சலங்கை பணியாரம் செய்முறை

நமது பாரம்பரிய இனிப்புகளில் சலங்கை பணியாரம் முக்கியமான ஒன்று. சாதாரணமாக பணியாரம் செய்வதைப்போல இது மிக எளிதான செய்முறை – salangai paniyaram.

salangai paniyaram

தேவையான பொருட்கள்

அரிசி – 200 கிராம்
கடலை பருப்பு – 500 கிராம்
நாட்டு சர்க்கரை – 500 கிராம்
ஏலக்காய் – தேவையான அளவு
தேங்காய் துருவியது – தேவையான அளவு

https://youtu.be/db08q0q8jn4

செய்முறை

ஊறவைத்த அரிசியை தோசை மாவு பக்குவத்தில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
ஊற வைத்த கடலை பருப்பை வேக வைத்து  கிரைண்டரில் நாட்டு சர்க்கரை, தேங்காய் துருவி லேசாக வறுத்து மற்றும் ஏலக்காய்  சேர்த்து  லேசாக ஆட்டி பின்  சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
உருண்டைகளை அரிசி மாவில் இட்டு எடுத்து எண்ணெயில் பொரித்து எடுத்தால் சலங்கை பணியாரம் தயார்.
இன்னொருமுறையில் பணியாரக்கல்லில் எண்ணெய் விட்டு பொரித்தும் எடுக்கலாம் – salangai paniyaram.

வலையொளி (YouTube) காணொளி

இந்த செய்முறை விளக்கத்தை காணொளியில் (YouTube Video) கண்டு பயன்பெற – https://youtu.be/db08q0q8jn4

You may also like...

5 Responses

  1. R. Brinda says:

    மிக அருமை! செய்முறையும் எளிது; செய்து பார்க்கிறோம்!!

  2. ராஜகுமாரி போருர் says:

    சுவையோ சுவை

  3. S. Rajakumari chennai says:

    Paniyaram. Superb

  4. தி.வள்ளி says:

    மிக எளிதாக செய்யக்கூடியதாக சத்து நிறைந்ததாக உள்ளது. வெல்லம் சேர்ப்பதால் சுவையும் கூடுவதோடு இரும்புச் சத்தும் கிடைக்கும். பாரம்பரிய உணவின் மகிமையே தனிதான்

  5. Ushamuthuraman says:

    சலங்கை பணியாரம் படிக்கும் போதே நாவில் எச்சில் ஊறியது. செய்ய எளிமை உடலுக்கும் ஊட்டம் தரும் அருமையான ரெசிபி. பாராட்டுக்கள்