல்லாம் யாரும் இல்லைனு
சொல்லிட்டாங்க… ப்ளீஸ் உன் நிஜ பெயரை கொஞ்சம் சொல்லு என்றாள் பப்பு…
ஓகோ நீ அப்படி வரியா… என் பெயர் ஒரு பக்கம் இருக்கட்டும். உன்னோட உண்மையான பெயர் என்ன என்று பதிலுக்கு பப்புவை
பார்த்து கேட்டபடியே நமட்டுச்சிரிப்பு சிரித்தான் அச்சு…
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறே திருதிருவென விழித்து கொண்டே சிறிய புன்னகை பூத்தனர்… – en minmini thodar kadhai-8

பாகம் 9-ல் தொடரும்

You may also like...

4 Responses

  1. ராஜகுமாரி போருர் says:

    புன்னகை யின் காரணம் என்ன? காத்திருக்கிறோம் அடுத்த வாரம் வரை

  2. தி.வள்ளி says:

    உன்னை காணாமல் நானும் நானல்ல…அச்சுவை பார்த்த மகிழ்ச்சியில் பப்பு..உண்மை பெயர் என்ன? சிறு சஸ்பென்ஸ்சோடு இந்த. பாகத்தை முடித்திருக்கிறார் …ஆசிரியர்.

  3. R. Brinda says:

    அடுத்த வாரம் எப்போது வரும் என்று காக்க வைக்கிறார் ஆசிரியர்.

  4. கஸ்தூரி says:

    எப்போ உண்மையான பெயர் தெரியும்