உறவின் அருமை – சிறுகதை

சிறுகதை ஆசிரியர், சமையல் வல்லுநர், கவிஞர் தி.வள்ளி அவர்களின் எதார்த்தத்தை வெளிப்படுத்தும் சிறுகதை – uravin arumai sirukathai

uravin arumai sirukathai valli

பெண்ணை பார்த்து விட்டு, ராகவன் சந்தோஷமாக திரும்பிக் கொண்டிருந்தார் மனைவியுடன். அநேகமாக முரளிக்கு இந்த இடம் அமைந்துவிடும். பெண்ணும் அழகா, உயரமாய்., இருக்கா. அவனுக்குப் பொருத்தமா இருப்பா, என்ற யோசனையோடு வந்த
ராகவனை அதிர்ச்சிக்குள்ளாக்கினாள் பர்வதம் .

“ஏங்க!இந்தப்பெண் வேணாங்க.. வேற இடம் பார்ப்போம்.”

“ஏண்டி!பெண், பார்க்க அம்சமா, படிச்சவளா நல்லாத்தான் இருக்கா. என்ன குறை கண்ட அவகிட்ட? ” என்றார் ராகவன், அதிர்ச்சி மறையாமல்.

“பெண்ணுக்கு எந்த குறையும் இல்லைங்க.ஆனா அவங்க அம்மா சொன்னதைக் கேட்டீர்களா? நாலஞ்சு இடம் எங்க பெண்ணுக்கு வந்தா கூட உங்க வீடு தான் எங்க பொண்ணுக்கு புடிச்சிருக்கு. என்னா உங்க வீட்ல ரெண்டும் பையனா இருக்காங்க. பொம்பள புள்ள இல்ல. என் பொண்ணும் போற இடத்துல நாத்தனார் கூட மல்லு கட்ட வேண்டாம் பாருங்க என்றாள்”

“இவங்களுக்கு உறவுகளோட அருமை தெரியலங்க.அண்ணன் தங்கை பாசம்… பிறந்த பெண்ணுக்கு செய்யும் சீர்… எல்லாத்துலேயும் ஒரு நிறைவு இருக்குங்க. இது எல்லாத்துக்கும் மேல நாளைக்கு ஒரு குழந்தை பிறந்தால், அதற்கு அத்தை என்ற உறவு எவ்வளவு அருமையானது… முக்கியமானது…

இந்தப் பொண்ணும் அவ தாயைப்போல உறவுகள் வேண்டாம் நினைச்சா…

உறவுகளோடு அருமை தெரியாத இந்த இடம் நமக்கு கண்டிப்பா வேண்டாங்க…” என்றாள் தீர்மானமாக – uravin arumai sirukathai.

– தி.வள்ளி, திருநெல்வேலி

You may also like...

4 Responses

 1. லோகநாயகி.சு says:

  உறவின் அருமை கூட பிறந்தவர்கள் யாரும் இல்லாதவர்க்கு மட்டுமே புரியும் அக்கா…. கதையாக இருந்தாலும் உண்மையே கூறி உள்ளீர்கள்… அருமை

 2. S. V. Rangarajan says:

  உண்மை தான் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

 3. Priyaprabhu says:

  அருமை.. அருமை.. உண்மை..

 4. தி.வள்ளி says:

  மிக்க நன்றி சகோதரி